” பியார் பிரேமா காதல் “திரை விமர்சனம் :-

Share the post

” பியார் பிரேமா காதல் ” – என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
திருமண மரபுகளைத் தலை கீழாக புரட்டிப் போடும் ஓர் அழகான திரைப்படம். இதில் காதல் உண்டு ; போதிய நகைச்சுவை உண்டு.

பெண்ணாகப் பிறந்தவள் என்றாவது ஒருநாள் புகுந்த வீட்டிற்கு போகத்தான் வேண்டும். இது உலக நியதி .

கதாநாயகி தன் குடும்பத்தை விட்டு பிரிய மறுப்புத் தெரிவிக்கிறாள். திருமண நெறிமுறைகளை; வழிமுறைகளை உடைத்தெறிகிறாள்.

கதாநாயகன் ஏலன் திருமண நெறிமுறைகளை தகர்த்து எறியும் கதாநாயகியின் வழக்கத்திற்கு மாறான உறவைச் செயல்பட வைக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறான்.

ஆனால் குடும்பத்தால் ஏற்படும் மன அழுத்தங்கள் இந்தப் புதுமணத் தம்பதியினர் உண்மையிலேயே தங்களின் மகிழ்ச்சியான வாழ்வைக் கண்டு அறிய முடியுமா என்பதைச் சோதிக்கின்றன.

தமிழில் வெளியான தமிழ் திரைப்படங்கள் காதலைப் பற்றியும் , நகைச்சுவை உணர்வையும் பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் செய்து உள்ளன.

ஏலனின் 2018 இல் உருவான ” பியார் பிரேம காதல் ” என்னும் திரைப்படத்தில் இளமைக் கால உறவுகள் பற்றியும் , வழக்கத்திற்கு மாறான காதல் மீது உண்டான அவரது விருப்பத்தையும் நிலை நிறுத்தின.

காலா காலமாக இருந்து வரும் வழக்கத்தை ஏன் மாற்றக்கூடாது ? மணப் பெண் மட்டும் ஏன் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு போக வேண்டும் ? என்ற கேள்விகளுக்கு விடை தேட முயல்வது சிறப்பு. மரபை உடைக்க முடியுமா ? கொஞ்சம் யோசித்து பாருங்கள். விடை நேர்மறையாக இருக்கலாம். எதிர்மறையாக இருக்கலாம்.

இப் படத்தின் இயக்குநர் ஓர் எளிமையான கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி பழமையான எதிர்ப்பார்ப்பைக் கேள்விக் குறியாக மாற்றுகின்றார் .

வழக்கத்திற்கு மாறாக புகுந்த வீட்டிற்கு போக வேண்டியவள் மரபுகளை உடைத்து பிறந்த வீட்டிலேயே தங்கி விடுகிறாள். இப் படத்தின் நாயகி சான்வே மேகனா.

மாறாக கணவன் கதாநாயகன் எலன் மாமியார் வீட்டிற்கு வீட்டோட மாப்பிள்ளையாக போகின்றார்.

அங்கு இதுவரை தான் அறிந்திருந்த விதிகள் , பொறுப்புகள் மற்றும் குடும்ப உறவுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய சூழலில் தன்னை காண்கின்றான். மரபிற்கு மாறாக தொடங்கும் இது புதுமணத் தம்பதியினர் தங்கள் உறவில் நிலைபெற போராடுவது அவர்களின் உறவுக்கான சோதனையாக மாறுகிறது.

பாரம்பரியமான பாலினப் பாத்திரங்களைத் தலைகீழாக மாற்றும் விதத்திலும் ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் உள்ளது.கதையை வலுவான சமூகக் கருத்தாக முன் வைப்பதற்கு பதிலாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எவ்வளவு சங்கடத்திற்கு ஆளாகும் என்பதனை நகைச்சுவை உணர்வோடு கதையை சொல்லியிருக்கிறார் இத் திரைப்படத்தின் இயக்குநர்.

எலன் தாங்கி நிற்கும் கதாபாத்திரம் மனிதர்களைப் பற்றியும் , சூழ்நிலையைப் பொறுத்தும் , பொறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. யூகம் செய்யும் காதல் கதையை விட அவனது அந்தப் பயணத்தை மிகவும் ஈர்க்கக் கூடியதாக ஆக்குகிறது.

கதாநாயகனாக நடிக்கும் இயக்குநர் எலன் அறிமுக நாயகன் துபாயிலிருந்து திரும்பிய கவலையில்லாத மனிதன் .இயல்பாக கவர்ச்சியுடன் இந்தப் பாத்திரத்திற்கு பொருத்தமானவர். அன்றாட வாழ்வில் நாம் காணும் காட்சிகள் சில நகைச்சுவை உணர்வைத் தூண்டும் அதனையே படத்தில் வைத்து இருக்கின்றார். நகைச்சுவை மிளிர்கிறது.

கதாநாயகி சான்வே மேகனாவின் அம்மாவாக ராதிகா சரத்குமார். இவரிடம் பாசமும் உண்டு. அதிகாரமும் உண்டு. மாமியாருக்கு உண்டான இயல்பான குணாதிசயங்கள் இவரிடம் உண்டு.சிறப்பாக நடித்துள்ளார்.

துணை திரை நட்சத்திரங்கள் :- யோகிபாபு , எம்.எஸ். பாஸ்கர் , கீதா கைலாசம் , இளங்கோ குமரவேல் , செந்தில் மற்றும் மாரன் நடித்துள்ளனர். குடும்பச் சூழலுக்கு உயிரோட்டத்தையும் , உற்சாகத்தையும் தந்து கதைக்கு ஜீவனாக இருப்பது வரவேற்கக் கூடியது.

தொழில் நுட்பக்கலைஞர்கள் :-
இயக்கம் & நடிப்பு :- எலன் ( எ) இளம்
பாடல்கள் :- இளன்
மக்கள் தொடர்பு :- யுவராஜ்
ஒலி வடிவமைப்பு :- சச்சின் சுதாகரன் , ஹரிஹரன் எம்.
நிருவாக தயாரிப்பு :- குமார் கிருஷ்ணசாமி
தயாரிப்பு வடிவமைப்பு :- ஏ.கோபி ஆனந்த் , ஸ்ரீனிவாஸ் கலிங்கா

படத்தொகுப்பு :- பிரதீப் இ ராகவ் டிஓபி :- தினேஷ் கே பாபுதயாரிப்பு :- ஸ்ரீநிதி சாகர் வழங்கியவர் :- நெட்ஃபிக்ஸ்இசை :- யுவன் சங்கர் ராஜாகதை திரைக்கதை :- நிவேதிதா போஹங்கர்கூடுதல் திரைக்கதை வசனம் :- எலன் , ஹரிஷ் ஜிஒய்CEO – Rise East Entertainment – KSR சந்துரு

திரை நட்சத்திரங்கள் :- ஏலன் – ஏலன் ( நாயகன் ) சான்வே மேகனா – பவித்ரா ( நாயகி ) ராதிகா சரத்குமார் – சந்திரா ராணிஎம்.எஸ்.பாஸ்கர் – ராஜசேகர்யோகிபாபு – வினோத்செந்தில் – நதாஸ் தாத்தாகீதா கைலாசம் – நிர்மலாஇளங்கோ குமரவேல் – சீனிவாசன் மாறன் – கணேஷ்டீப்ஸ் – மைக்கேல்” ராஜா ராணி ” பாண்டியன் – வழக்குரைஞர்ராஜாமணி – ஐயாமோகன பிரியா – எலன் மைத்துனிஆரூஷ் – எலன் சகோதரர்

திரை விமர்சனத்தில் ” ” “பியார் பிரேமா காதல்” என்னும் திரைப்படம் மரபை முறியடித்து அதன் மூலம் புதுமை என்னும் புரட்சியை உண்டாக்க முயல்வது நடைமுறைக்கு ஒத்து வராது. சினிமாவிற்கு ஒருவேளை பொருந்தலாம். படம் பார்க்கலாம். புதுமை என்ற பெயரில் கதையை நகர்த்தி இருக்கின்றனர். எங்கள் பத்திரிகை குழு நடுநிலையோடு நின்று தகுந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அடுத்த திரை விமர்சனத்தில் சந்திப்போம் . அதுவரை உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *