லெனின் பாண்டியன்திரை விமர்சனம் :-

Share the post

லெனின் பாண்டியன் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
ஒரு வரிக் கதை :-
மணல் கடத்தும் கும்பல் ஒன்று இருக்க அந்தக் கும்பலுக்கு அரசியல் பதவி வேண்டும் என்று அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்கிறது.

வயதான பெரியவர் ஒருவர் மணல் கொள்ளையர் கும்பலை எதிர்த்து வழக்கு ஒன்று தொடுக்கிறார். அந்த வழக்கில் அவர் வெற்றிப் பெறுகிறாறா ? என்பது தான் கதை.

இடதுசாரி சிந்தனையுள்ள காவலர் ஒருவர் அலுவல் நேரத்தில் இறந்து விடுகிறார். அந்த வேலைக்கு அவரது மகன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவருக்கு கிடைக்கிறது. குடிகாரன் ஒருவனால் அடித்து சாக்கடையில் தள்ளப்படும் மாறவர்மன் சுந்தரப் பாண்டியனுக்குக் காவல் நிலையத்தில் வரும் அதிகாரிகளுக்கும் மற்ற காவலர்களுக்கும் சல்யூட் அடிக்க வேண்டும் என்ற கட்டளை மேல் அலுவலர் இடுகிறார். அவமானத்தால் கூனி குறுகி போகிறார்.

துரைராசு என்னும் முதியவர் ஆசையாக ஆட்டுக் குட்டியை வளர்த்து வருகிறார். காலத்தின் கொடுமை மணல் கொள்ளையர் அந்த ஆட்டை இலாரி ஏற்றிக் கொன்று விடுகின்றனர். இவர்கள் மீது புகார் கொடுக்க அந்த முதியவர் காவல் துறைக்குச் செல்கிறார். காவல் அதிகாரி புகாரை ஏற்க மறுக்கிறார். வார்த்தைகளை விடுகிறார். திருப்பிக் கேட்டால் என்ன செய்வீர்கள் ? என அந்த முதியவர் கேட்க அந்தக் காவல் அதிகாரி நயபுடைக்கின்றார்

அந்த முதியவர் துரைராசு நீதிமன்றத்திற்குச் செல்ல மாறவர்மன் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கின்றார்.

திரை நட்சத்திரங்கள் :-
மாறவர்மன் சுந்தரபாண்டியன் வேடத்தில் புதுமுகம் தர்ஷன் கணேசன். நடிகர் ராம்குமாரின் மகன் சிவாஜி கணேசனின் பெயரன்.பயந்த சுபாவம் கொண்ட கதாபாத்திரம் . பொருத்தமாக இருக்க நடிப்பில் முயற்சி. அதில் வெற்றியும் பெறுகிறார்

தர்ஷன் கணேசன் தன்னுடைய அழுத்தமான நடிப்பால் முதல் படத்திலேயே வெற்றியும் கண்டுள்ளார். சாதாரண காவலாரக பொறுப்பு ஏற்கும் இவர் படிப்படியாக முன்னேறுகிறார்.

மாறவர்மனின் மனைவி பிரியாவாக ஷ்ரித்தா ராவ் நடித்துள்ளார். காதல் காட்சியில் இளமைத் துள்ளுகிறது.

துணை நட்சத்திரங்கள் :-
கங்கையமரன் பன்முகம் திறன் கொண்டவர். முதன் முறையாக ஓர் அழுத்தமான கதாபாத்திரம் ஏற்று அதில் தனி முத்திரைப் பதித்திருக்கிறார். துரைராசு என்னும் கதாபாத்திரத்தில் வலம் வரும் கங்கையமரன் ஓர் இடத்தில் நம்மை அழ வைக்கின்றார். எந்த இடம் தெரியுமா ? ஆட்டுக் குட்டியை அநியாயமாக கொன்ற கொள்ளைக் கூட்டத்தினர் அதாவது மணல் கொள்ளையர் மீது புகார் கொடுக்க காவல் துறைக்கு சென்று விஷயத்தைச் சொன்ன மாத்திரத்தில் காவல் அதிகாரி போஸ்வெங்கட் வசைபாடுவதும். அதையே திருப்பிக் கேட்டால் என்று சொன்ன கங்கையமரனை அடித்துக் கொடுமைப் படுத்தும் காட்சி கதறி அழும் கங்கயமரனை பார்க்கும் போது கண்ணீர் நம்மையும் அறியாமல் வழிந்தோடுவதை பார்க்க நேரும் காட்சி மனத்தை உருக வைக்கிறது.

