
பள்ளிப் பருவத் தோழர்கள் கார்த்தி , சுப்பு . இவர்கள் வளர்ந்து ஊருக்குள் ரௌடிகளாக சுற்றித் திரிகிறார்கள்.
என்னதான் கார்த்தி சுப்புவின் நண்பனாக இருந்தாலும் சுப்புவின் அப்பா கார்த்தியை வேறொரு சாதி ஆளாகத்தான் பார்க்கிறார். ஏனோ அது ஒரு சாபக்கேடு
.சுப்புவின் அம்மாவையும் ,தங்கையையும் அவர்தான் கொலை செய்துள்ளார். சாதாரண கொலை அல்ல ஆணவக் கொலை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சுப்புவின் அண்ணன் டோரதியை திருமணம் செய்து கொள்கிறார். வீட்டுக்கே அழைத்து வருகிறார். அவருடன் சுப்பு பழக ஆரம்பிக்கிறார். ஒருநாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இது தற்கொலை அல்ல கொலை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. இந்தக் கொலைக்கு காரணம் சுப்புவின் அப்பாவும் , அண்ணனும் தான். கோபம் அடைகிறார் சுப்பு.
ஒரே வீட்டில் மூன்று கொலைகள். இந்தக் கொலையை செய்தவர்கள் வெளியாட்கள் இல்லை. அப்படியென்றால் இந்தக் கொலைகளை செய்தது குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் தான்.
ஒரு கட்டத்தில் தான் ஆண் மகன் இல்லை. ஆணுக்குரிய தன்மைக் குறைந்து பெண்ணுக்கு உண்டான தன்மை மெல்ல மெல்ல அதிகரித்து தான் ஒரு திருநங்கையாக மாறிவிட்டதை சுப்பு வெளிப்படுத்துகிறார்.
தன் குடும்பத்தில் ஓர் ஆண்மகன் திருநங்கையாக மாறினால் யார் தான் ஒப்புக் கொள்வார்கள் ? குடும்ப மானம் சந்திச் சிரித்தால் என்னவாவது ?
தன் குடும்பத்தில் ஓர் ஆண்மகன் திருநங்கையாக மாறினால் யார் தான் ஒப்புக் கொள்வார்கள் ? குடும்ப மானம் சந்திச் சிரித்தால் என்னவாவது ?
ஏற்கனவே ஆணவக் கொலை . பற்றாக் குறைக்கு இன்னொரு கொலைக்கு வழி வகுப்பதா ? இது என்ன நாடா ? சுடுகாடா ? கேட்கத் தோன்றுகிறது.
கார்த்தியிடம் சொல்லி சுப்புவை கொலை செய்ய தூண்டுகின்றனர். தூண்டுவது யார் தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
திருநங்கையாக மாறிய சுப்புவை கார்த்தி ஏற்றுக் கொண்டாரா ? இல்லை கொலை செய்து விடுகிறாரா ? அதன் பின் என்ன என்ன சம்பவங்கள் நடந்தன என்பதே படத்தின் மீதிக் கதை .
திரை நட்சத்திரங்கள் :-
கார்த்தி வேடத்தில் ரிஷிகாந்த் . மனிதனாக இந்த பூமியில் வந்து பிறந்தாலும் சாதி என்னும் காட்டுத் தீயை நாட்டுக்குள் விட்டால் நாடு என்னாகும் ?
அந்த அவஸ்த்தை ரிஷிகாந்த்க்கு . என்ன செய்வது ? தாங்கிக் கொள்ளதான் வேண்டும்.
திருநங்கையாக மாறிய சனந்த் . ஓர் ஆண் ஆணுக்குரிய தனித் தன்மை குறைந்து திருநங்கையாக மாறுவது எவ்வளவு பெரிய கொடுமை. இவரை கொலை செய்ய ரிஷிகாந்த்தை தூண்டுவது ! அவர் நிறைவேற்றினாரா ? படத்தைப் பாருங்கள் அப்போது புரியும்.
திருநங்கையாக மாறிய தனது நண்பனை ஏற்க மறுப்பதும் , அவனை அருவருப்பாக பார்க்கும் காட்சிகளில் இருந்து நண்பனை எப்படித் தீர்த்துக் கட்டுவது ? என தவிக்கும் காட்சிகள் வரை சிறப்பாக நடித்துள்ளார் ரிஷிகாந்த்.
சனந்த் :- திருநங்கையாக மாறிய பின் தனது நடிப்பால் கவனத்தை கவர்ந்து இழுக்கிறார். தன் நண்பனோடு அவர் செல்லும் பயணம். அதில் இருவருக்குள் ஏற்படும் மன மாற்றங்கள் அனைத்தும் சிறப்பானவையே !
திரை நட்சத்திரப் பட்டாளங்கள் :-
கீர்த்தி சுரேஷ் , ரிஷிகாந்த் , சனந்த் , ராமச்சந்திரன் துரைராஜ் , கஜராஜ் , ஜீவா சுப்பிரமணியன் , முத்துக்குமார்
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- கார்த்திக் சுப்புராஜ்
இவர் மிகச் சிறந்த இயக்குநர். இவர் எடுத்துக் கொண்ட படம் உணர்ச்சி பூர்வமான கதைக் களத்தை நேர்த்தியாக திரைக்கதை அமைத்து அசத்தியிருக்கிறார். ஆறறிவு படைத்த மனிதர்கள் எவ்வளவு கொடூரமாக மிருகமாக நடந்து கொள்கிறார்கள். என்பதனை தன்னுடைய படத்தில் காட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷ்ஷின் மரணம் , திருநங்கையாக மாறும் சனந்த் . ரிஷிகாந்தின் தவிப்பு என பல இடங்களில் பல விஷயங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இசை :- இளையராஜா.
இவர் மெட்டில் உருவான பாடல்கள் அருமை. அதிலும் இவர் எழுதிய பாடல் மிக அருமை . பின்னணி இசையில் இவரை விஞ்ச யாருமில்லை.
ஒளிப்பதிவாளர் :- திரு.
படத்திற்கு உயிரூட்டுவது ஒளிப்பதிவே ! இயக்குநரின் எண்ணங்களை செயல்வடிவில் கொண்டு வந்து மனக் கண் முன் நிறுத்துகின்றார்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்கம் :- கார்த்திக் சுப்புராஜ்
கதை :- கார்த்திக் சுப்புராஜ் , சரவணன் சந்திரன்.
தயாரிப்பு :- ஜோதி தேஷ்பாண்டே , குனீத் பங்கு கபூர் , அச்சின் ஜெயின் .
இசை :- இளையராஜா
ஒளிப்பதிவாளர் :- திரு என்கிற திருநாவுக்கரசு
எடிட்டர் :- கணேஷ் சிவா
சண்டைக் காட்சி :- தினேஷ் சுப்பராயன்
நடனம் :- எம்.ஷெரிப்
ஒலிப்பதிவு :- அழகிய கூத்தன் ,ஜி.சுரேன்.
டோரதி என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் உண்மைச் சம்பவங்களை திரையில் காட்டி நாட்டில் நடக்கும் அவலங்களைத் தோல் உரித்துக் காட்டியிருக்கின்றார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். படத்தினை பார்க்கலாம். எங்களின் பத்திரிகை குழு ஆய்வு செய்த போது அது நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. மீண்டும் வேறொரு திரை விமர்சனத்தில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் :- கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்