
” மண்டாடி ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
தமிழில் தலைப்புக்கா பஞ்சம். கதையைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஏனோ தலைப்பை தமிழில் தேட தவறி விடுகின்றனர். கதையைத் தெரிவு செய்த உடனே தலைப்பையும் தெரிவு செய்யுங்களேன். இதில் என்ன கஷ்டம் ? இதில் என்ன நஷ்டம் ?
துறை முகத்தின் சிங்கமாக சுற்றி வருபவர் சாட்டா புலி என்ற கதாபாத்திரம் ஏற்ற சுஹாஸ்.
படகு சவாரி , படகு போட்டி என கடலோரம் வாழும் மக்களின் வீர தீர விளையாட்டு என்பது அவர்களுடைய இரத்தத்தில் ஊறிப்போன நிகழ்வுகளில் ஒன்று.அந்த வகையில் சாட்டாபுலி வேடம் ஏற்ற சுஹாஸ் ‘ சுனாமி ரைடர்ஸ் ‘ அணிக்கு தலைவனாக பொறுப்பேற்று தொடர்ந்து அந்த அணி வெற்றிப் பெறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் சாட்டா புலி.
கடலோரப் பகுதியையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் சாட்டா புலி.
திருவிழா ஒன்றில் மல்லேஷ் என்ற இளைஞன் சிங்கமாக வலம் வந்து கொண்டிருக்கும் சாட்டா புலியைத் தாக்க முயற்சி செய்கின்றான். சிங்கத்தின் முன்னே சிறு நரியின் ஆர்ப்பாட்டமா ? சிறு நரி முன்னே சிங்கம் தப்பி ஓடுவதைப் போல மல்லேஷ் என்ற இளைஞனிடமிருந்து புலி தப்பியோட அந்த இளைஞன் அடைக்கலம் தேடி காளி என்ற வேடம் இட்ட சூரியிடம் தஞ்சம் அடைகிறான்.
தஞ்சம் அடைந்த அந்த இளைஞனை காளி காப்பாற்றுகின்றான். சாட்டா புலியிடம் சமாதானம் பேச அந்த இளைஞனை சாட்டா புலியிடம் காளி அழைத்துச் செல்கிறான்.
காலங்கள் உருண்டோடின. சுமார் 20 ஆண்டுகள் கழித்து காளி அங்குச் செல்கிறான். பெரியவர்கள் ஒன்று கூடிய சபையில் அவர்கள் முன்னிலையில் நடந்த சமாதானப் பேச்சின் முடிவில் படகுப் போட்டி நடத்த ஊர் முடிவு செய்கிறது. இந்தப் போட்டியில் யார் வெற்றிப் பெறுகிறார்களோ ! அவர்கள் தான் அதிகாரப் பூர்வமான அணி என ஒரு மனதாக தீர்மானம் போடப் படுகின்றது.
தோற்றவர்கள் துறைமுகத்தை விட்டு வெளியேற வேண்டும். என்ற கட்டளைக்கு முதலில் சாட்டா புலி ஒப்புக் கொள்ளவில்லை. தன் வியாபாரத்தைக் கருத்தில் கொண்டு சம்மதம் தெரிவிக்கின்றான். காளியும் களத்தில் இறங்குகின்றான்.
இதற்கிடையே காளியைப் பார்க்கும் மஹிமா அவனை ” துரோகி ” என்கிறாள். வெறுப்பை அள்ளி வீசுகிறாள்.
காளிக்கும் தன் அம்மாவிற்கும் இருந்த காதல் விவகாரம் தெரிந்து மஹிமாவின் மகனும் கோபப்படுகிறான். காளி தன் கடந்த கால கதையை மல்லேஷிடம் சொல்கிறான்
காளியும் சாட்டா புலியும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்தனர்..
முனி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யராஜ் கோச்சிங்கில் படகுப் போட்டிகளில் பங்கேற்றதை விவரிக்கிறான்.
ஒரு கட்டத்தில் முனி ( சத்யராஜ் ) இறந்து போகிறார். முனி எப்படி இறந்து போகிறார் ? உயிர்த்தோழர்களான காளியும் சாட்டபுலியும் ஏன் பிரிந்து போனார்கள் ? துறைமுகத்தில் உண்மையில் என்ன நடந்தது ? என்பது தான் மீதிக் கதை .
திரை நட்சத்திரங்கள் :-
சூரி மற்றும் சுஹாஸ் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று தன்னுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். நகைச்சுவை நடிகனாக அறிமுகமாகி மெல்ல மெல்ல தன் திறமையால் , பொன்னான வாய்ப்பினால் தன்னை தக்க வைத்துக் கொண்ட சூரியை மனதார பாராட்டலாமே !
மஹிமா நம்பியார் கதை நாயகியாக நடித்திருக்கிறார்.
முக்கிய வேடங்கள் :-
ஒரு காலத்தில் வில்லனாக அறிமுகமான சத்யராஜ் பின்னர் கதாநாயகனாக , குணச்சித்திர நாயகனாக வலம் வந்து ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
ரவீந்திர விஜய் , மிதுன் , பால சரவணன் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
திரைப்பட இயக்குநர் :-
மதிமாறன் புகழேந்தி :-
இப் படத்தின் இயக்குநரான இவர் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து தன் இயக்கத்தின் மூலம் நடிகர்களை நடிக்க வைத்து நல்லொரு கதையை பார்வையாளர்கள் மத்தியில் உலவ விட்டிருக்கிறார். பாராட்டலாம்.
கொஞ்சம் அலசுவோம் :-
நிறை :-
படகுப் போட்டிதான் கதைக்களம்.
நட்பையும் விளையாட்டையும் மையமாக வைத்து படம் எடுத்திருப்பது வரவேற்கக் கூடியது தான்
படத்தின் ஆரம்பம் சுவாரசியமாக தொடங்குகிறது. துறைமுகம் வந்ததும் கதை கொஞ்சம் சறுக்குகிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி ஓரளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் இறுதிக் காட்சி யில் படகு போட்டி காட்சிகள் விறுவிறுப்பாக செல்கின்றன
படகு போட்டிக் காட்சி படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
குறை :-
கதாநாயகன் – வில்லன் மோதும் காட்சி தத்ரூபமாக இல்லை. அதற்கான காரணமும் ஏற்கக் கூடியதாக இல்லை . பல காட்சிகளில் அழுத்தம் இல்லை. மல்லேஷ் சாட்டாபுலி மோதிக் கொள்வதற்கான காரணத்தை சரியாக சொல்ல வில்லை.
காதல் காட்சி மனத்தை தொடவில்லை.
சூரி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இன்னும் நடிப்பின் தரத்தை உயர்த்தி இருக்கு
வில்லனாக சுஹாஸ் மிரட்டி இருக்கிறார். அவருடைய நடிப்புக்கு பிளஸ். ஏஞ்சலாக மஹிமா நம்பியார் பரவாயில்லை . இன்னும் கொஞ்சம் வேலை வாங்கி இருக்கலாம். ஏஞ்சலின் கணவராக ரவீந்தர் விஜய் சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார்.மல்லேஷாக நடித்த பையன் தனக்கு கொடுத்த வேலையை ஒழுங்காக செய்து இருக்கிறான்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இசை :- ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை அருமை. பின்னணி இசை மிரட்டுகிறது. பாடல்கள் பரவாயில்லை .
ஒளிப்பதிவு :- எஸ்.ஆர். கதிரின் காமிரா படத்திற்கு ஒரு மைல்கல். படகு சவாரி , படகு போட்டி காமிரா மிரட்டு மிரட்டு என மிரட்டுகிறது.
கலை இயக்குநர் :-
படத்திற்கு ஒரு ஹைலைட்.
மண்டாடி என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் நல்லதொரு கதையைத் தேர்ந்தெடுத்து அதற்கு திரைவடிவம் கொடுத்து நல்ல நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கி அதற்குரிய நடிகர் நடிகைகளை தெரிவு செய்து படத்தினை இயக்கிய இயக்குநரைப் பாராட்டலாம். நடிகர்களும் நடிகைகளும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கின்றனர். எங்களின் பத்திரிகை குழு நடுநிலை நின்று நல்லதொரு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. மீண்டும் மற்றொரு திரை விமர்சனத்தில் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ஓகே டேக் ராஜேஷ்