
தி டார்க் ஹெவன் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
எப்பொழுதும் மறைவிடத்திற்கு ஒரு தனி மதிப்பு உண்டு. அது தனி மனிதனின் வாழ்க்கையானாலும் சரி பொது நல வாழ்வானாலும் சரி இந்த இரண்டிற்கும் இது பொருந்தும்.
கதைக்கரு :-
கதைக் கரு
ஒன்றாக இருந்தால் சிறப்பு .அதைச் சுற்றிக் கதைப் பின்னல் , கதா பாத்திரம் , சூழல் , நிகழும் இடம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இருந்தால் கதையின் ஓட்டம் , போக்கு சீராக இருக்கும்.
கதைக் களன் :-
மர்ம புத்தகம் , கதையை விவரிக்கும் நூலகர் , வன தெய்வத்தின் சாபம் , மன நலம் பாதிக்கப்பட்ட கொலையாளி இப்படி பல்வேறு பரிமாணங்கள் இதில் இடம் பெறுவதால் கதையின் இறுதிக் காட்சி எதை நோக்கிச் செல்கிறது என்பது குறித்து சந்தேகங்கள் எழத்தான் செய்கின்றன. ஏதாவது ஒன்றை கதைக் கருவாக எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி திரை மொழியில் சொன்னால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கும்.
மர்மமான புத்தகம் ஒன்று . அதன் பக்கங்களை புரட்டினால் எவருக்கும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும். அதில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வி எழத் தோன்றும்.
அந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினால் எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பதை மிகத் துள்ளியமாக கணித்திருக்கும் நிகழ்வினைக் கேட்டறிந்தால் மனம் பயத்தால் பதறும். சம்பந்தப்பட்ட நபர்களின் இறப்புக் குறித்த விவரங்கள் , அது யாரால் நிகழும் ? எப்பொழுது நிகழும் ? என்ற விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
மன நலம் பாதிக்கப்பட்ட கொலையாளி இருப்பதற்கான சாத்தியக் கூறு . இந்தக் கொலைக்கான பின்னணி என்ன ? இதற்குப் பின்னால் இருப்பவர் யார் ? மெக்கரை கிராமத்தில் உண்மையில் நடந்தது என்ன ? அந்தக் கிராமத்தின் சாபத்தில் ஏதேனும் உண்மை இருக்கிறதா ? இந்தக் கேள்விகளே ” தி டார்க் ஹெவன் ” கதையின் மைய கருவாக அமைகின்றன.
முதல் பாதியில் பதற்றமும் இரண்டாம் பாதியில் குழப்பமும் கொண்ட இப் படத்தில் கதையின் ஓட்டம் பார்ப்பவர் இருக்கையின் நுனியில் அமர வைக்கும் உச்சக் கட்டத்தையும் கொண்ட ஒரு சுவாரஸ்யமான குற்றத் திரில்லர் படமாகும்.
பல காட்சிகளை விறு விறுப்பாகவும் , பரபரப்பை அதிகரிக்கவும் வைக்கிறது இப் படம்.
திரைக் கலைஞர்கள் :-
சித்து சித் , தர்ஷிகா , ரித்விகா , வேலா ராமமூர்த்தி , நிழல்கள் ரவி , ஜெயக் குமார் , ஜானகிராமன் , அருள் டி.சங்கர் , பிரதீப் , அலெக்ஸ் மற்றும் தோனி தயாள்.
தயாரிப்பு :-
கோதை எண்டர்டெயின்மெண்ட்
எம்.எஸ்.ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி
எழுத்து& இயக்கம்
பாலாஜி
தி டார்க் ஹெவன் திரைப்படத்தின் திரை விமர்சனம் திகில் காட்சிகள் படத்தினை ஆக்கிரமிப்பு செய்தாலும் ஒரே கதைக் கருவை மையமாக வைத்து படத்தை எடுத்திருக்கலாம். கதைக்கு பஞ்சம் இல்லை நாட்டில் ! எழுததான் ஆள் இல்லை. எங்கள் பத்திரிகை குழு நடுநிலை நின்று நல்லதொரு கருத்தினை எடுத்துக் கூறும். மீண்டும் அடுத்த திரை விமர்சனத்தில் சந்திப்போம் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்,ராஜேஷ் ஓகே டேக்