தமிழ்நாட்டில் கண்கவரும் இடங்கள் மிக சில. காடுகளுக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறது அழகிய தமிழ்நாடு. மலைக்குள்ளும் ஒளிந்து கிடக்கிறது அழகிய தமிழ்நாடு.
இந்தச் செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அந்த உலகத்தைப் பார்க்க உங்களுக்கு ஆவலாக உள்ளதா ? உங்கள் ஆசையும் , ஆவலும் என்னவென்று எனக்கு புரிகின்றது…உங்கள் ஆசையும் ஆவலையும் தீர்க்க வெள்ளித் திரைக்கு வாருங்கள் ஐயா !

வாருங்கள் அம்மா !
வைல்டு தமிழ்நாடு ( Wild Tamilnadu ) என்ற வன விலங்கு ஆவணப்படத்தினைப் பற்றி பேசுவோம்….
என் லைனுக்குவாங்க
சங்க இலக்கியம் படித்தவர்களுக்குத் தெரியும் ஐவகை நிலங்கள் பற்றி. குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை என நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி.
காடும் காடு சார்ந்த இடம் முல்லை.
வயலும் வயல் சார்ந்த இடம் மருதம்.
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல்.
மணலும் மணல் சார்ந்த இடம் பாலை.
ஐவகை நிலங்களில் வண்ணக் காமிரா ஊடுருவ அந்த அந்த நிலங்களின் அழகை படம் பிடித்துக் காட்டி பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்திருக்கின்றனர் படக்குழுவினர்.
ஐவகை நிலங்களில் வண்ணக் காமிரா ஊடுருவ அந்த அந்த நிலங்களின் அழகை படம் பிடித்துக் காட்டி பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்திருக்கின்றனர் படக்குழுவினர்.
சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் இயற்கையை புரிந்து கொள்ள பயன்படுத்திய இந்த ஐந்து நிலப்பரப்புக்குள் இவ்வளவு உயிர்கள் வாழ்கின்றன. இதனை காமிரா மூலம் படம் பிடித்துக் காட்டுகின்றனர்
நமக்கேத் தெரியாத உயிரினங்களும் இதில் படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.
மின்மினி பூச்சிகள் போன்ற அரிதான உயிர் இனங்களின் வாழ்க்கையைப் பற்றி படம் பிடித்துக் காட்டி இருக்கின்றனர்..
நமக்கேத் தெரியாத உயிரினங்களும் இதில் படம்பிடித்துக் காட்டியுள்ளனர்.
மின்மினி பூச்சிகள் போன்ற அரிதான உயிர் இனங்களின் வாழ்க்கையைப் பற்றி படம் பிடித்துக் காட்டி இருக்கின்றனர்.
இந்தப் படத்தில் சுவாரஸ்யமானது நம்ம சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் குறிஞ்சித் திணை , முல்லைத் திணை , மருதத் திணை , நெய்தல் திணை , பாலைத் திணை அடிப்படையில் தான் வைல்டு தமிழ்நாடுவை உருவாக்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் வாழும் உயிரினங்களுள் ஒன்று முள்எலியைக் கூட நம்மில் எத்தனை பேர் நேரில் பார்த்து இருப்பார்கள் ? இப்படிப்பட்ட உயிரினங்களின் உலகத்தினை வெள்ளித் திரையில் பார்க்கும் போதே நமக்கே ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் கல்யாண் வர்மா. இவர் ஏற்கனவே வன விலங்கு பட படைப்புகளுக்காக தேசிய விருது பெற்றவர். விலங்குகள் வாழும் இடம். அவற்றுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு அந்த நிலப்பரப்பின் தன்மை என முழுமையான உலகத்தினைக் காட்டும் முயற்சி வரவேற்கத் தக்கது.
இந்தப் படத்திற்கு குரல் கொடுத்து இருப்பவர் நடிகர் அரவிந்தசாமி.
காட்டுக்குள் யானை நடந்து வரும் போதும் காமிரா அடர்ந்த காட்டுக்குள் செல்லும் போதும் பின்னணியில் அரவிந்த்சாமியின் குரல் ஒலிப்பது இந்த அனுபவத்தை இன்னும் சுவாரசியமாக்கும்.
காட்டுக்குள் யானை நடந்து வரும் போதும் காமிரா அடர்ந்த காட்டுக்குள் செல்லும் போதும் பின்னணியில் அரவிந்த்சாமியின் குரல் ஒலிப்பது இந்த அனுபவத்தை இன்னும் சுவாரசியமாக்கும்.
இந்த ஆவணப் படத்திற்கு இசையமைத்தவர் ரிக்கி கேஸ். இவர் மூன்று முறை கிராமிய விருதுகள் பெற்றவர்.
இந்த ஆவணப் படத்திற்கு இசையமைத்தவர் ரிக்கி கேஸ். இவர் மூன்று முறை கிராமிய விருதுகள் பெற்றவர்.
இந்தப் படத்தில் கர்நாடக இசையின் தன்மையை ஆர்கெஸ்ட்ரா இசையும் இணைந்து இந்தப் படத்துக்கான இசையை உருவாக்கினார்கள்.
வைல்டு தமிழ்நாடு என்ற வன விலங்கு ஆவணப் படத்தினைப் பற்றிய விமர்சனத்தில் தமிழ்நாட்டில் காணக் கிடைக்காத அரிய காட்சிகளை படம் பிடித்து நம் நாட்டில் இப்படிப்பட்ட வனப்பும் , உயிரினங்களும் உள்ளன என்பதனை வெளிப்படுத்திய ஆவணப் படத்தின் படக் குழுவினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் . எங்கள் பத்திரிகைக் குழு நடுநிலையாக நின்று ஆய்வு செய்து நல்லதொரு தீர்ப்பினை வழங்குகிறது. இன்னொரு திரைவிமர்சனத்தில் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ஓகே டேக் ராஜேஷ்