
” என்ன விலை ? ” என்னும் திரைப்படத்தின் விமர்சனம் :-
உண்மையே உன் விலை என்ன ?
நேர்மை எங்கே வாயடைத்து நிற்கிறது ? நேர்மை எப்போது உறங்கும் ? இத்தனைக் கேள்விக்கும் விடை தருகிறது இந்தப் படம்.
என்ன விலை ? ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
ஏன் ? எதற்கு ? எப்படி ? இந்த மூன்று வினாக்களை ஒவ்வொரு மனிதனும் கேட்க ஆரம்பித்தால் இந்த நாடும் உருப்படும். மக்களும் சுகப்படுவார்கள். இதற்குள் ஒன்று குறைந்தாலும் மனிதன் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க முடியாது. முட்டுக்கட்டைப் போடும் நபர்களை அடையாளங்கண்டு அவர்களின் உள்ளத்தில் ஒளிந்திருக்கும் வன்மத்தை தூக்கி எறிந்தால் இந்த நாடு வல்லரசு நாடாக மாறும்.
உண்மையே உன் விலை என்ன ?
நேர்மை எங்கே வாயடைத்து நிற்கிறது ? நேர்மை உறங்கும் நேரம் எது ? இத்தனைக் கேள்விக்கும் விடை தருகிறது இந்தப் படம் .
கதைக்கரு :- நேர்மையாக வாழும் மீனவரின் வாழ்வாதாரத்தை சீர்க்குலைக்கும் இச் சமூகத்திற்கு சாட்டைக் கொடுப்பதே இக் கதையின் மையக் கரு.
கதைப்பின்னல் :-
நேர்வழியில் பயணிக்கும் கதை நாயகன் கருணாஸ்ஸுக்கு பழமையான தங்க ஆபரணம் கிடைக்கிறது. அதனை தான் மட்டுமே வைத்துக் கொள்ளாமல் காவல் நிலையத்தில் கொண்டு போய் சேர்க்கிறார் . அதன் பின் விளைவு திருட்டுப் பட்டம் கட்டி குற்றச் சாட்டுக்கு ஆளாகிறார். நல்ல பாம்பு சகவாசமும் போலீஸ் காரன் சகவாசமும் ஒன்று தான். காமாலைக் கண்டவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தான் அதைப்போலத் தான் போலீஸ்காரரின் சந்தேகப் பார்வையும். கதைநாயகன் மட்டும் விதி விலக்கா என்ன ?
கதையும் போக்கும் :-
வலுவான கதை. ஆழ்ந்த கருத்து. மக்கள் மத்தியில் கதையும் , கருத்தும் கொண்டு போய் சேர்க்கும் இதில் ஐயமில்லை .
கதைக்களம் :-
புண்ணிய பூமி இராமேஸ்வரம். ஒருமுறை இராமேஸ்வரம் போய் வந்தால் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். அந்த ஊர் மக்கள் புண்ணியத்தை சம்பாதித்தவர்கள். இதன் பின்னணியில் முகம் அறியாத ஓர் உலகத்தை கதைக்களனாக எடுத்துக் கொண்டு சாதாரண ஒருமனிதன் வாழ்வில் எதிர்பாராத விதமாக நிகழும் ஓர் சம்பவம் எந்தச் சூழ்நிலையில் பெரும் பிரச்சினையாக மாறுகிறது. அந்த தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்ல அவன் குடும்பத்தையும் சேர்த்தே இந்தச் சமூகம் எப்படி பழிவாங்குகிறது ? அதிலிருந்து மீள்வது எப்படி என்பதனை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்தப் படம்.
மீனவ சமுதாயத்தின் விடி வெள்ளி :-
கொஞ்சம் கொஞ்சமாக மீனவ சமுதாயத்தை அவர்களின் நல்லெண்ணத்தினை மக்களுக்கு அடையாளம் காட்டும் பட வரிசையில் ” என்ன விலை ? ” என்ற படமும் சேர்கிறது . அந்த வகையில் தவசி என்ற கதாபாத்திரத்தில் மீனவராக அறிமுகம் ஆகும் கருணாஸ் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார். இல்லை இல்லை வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்
தவசியின் வாழ்வாதாரம் :-
முன்னோர்களுக்கு திதிக் கொடுக்க போகும் மக்கள் . அவர்கள் திதிக் கொடுத்துவிட்டு வீசும் சில்லரைக் காசுகளை நீருக்கு அடியில் சென்று சேகரிக்கும் தவசி. அந்தக் காசைக் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டுகின்றார்.
அப்படிப் பட்ட சூழ்நிலையில் தவசி கையில் பழமையான தங்க ஆபரணம் கிடைக்க ! அதனை காவல் நிலையத்தில் கொண்டு சேர்க்க ! காவல் துறையினரே இவர் மேல் திருட்டு பழியை சுமத்த ! இதனால் இவரையும் இவரது குடும்பத்தையும் இச் சமூகம் பழிவாங்கத் துடிக்க ! அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பதை தன்னுடைய வலுவான கதையக் கொண்டு ; அதற்கு சரியான திரைக்கதையை அமைத்து ; பொருத்தமான வசனத்தைக் கொண்டு கதாபாத்திரங்களை பேச வைத்திருக்கிறார் இப் படத்தின் இயக்குநர்.
கூலித் தொழிலாளி கிடைத்த வேலையை செய்து அதன் மூலம் தன் பிழைப்பை நடத்துவான். அந்த வரிசையில் தவசியும் சேருவான்.
திருட்டுப் பட்டம் கட்டி அதன் பிறகு தவசி எதிர் கொள்ளும் பிரச்னைகள் ; அதனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ; காவல் துறை , நீதித் துறை என நீளும் கதையின் போக்கு பார்வையாளர்களை நிமிர வைக்கும் கதை அமைப்பு தான் என்ன விலை ? படத்தின் முக்கிய பகுதி. அதனை சரிவர பயன்படுத்தி இருக்கிறார் இப்படத்தின் இயக்குநர்.
நிரபராதி ஒருவன் தண்டிக்கப்பட்டால் அவன் வாழ்க்கை என்னாவது ? அவன் எதிர்காலம் என்னாவது ? இதற்கு யார் பொறுப்பு ? காவல் துறையா ? நீதித் துறையா ? இல்லே இந்தச் சமூகமா ?
திரை நட்சத்திரங்கள் :-
தவசியாக வாழ்ந்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் கதைநாயகர்களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள் அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் கருணாஸ் தன் நடிப்பால் உயர்ந்திருக்கிறார்.
பாச மிகு தந்தையாக ; அன்பு மிகு கணவனாக ; பொறுப்பான குடும்பத் தலைவனாக ; எந்த வகையிலும் தவறு செய்யாமல் நேர்மையாக உழைக்கும் தவசி குற்றவாளியாக சித்தரிக்கப்படும் போது மனதளவில் உடைந்து போகிறார் தவசி. இயல்பாக தவசி வேடத்தில் கருணாஸ் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நான் குற்றம் செய்யவில்லை ” என்று பதறும் தவசி அதனை நிரூபணம் செய்ய போராடும் காட்சிகளில் தன் முகபாவனங்கள் மூலம் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார் கருணாஸ்.
கதை நாயகி :- நிமிஷா சஜயன்
காஞ்சனா வேடத்தில் நிமிஷா சஜயன் . அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றார்.
குற்றம் சாட்டப்பட கருணாஸ்ஸுக்காக ஆஜராகும் நிமிஷா சஜயன் சிறப்பாக வாதாடி படத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். பாராட்டலாம்.
குற்றம் சாட்டப்பட்ட கருணாசுக்காக ஆஜராகும் நிமிஷா சஜயன் சிறப்பாக வாதாடி படத்திற்கு பெருமை சேர்த்திருக்கும் இவரை நாமும் பாராட்டலாமே !
நீதி மன்றக் காட்சிகளில் நிமிஷா சஜயன் பேசும் வசனங்களின் உச்சரிப்பு ; வாதாடும் திறன் ; அவரது உடல்மொழி என அனைத்தும் பார்வை யாளர்களை கவர்ந்திழுக்கும் இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
துணை திரை நட்சத்திரங்கள் :- இவர்கள் எப்பொழுதும் தம் பங்கிற்கு பெருமை சேர்ப்பார்கள். இதில் சந்தேகம் வேண்டாம்.
விஜயலட்சுமி வீரமணி ,கமலேஷ் ஜெகன் , ஒய்.ஜி.மகேந்திரன் , பூரணிமா பாக்கியராஜ் , நிழல்கள் ரவி , மொட்டை ராஜேந்திரன் , கவிதாலயா கிருஷ்ணன் , மோகன்ராமன் , தீபா சங்கர் , லொள்ளு சபா சாமிநாதன் , ஷாஷா சிவகுமார் , சேத்தன் சீனு ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
தவசியின் குடும்ப உறுப்பினர்களாக நடித்தவர்களின் நடிப்பு கதையின் உணர்வு பூர்வமான தருணங்களின் பிரதிபலிப்பு படத்திற்கு தனி சிறப்பு
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
எழுத்து இயக்கம் :-
சஜீவ் பழூர்.
இவரின் புதிய சிந்தனை தான் கதை. வித்தியாசமான கதை. இதனை கையில் எடுத்துக் கொண்டு திரைக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து உரிய வசனங்கள் மூலம் தன் எண்ணங்களை எழுத்தாக்கி புதிய திரைப்படத்தினை புதிய பாணியில் இயக்கி அதில் சாதனையைப் படைத்திருக்கிறார் பாராட்டுகள்.
ஒளிப்பதிவாளர் :- ஆல்.பி.ஆண்டனி
கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இராமேஸ்வரத்தின் பின்னணியை பயன் படுத்தி இருப்பது மிக பொருத்தம் . வண்ண ஒளிப்பதிவு மிக அற்புதம்.
இராமேஸ்வரத்தின் கடல் கடல் சார்ந்த கடற்கரை , அந்த ஊரின் வாழ்வியலை அழகாக படம் பிடித்துக் காட்டி கதைக்கும் படத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் . பாராட்டுகள்
படத் தொகுப்பு :- ஸ்ரீஜித் சாரங்
கதையின் வேகத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய பணியை வெகு சிறப்பாக செய்திருக்கிறார். திரைக்கதை உடைந்து விடாமல் வெகு சாமார்த்தியமாக படத்தினை தொகுத்திருப்பது இவருடைய திறமைக்கு ஒரு சவால் பாராட்டுவோம் !
இசை :-
சாம் சி.எஸ்
காட்சிக்கு உயிர் ஊட்டுகிறது இவரது இசை.
படத்தின் உணர்வுகளை மக்களுக்கு கொண்டு சேர்த்திருப்பது இவரின் பங்கு மகத்தானது.
பின்னணி இசை காட்சியை நகர்த்தி செல்லும் ஓர் கருவி. படகுக்கு துடுப்பு ! படத்திற்கு பின்னணி இசை ஓர் எடுப்பு ! பாடல்களுக்கு மெட்டு இது ! படத்திற்கு முதல் அச்சாரம் !
திரைக்கு பின்னே ஜாம்பவான்கள் :-
எழுத்து இயக்கம் :- சஜீவ் பழூர்
இசை :- சாம்.சி.எஸ்.
ஒளிப்பதிவு :- ஆல்.பி.ஆண்டனி
படத்தொகுப்பு :- ஸ்ரீஜித் சாரங்
சண்டைக்காட்சி :- பி.சி ஸ்டண்டு
ஒலி வடிவமைப்பு & கலவை :- தபஸ் நாயக்
கலை :- கே.சிவகிருஷ்ணா
பாடல்கள் :- கார்த்திக் நிதி , இளங்கோ கிருஷ்ணன் , லட்சுமி பிரியங்கா
நடனம் :- ABEB RK
என்ன விலை என்னும் படத்தின்திரை விமர்சனத்தில் காணக் கிடைக்காத ஓர் உயிரோட்டமான கதை ! உண்மையை தோல் உரித்துக் காட்டும் ஓர் உன்னதமான , தரமான படம் .பார்க்க வேண்டிய படம். திரையில் பாருங்கள் திரைப்படக் கலைஞர்களை கைத் தூக்கி விடுங்கள். எங்கள் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று ஆய்ந்து தோய்ந்து நல்லதொரு தீர்ப்பினை வழங்கி வாழ்த்துகிறது. மீண்டும் வேறு திரை விமர்சனத்தில் சந்திப்போம். உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்