ரோஜா :- ஒரு காலத்தில் கதாநாயகி அதன் பிறகு குணச்சித்திர நடிகை , அக்கா , அம்மா இப்படி வயதுக்கு ஏற்ப கதாப் பாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதில் தனி முத்திரை பதித்து மக்கள் மனத்தை தொடுகிறார். இந்தப் படத்தில் கங்கையமரனின் மனைவியாக நடித்துள்ளார். பிள்ளைப் பேறு இல்லாத தம்பதியராக வாழ்ந்து இருக்கிறார்

மழையில் முட்டைக் காளானைச் சேகரிக்கும் காட்சியோடு படம் முடிகிறது.இந்த முதுமை தம்பதியர்களுக்குள் ஓர் அழகிய காதல் விரசம் இல்லாமல் காட்டும் முதுமைக் காதல். அதனை வசனங்களில் இயக்குநர் கடந்து விட்டாலும் ரோஜாவின் கண்களில் அதைக் காண முடிகிறது.

ஜார்ஜ் மரியான் :-
நீதிபதி பீமாராவ் கொண்ணமுத்து வேடத்தில் நடித்திருக்கிறார். நீதிமன்றக் காட்சி ஒன்று பேசியே ஆக வேண்டும். காவல்துறை அதிகாரியாக போஸ் வெங்கட் , சாதாரண மனிதராக கங்கையமரன் , நீதிபதியாக ஜார்ஜ் மரியான் மூவரும் கலந்து கொள்ளும் காட்சியில் நீதிபதி ஜார்ஜ் மரியான் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆட்டம் போடும் காவல் துறையினருக்கு எச்சரிக்கை விடுப்பதும் நியாயத்தை நிலை நாட்ட முனைவதும் தியேட்டரில் கரவொலி தியேட்டரையே அதிர வைக்கிறது. ஜார்ஜ் மரியான் பிரமாதமாக நடித்து படத்திற்கு சிறப்பை சேர்த்திருப்பது தனி ரகமே ! பாராட்டுவோம் !

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் D.D.பாலசந்திரன்
கதையைத் தேர்ந்தெடுத்த இவர் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டார். படக் காட்சிகள் கோர்வையாக இல்லை. ” உன்னைத் துப்பாக்கியை தொடவிட மாட்டேன் என்று சபதம் எடுத்தவரே மாறனுக்கு துப்பாக்கியை எடுத்துக் கொடுக்கிறார். அது பெரிய மாஸ்ஸான காட்சி தான் அதை சுவாரசியமான முறையில் சொல்லத் தவறிவிட்டார்.

படத்தின் முக்கிய பலமாக அதன் சமூகப் பின்னணி அமைகிறது. மணல் கொள்ளை அதற்கு துணை போகும் அரசு அலுவலர்கள் . சாதாரண மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை களை தன் படத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார் இப் படத்தின் இயக்குநர்.

ஒளிப்பதிவாளர் :-
கிராமத்து சூழலை இயல்பாக படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

இசை :- இளையராஜா வழக்கம் போல் தன் தனித் திறனை காட்டியிருக்கின்றார் . பாடலும் எழுதி இருக்கின்றார். பின்னணி இசை இந்தப் படத்திற்கு பக்க பலம்

நடிப்பு :- தர்ஷன் கணேசன் , ஷ்ரிதா ராவ் , அர்ச்சனா ரவிச்சந்திரன் , ரோஜா , கங்கையமரன் , ஜார்ஜ் மரியான் , ஆடுகளம் நரேன் , யுகேந்திரன் , போஸ்வெங்கட் ,
தயாரிப்பு :- செந்தில் தியாகராஜன் , அர்ஜூன் தியாகராஜன் .
இணைத் தயாரிப்பு :- ஜி.சரவணன் , சாய் சித்தார்த்
கலை :- அதுரி ஜெயகுமார்
படத்தொகுப்பு :- நகரின் ராமச்சந்திரன்
நடனம் :- விஜி சதீஷ்
சண்டைப்பயிற்சி :- தளபதி தினேஷ்
பாடல்கள் :- இளையராஜா , கார்த்திக் நேத்தா
இயக்குநர் :- D.D.பாலசந்திரன்.

லெனின் பாண்டியன் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் ஆய்வு செய்த போது தென்படுவது மணல் கொள்ளை . இவர்களுக்கு எதிராக போராடும் பொறுப்பான காவலர். குடும்பத்தின் வாழ்க்கையோடு இணைத்து சொல்லியிருக்கும் சமூகப் படம். சமூக அக்கறை கொண்ட படம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி உள்ளது. மறுமுறை சந்திப்போம் உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் , ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *