இருமுடி கட்டு திரை விமர்சனம் !

Share the post

” இருமுடிக் கட்டு ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கொரானா இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துவிட்டது. கோயிலுக்கே போகாதவர்கள் கூட கோயிலுக்குப் போக ஆரம்பித்தார்கள். சாமியே இல்லை என்று கூப்பாடு போட்டவர்கள் எல்லாம் சாமியை கையெடுத்து கும்பிட ஆரம்பித்தனர். அன்னதானம் கோயில்களில் பலகி பெருகின. இதற்கெல்லாம் என்ன காரணம் ? … மரண பயம் தான். எது எப்படியோ ஆன்மீகத்தில் ஈடுபட்டால் சரி தான். ஆன்மீகத்திற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் ? நீங்கள் நினைப்பது , கேட்பது எல்லாம் எனக்கு புரிகிறது. இருக்கு … சம்பந்தம் இருக்கு !

கதைக் களம் :-
பொல்லுரு கிராமத்தில் ரவி தேஜா தன் மனைவி பிரியா பவானி சங்கர். இந்தத் தம்பதியருக்கு ஒரு மகள். மனைவி மகளோடு ரவி தேஜா சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு நிலம் உண்டு . அதில் வாழைத் தோட்டம் உண்டு. ஆட்டோ சவாரி ஓட்டுநர். இதன் மூலம் வருமானம். குடும்பம் இவர் வருமானத்தின் மூலம் நகர்கிறது.

ஆண்டுதோறும் ஐயப்பனை நினைத்து மாலையைப் போட்டுக்கொள்வார். மலைக்கு போவார். இவர் ஐயப்பனின் தீவிர பக்தர்.

மாலை போட்டிருக்கும் போது மதுவை தொடமாட்டார். மலைக்கு போய் வந்ததும் மதுவை தொடுவார் ; போதையில் மிதப்பார்.

ரவி தேஜா தன் மகள் மீது உயிரையே வைத்திருக்கிறார்.

அந்த ஊருக்கு அந்தத் தொகுதி எம்.எல்.ஏ ரமேஷ் இந்திரா பேருந்து வசதி செய்து தருகின்றார். அதன் பிறகு நடக்கும் திடீர் மரணம் . மர்மமான சம்பவங்கள் தான் படத்தின் கதைக்களம்.

கதைச்சுருக்கம் :-
கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்ட ஒரு பக்தி கதை. பக்தி கதை என்று சொல்வதை விட போதைக்கு அடிமையான கதை நாயகன் மனம் திருந்தி ஆன்மீகத்தில் ஈடுபட்ட கதை.

இப் படத்தின் நாயகன் ரவி தேஜா கிராமத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒரு சராசரி மனிதர்.
கதையின் முற்பகுதியில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் தோன்றுவார்.

போதைக்கு அடிமையான இவர் தன் மகளின் விருப்பபடி , எண்ணப்படி , ஆசைப்படி என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏதோ ஒன்று அந்த ஆராய்ச்சி இப்போதைக்கு இப் போதைக்கு வேண்டாம்.

பேபி நட்சத்திரா ஆசைப்படி இவர் ஐயப்ப மாலை அணிந்து கொள்ள இல்லை இல்லை போட்டுக் கொள்கிறார். மாலையை போட்டுக் கொண்ட பிறகு அவர் வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட மாற்றங்கள் என்ன ?
அந்தக் கிராமத்து பெண்களைச் சுற்றி அமைக்கப்பட்ட ஒரு குற்றவியல் மர்ம நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை போல் தோன்றுகிறது.

தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசம் எத்தனையோ படங்களில் வந்தாலும் இந்தக் கதையில் போதைக்கு அடிமையான இப் படத்தின் கதாநாயகன் தன் மகள் பேபி நட்சத்தராவின் அன்புக்கு கட்டுப்பட்டு மனம் மாறுகின்றாரா ? என்பது தான் கதை. மீதியை வெள்ளித் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாமே !

ரவி தேஜா தன்னுடைய மற்றைய படங்களை விட சற்று வித்தியாசமான மாறுபட்ட புதிய தோற்றத்தில் நடிப்பால் அசத்தி இருக்கின்றார்.

இந்தப் படத்தில் கதாநாயகன் ரவி தேஜாவின் நடிப்பில் யதார்த்தம் தெரிகிறது. தன்னுடைய இயல்பான நடிப்பால் இரசிகர்களை கைத்தட்ட வைக்கிறார். கைத்தட்டல் தானாக வருவதில்லை. கதையோடு மனம் ஒன்றினால் மகிழ்ச்சி வெள்ளம் கரை புரளும் இதனின் வெளிப்பாடு தான் இந்தக் கைத்தட்டல்.

உணர்ச்சி பூர்வமான காட்சிகள் நம்மை அறியாமல் கண்ணீர் சிந்த வைக்கும். அந்த வகையில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள பாசம் மனத்தை நெகிழ வைக்கும்.

படத்தின் இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகளில் சென்டிமெண்ட் காட்சிகள் மட்டும் இயல்பாக அதே சமயத்தில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றன.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் உடல் கெட்டு , மனம் கெட்டு , சீர் கெட்டு வீதியில் குப்பைமேட்டில் விழுந்து கிடக்கும் போது மனசு வலிக்கிறது. தொண்டு நிறுவனங்கள் பல இவர்களுக்கு மறுவாழ்வு தர கைகொடுக்கின்றன. இவர்கள் திருந்தினால் மனத்திற்கு சற்று நிம்மதி .

திரைக்கதை படத்திற்கு பலத்தை கொடுத்திருக்கிறது. கதையை கையில் எடுத்து முறையாக திரைக்கதை அமைத்து அதனை காட்சிப் படுத்தி படமாக கொடுக்கும் போது அதுவே படத்தின் வெற்றிக்கு அச்சாரம் அதனை இந்தப் படத்தில் சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குநர் சிவா நிர்வானா.

திரை நட்சத்திரங்கள் :-
கதாநாயகன் ரவி தேஜா வை இன்னும் சிறப்பாக நடிக்க வைத்திருக்கலாம். திட்டமிட்டு அதன்படி நடந்தால் எதுவும் சிறப்பாக இருக்கும். இவரின் மற்ற படங்களை விட இது எவ்வளவோ மேல். நடிப்புத் திறனைக் காட்டி அசத்துங்கள். ரசிகர்கள் தான் உங்கள் வளர்ச்சிக்கு ஆணி வேர்

கதாநாயகி பிரியா பவானி சங்கர் . இவரை இயக்குநர் நன்றாக பயன்படுத்தி அவருடைய திறமையை வெளிப்படுத்த வைத்து இருக்கிறார். இயக்குநரை பாராட்டலாம். நடிப்பால் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகி பிரியா பவானி சங்கரையும் நாம் பாராட்டலாமே !

திரிநாத் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடித்திருக்கிறார்.
காவேரி கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். மகள் மணியம்மா கதாபாத்திரத்தில் பேபி நட்சத்திரா நடித்திருக்கிறார்.
எம்.எல்.ஏ வாக ரமேஷ் இந்திரா நடித்திருக்கிறார்.

துணை நட்சத்திரங்கள் :-
சாய்குமார் , பேபி நட்சத்திரா , அஜய்கோஷ் , ரமேஷ் இந்திரா , ஸ்வாசிகா , மீசால லட்சுமணன் , ராஜ்குமார் காசி ரெட்டி, ரமண பார்கவ் ,கிஷோர் கஞ்சேராபாலம் , கார்த்திக் அடுசுமல்லி , மகேஷ்

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
சிவ நிர்வாணா
தயாரிப்பு :- நவீன் யெர்னேனி , ஒய்.ரவிசங்கர்
தயாரிப்பு பேனர் :-
மைத்ரி மூவி மேக்கர்ஸ்
வழங்குபவர் :- டி – சீரிஸ் பிலிம்ஸ்

ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை மிக அருமை . இவரின் இசையில் உருவான
” இருமுடி கட்டு ” பாடல் சரியான துள்ளல் . ஆடாதவரையும் ஆட வைக்கும்.
” மல்லேபு பல்லக்கி ” பாடலும் அருமை.
இவரின் பின்னணி இசை படத்திற்கு பலம். இயக்குநரின் உணர்வுகளை புரிந்து கதை ஓட்டத்திற்கு ஏற்றபடி இசைப்பது நல்ல இசையமைப்பாளரால் மட்டுமே முடியும் என்பதை ஜி.வி. பிரகாஷ் குமார் நிரூபித்து இருக்கிறார் பாராட்டலாமே .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *