தி கிராண்ட் மாஸ்டர் என்னும் திரைப்படத்தின் விமர்சனம்

Share the post

தி கிராண்ட் மாஸ்டர் என்னும் திரைப்படத்தின் விமர்சனம் :-
கதைக் கரு :- விளையாட்டில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதைக் கருவாக முன் நிறுத்தி கதையை நகர்த்தி செல்கிறது தி கிராண்ட் மாஸ்டர்.

கதையின் போக்கு :-
திறமை இருந்தால் இந்த அகிலத்தையே வெல்லலாம். படிப்பாக இருந்தாலும் சரி , விளையாட்டாக இருந்தாலும் சரி , வேலையாக இருந்தாலும் சரி . எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் . என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்த்த நினைக்கும் இயக்குநர் விளையாட்டு ஒன்றையே மையப் படுத்தி தன்னுடைய கைவண்ணத்தைக் காட்டியிருக்கின்றார் இந்தப் படத்தின் இயக்குநர்.

விளையாட்டில் ஏழை , பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை. அங்கே திறமை ஒன்றே போதும் . வெற்றிப் பெற்று விடலாம். திறமை இருந்தால் இந்த உலகமே உன்னை திரும்பிப் பார்க்கும் என்ற கருத்தை ஆழமாக பதிவிட்டுள்ளார் இந்தப் படத்தின் இயக்குநர்.

தூய்மைப் பணியாள் வேலை செய்யும் நாயகி அபர்ணதி . வறுமை என்னும் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் அபாக்கியவதி. வாழ வேண்டிய வயதில் தன் கணவனை இழந்து தன்னுடைய ஒரே மகனை வழக்குரைஞராக ஆக்க வேண்டும் என்ற ஆக்கப் பூர்வமான சிந்தனையோடு அரசுப் பள்ளி ஒன்றில் சேர்த்து படிக்க வைக்கின்றார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமை என்ற நெருப்பு கனன்று இன்று வரை அப்படியே இருக்கும் பட்சத்தில் அந்தச் சிறுவயதில் பள்ளியில் தீண்டாமை என்னும் நரக வேதனையை அஸ்வினும் அனுபவிக்கின்றான்.

படிப்பை விட சதுரங்க ( chess ) விளையாட்டில் கவனம் செலுத்துகிறான் அஸ்வின். ஆதிக்கச் சாதி வெறிப்பிடித்த கும்பல் ஒன்று அவன் திறமையை முடக்க நினைக்கிறது. ஒரு அம்மாவாக இருந்து அந்த மகனின் திறமையை எப்படி இந்த உலகிற்கு கொண்டு வருகிறார் அபர்ணதி. அவரின் கணவர் எப்படி இறந்தார் என்பதும் படத்தின் மீதிக் கதை .

சிறுவன் அஸ்வின் :- தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள் வாங்கி இயக்குநர் சொல்லிக் கொடுத்ததை உள் வாங்கி மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார். பாராட்டலாமே !

துணை நட்சத்திரங்கள் :- வெற்றிச் செழியன் , சுரேஷ்மேனன் , தமிழரசி , அன்பு நடித்து இருக்கின்றார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- அர்ஜூன் ரவி :- தனக்கு கொடுத்தப் பணியை கனகச்சிதமாகச் செய்துள்ளார். தூய்மைப் பணியாளர்கள் இருப்பிடத்தை அச்சுமாறாமல் காட்சிமைப்
படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் :- தினேஷ் ஆண்டனி :-
இவர் இசையில் உருவான பாடல்கள் கவனத்தினைக் கவரவில்லை. இசையில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

படத்தொகுப்பாளர் :- ரஞ்சித் சி.கே தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக இவர் செய்து இருக்கிறார்.

இயக்குநர் :- வெற்றிச் செழியன்.
சமூகத்தின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் . ஒரு நல்ல கதையை தெரிவு செய்து திரைக்கு ஏற்றக் கதையாக மாற்றி வசனத்தையும் தகுந்தாற் போல் எழுதி இயக்கி இருக்கின்றார்.

கருத்தொன்று பொதுவில் வைக்கும் போது படத்தைப் பொறுத்தவரை சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும். கருத்தை அப்படியே கருத்தாக சொல்லாமல் அதில் கொஞ்சம் சினிமாத் தனம் வேண்டும். அப்பொழுதுதான் பார்வையாளர்கள் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்.

நடிகர்கள் :-
அபர்ணதி , லிங்கேஷ் , வெற்றிசெழியன் , சுரேஷ்மேனன் , அஸ்வின் , தமிழரசி , அன்பு மற்றும் பலர்

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
எழுத்து & இயக்கம் வெற்றிச் செழியன்
தயாரிப்பு :- வேலாயுதம்
இசை :- தினேஷ் ஆண்டனி
ஒளிப்பதிவு :- அர்ஜூன் ரவி படத்தொகுப்பு :- ரஞ்சித் சி.கே
கலை இயக்குநர் :- ராகவன் சஞ்சீவி
சண்டைக்காட்சி :- ராக் பிரபு

தி கிராண்ட் மாஸ்டர் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் விளையாட்டில் ஏற்றத் தாழ்வு இல்லை திறமையே மூலதனம் என்பதைக் கருவாக எடுத்து கதையை உருவாக்கி இயக்கி இருக்கிறார் இப் படத்தின் இயக்குநர். வழக்கம் போல தீண்டாமைப் பற்றி இந்தப் படத்தில் மற்ற இயக்குநர்கள் சொன்னதை இவரும் கையாண்டுள்ளார். இதனால் வரும் பின் விளைவை தன் படத்தில் சொல்லி இருக்கிறார் இப் படத்தின் இயக்குநர். படம் பார்க்கலாம். எங்களின் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று ஆய்வு செய்து நல்லதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. மீண்டும் அடுத்த திரைவிமர்சனம் ஒன்றில் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் , ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *