பிரம்மாண்ட செட்டில் நிறைவடைந்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு!

Share the post

பிரம்மாண்ட செட்டில் நிறைவடைந்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு!

சிவகார்த்திகேயன், சூரி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பூஜை நிகழ்வைத் தொடங்கி வைத்த ‘மேடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

Roll Time Studios சார்பில் தயாராகும் இப்படத்தை தயாரிப்பாளர் கலையரசு தயாரிக்கிறார். ரியோ ராஜ் மற்றும் சானியா அய்யப்பன் இணைந்து நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், மேலும் இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், மிர்ச்சி விஜய், சிங்கம்புலி, கார்த்திகா முரளிதரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

மக்களை கவரும் வகையிலும், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையிலும் இப்படம் உருவாகி வருகிறது. ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் விதத்தில் கதை, திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து படக்குழு இப்படத்தை உருவாக்கி வருகிறது.

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது.

இப்படத்தின் மூலம் கார்த்திகேயன் அறிமுக இயக்குநராக களமிறங்குகிறார். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். கிஷோர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

‘மேடி’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் Roll Time Studios சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *