TOXIC திரை விமர்சனம் :-

Share the post

திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
இப் படத்தின் கதை கோவாவில் ஆதிக்கம் செலுத்தும் சால்வடார் கிங்மேக்கரின் உலகத்திற்குள் ராயாவும் அவரது சகோதரி கங்காவும் நுழைகின்றனர்.

சால்டாரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறுகின்றார். அவரது சாம்ராஜ்யத்தின் அடுத்த வாரிசாக மாறும் ராயா பெர்னாண்டஸின் மகளான ரெபெக்காவை திருமணம் செய்து கொள்ளும் இவர் வாழ்க்கையில் நதியா வருகிறார்.நதியாவுடன் உருவாகும் காதல் ராயாவின் குடும்பத்தைச் சிதைக்கிறது. உறவுகளை உருகுலைக்க வைக்கிறது.

கங்காவின் மரணம் ராயாவின் மனத்தில் வன்மம் தலைத் தூக்க ! கோபம் , பழி வாங்கும் எண்ணம் ராயாவின் மனத்தை துளைத்தெடுக்க இதற்கிடையில் மெலிசா இவர் வாழ்க்கையில் நுழைகிறார்.

ராயாவின் சாம்ராஜ்யத்தை வீழ்த்த முயல்கின்ற ரூமி யார் என்பதும் இக் கதையின் முக்கிய திருப்பமாக அமைகிறது.

ராக்கிங் ஸ்டார் யாஷ் – ராயா மற்றும் டிக்கெட் .
நயன்தாரா கங்காவாக நடிக்கிறார்.
கியாரா அத்வானி நதியாவாக நடிக்கிறார்.
தாரா சுதாரியா ரெபெக்காவாக நடிக்கிறார்.
ஹூமா குரேஷி எலிசபெத்தாக நடிக்கிறார்.
ருக்மணி வசந்த் மெல்லிசாவாக நடிக்கிறார்

திரைக் கலைஞர்கள் :-
திரைப்படத்தில் எப்பொழுதும் இரட்டை வேடங்களுக்கு தனி மதிப்புண்டு ; மரியாதை உண்டு.
அந்த வகையில் ராயா மற்றும் ரூமி என இரு வேடங்களில் யஷ் தன்னுடைய நடிப்புத் திறனை நன்கு காட்டியிருக்கின்றார்.

இரட்டை வேடங்களில் தனி விசேஷம் உண்டு.
நடை , உடை , பாவனையில் தன் நடிப்பின் மூலம் இரட்டை வேடங்களில் வித்தியாசத்தைக் காட்டியிருக்கின்றார்.
பார்வையால் , உடல்மொழியால் வித்தியாசம் காட்டி நடித்திருப்பது வரவேற்கத் தக்கது.

மனத்தில் ஏற்பட்ட வலி . வலியின் காரணத்தை தன் கோபத்தால் வெளிப்படுத்தும் போதும். குற்ற உணர்வால் தவிப்பதும் காட்சிகளில் அதனை வெளிப்படுத்தும் பாங்கு போற்றுதலுக்கு உரியது.

யஷ்ஷின் நடிப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

நயன்தாரா முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர் கதாநாயகனின் சகோகதரியாக வலம் வருகிறார். ஆக்‌ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து சிறப்பித்துள்ளார்.

நதியா என்னும் கதாபாத்திரத்தில் கியாரா அத்வானி நடித்திருக்கிறார். காதலுக்கும் குற்ற உணர்வுக்கும் இடையே ஆட்பட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் கவனமாக நடித்து மக்களை கவர்ந்திழுக்கிறார்.

துணை திரைநட்சத்திரங்கள் இவர்களுக்கு இப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரங்களை கொடுத்து அவர்களும் அதனை உணர்ந்து நன்றாக நடித்திருக்கின்றனர்.

படத்தின் சிறப்பு :-
1940 களில் கோவாவை பின்னணியாக உருவாக்கப்பட்ட கதை.
இந்த கேங்ஸ்டர் பீரியட் நாடகம் . யஷ்ஷின் முந்தைய திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட இந்தக் கதைக்களத்தை தக்க வைக்க முயற்சிக்கிறது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- ராஜீவ் ரவி.இப் படத்திற்கு இவர் பக்க பலம். கோவா மற்றும் பனிமலை பின்னணியில் உருவாக்கப்பட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

இசையமைப்பாளர் :-

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றது.

படத்தின் முதல் பகுதியில் கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தி உலகத்தினை உருவாக்குவதில் தனி கவனம் செலுத்துகிறது.

பிற் பகுதியில் ஆக்‌ஷன் , மோதல்கள் அதிகரிக்கும் போது படம் விறு விறுப்பாக போகிறது. வன்முறையின் களியாட்டம் படத்தினை தள்ளாட வைக்கிறது. வன்முறைக்கு வன்முறைதான் தீர்வா ? கேள்வி கேட்க வைக்கிறது இப் படம் .

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
கதை :- யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் .
இயக்கம் :- கீது மோகன்தாஸ்
ஒளிப்பதிவு :- ராஜீவ் ரவி
இசை :- ரவி பஸ்ரூர் , விஷால் மிஸ்ரா , தனிஷ்க் பாக்சி.
எடிட்டர் :- உஜ்வல் குல்கர்னி
ஒலி வடிவமைப்பு :- குணால் சர்மா.
சண்டைக் காட்சி :- ஜே.ஜே.பெர்ரி , அன்பரிவ் , கெச்சா காம்பக்டீ , அம்ரித் சிங்

தமிழில் வசனம் :- கணேஷ் சுப்ரமணியன்
நடன இயக்குநர் :- கணேஷ் ஆச்சார்யா , இம்ரான் சர்தாரியா , ஏ.ஹர்ஷா
மக்கள் தொடர்பு :- யுவராஜ்

TOXIC CAST AND CREW
திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் பிரம்மாண்டமான கேங்ஸ்டர் உலகம் , யஷ்ஷின் நடிப்புத் திறமை , ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகள் , தொழில்நுட்ப நுணுக்கங்கள் இப் படத்தில் கொட்டிக் கிடக்கின்றன. யஷ்ஷின் நடிப்பிற்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். பிரம்மாண்டமான திரையரங்கின் அனுபவம் இதற்காகவும் இப் படத்தினை பார்க்கலாம். எங்களின் பத்திரைக் குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் சந்திப்போம் வேறொரு திரை விமர்சனத்தில் . அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுபவர் உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *