Cold call ( கோல்ட் கால் ) திரைவிமர்சனம் :-

Share the post

Cold call ( கோல்ட் கால் ) என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
விற்பனையாளர் பணி சார்ந்த மொழியாக கோல்ட் கால் ( Cold call ) என்ற வார்த்தைக் கடைப்பிடிக்கப்படுகிறது. கதை விற்பனையாளர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தியது என்பதால் இந்தத் தலைப்பை தெரிவு செய்து இந்தப் படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

பெங்களூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் விற்பனையாளர் பணியில் தமிழகம் , கர்நாடகம் , ஆந்திரப் பிரதேசம் , கேரளா ஆகிய மாநிலங்களைச் சார்ந்த இளைஞர்கள் தான் இக் கதையின் நாயகர்கள் என்பதால் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்த இளைஞர்களாக தெரிவு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்த நால்வரும் ஒவ்வொரு வகையில் இந்தப் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

சித்துமூலிமணி , சந்தோஷ் , ஸ்ரீவைஷ்ணவ் , கிருஷ்ணவிஜய் இந்த நால்வர் தான் அந்த விற்பனையாளர்கள். பணியில் சேர்ந்த இவர்கள் கொஞ்ச நாளில் நண்பர்களாகிறார்கள்.

விற்பனையாளர் பணி கடினமானது .
இருப்பினும் அந்த நால்வரும் அந்தப் பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு உழைக்க ஆரம்பித்தார்கள். அந்த நிறுவனம் தான் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காததால் உயர் அதிகாரியின் கோபத்துக்கு ஆளாகிறார்கள்.

இதற்கிடையில் தொழில் அதிபர் ஒருவரின் மகன் கடத்தப்படுகிறான். கடத்தப்பட்ட கடத்தல் குற்றத்தில் காவல் துறையினருக்கு இந்த நால்வர் மேல் சந்தேகம் வலுக்கிறது. அதனால் ஒட்டு மொத்த காவல் துறையும் இந்த நால்வரைத் தேடுகிறது. இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக தங்களின் விற்பனையாளர் பணி மற்றும் அதற்கான பயிற்சியைப் பயன்படுத்தி தங்கள் மீது விழுந்த பழியை போக்கவும் , கடத்தப்பட்ட சிறுவனைக் காப்பாற்றவும் முடிவு செய்கிறார்கள் இந்த நால்வரும்.

அதில் வெற்றிப் பெற்றார்களா ? இல்லையா ? என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் இந்த ” கோல்ட் கால் ” என்னும் திரைப்படம்.

திரை நட்சத்திரங்கள் :-
சித்து மூலிமணி , சந்தோஷ் , ஸ்ரீ வைஷ்ணவ் , கிருஷ்ணா. இந்த நால்வரும் இந்தப் படத்தின் கதாநாயகர்கள். தமிழுக்கு இவர்கள் புதியவர்கள். இருப்பினும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தினை ஏற்று தொய்வில்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கதை நாயகிகளாக நடித்திருக்கும் அமிதா ரங்கநாதா , நிஷா ஹெக்டே , மேலிலிட்டி , கீர்த்தனா புல்கி ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

நிறுவனத்தின் மேலாளர் என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவரும் , விற்பனையாளர்களின் பயிற்சியாளர் என்னும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவரும் தத்தம் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இயக்குநர் :- தம்பிதுரை
இவர் நல்ல கதையை தேர்ந்தெடுத்து தன்னுடைய முயற்சியால் நல்ல படத்தினை எடுத்து சமுதாய உணர்வை வெளிப்படுத்தி உள்ளார். பாராட்டலாமே !

Cold call ( கோல்ட் கால் ) என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் ஆய்ந்த போது எம் மதமும் சம்மதமே ! எந் நாட்டவரும் நம் நாட்டவரே ! தேசிய ஒற்றுமை உணர்வை ஊட்டும் வகையில் பிற மாநிலங்களைச் சேர்ந்த நால்வரை தெரிவு செய்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை. மொழியால் வேறு பட்டாலும் நாம் ஒற்றுமை உணர்வால் இந்தியரே ! கடத்தல் நாட்டில் பல பல விதமாக நடந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். எங்கள் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி வாழ்த்துகிறது. மீண்டும் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *