இன்சிடியஸ் :- அவுட் ஆஃப் தஃபர்தர் ” திரை விமர்சனம்!

Share the post

” இன்சிடியஸ் :- அவுட் ஆஃப் தஃபர்தர் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
திரைக்கு முந்தைய அறிமுகம் :-இன்சிடியஸ் :- அவுட் ஆஃப் தஃபர்தர் “
லீ வானல் மற்றும் ஜேம்ஸ் வான் இவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் புகழ்பெற்ற திரைப்பட வரிசையை பார்ப்போம் .

2010 ஆம் ஆண்டில் வெளியான இன்சிடியஸ்
2013 ஆம் ஆண்டில் வெளியான இன்சிடியஸ் – சாப்டர் -2
2015 ஆம் ஆண்டில் வெளியான இன்சிடியஸ் – சாப்டர் -3
2018 ஆம் ஆண்டில் வெளியான த லாஸ்ட் கீ
2023 ஆம் ஆண்டில் வெளியான த ரெட் டோர்
2023 ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு படமான இன்சிடியஸ் – அவுட் ஆஃப் த ஃபர்தர் இந்த வரிசையின் 6 ஆவது பாகமாகும். மேலும் இது 2023 ஆம் ஆண்டில் வெளியான நேரடி படத்தின் தொடர்ச்சியாகும்.

கதைச் சுருக்கம் :-
” த ஃபர்தர் ” என்னும் ஆவி உலகத்திற்குள் பயணிக்கிறது. தொலைந்து போன ஆன்மாக்களை மீட்டு , அவற்றுடன் தொடர்பு கொண்டு இந்த உலகத்திற்கு திரும்பக் கொண்டு வரும் ஆற்றலைப் பெற்ற ஓர் இளம் பெண்ணைச் சுற்றியே கதை அமைக்கப்பட்டுள்ளது.

தன் மகளை தங்களது மூதாதையர் வீட்டில் வளர்க்கும் போது அவள் தனது சிறப்பு ஆற்றலை உணர்கிறாள்.

ஆனால் தான் திரும்பக் கொண்டு வரும் இறந்த ஆன்மாக்களின் உண்மையான தன்மையை மிக விரைவில் அறிந்து கொள்கிறாள் . அந்தவேளையில் சில தீய சக்திகள் அவளைத் துரத்துகின்றன. அந்த ஆன்மாக்கள் அவளுடைய ஆற்றலை அறியும் பொழுது ஓர் ஆபத்தான அபாயகரமான விளையாட்டைத் தொடங்குகிறது. இந்த உலகமே அவர்களின் விளையாட்டு மைதானமாக மாறுகிறது.

திரைக் கலைஞர்கள் :- அமீலியா ஈவ் , பிராண்டன் பெரியா , மேசி ரிச்சர்ட்சன் – செல்லர்ஸ் , லின் ஷே , லாரா கார்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு
டேவ் கார்பெட்
இசை
ஜோசப் பிஷாரா
திரைக்கதை மற்றும் இயக்கம்
ஜேக்கப் சேஸ் , இவர் கதையையும் இணைந்து எழுதி இருக்கின்றார்.
தயாரிப்பு
சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா
வெளியீடு :-
CC சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மண்ட் இந்தியா
இந்தப் படம் ஆங்கிலம் , இந்தி , தமிழ் , தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகி உள்ளது.

திரை விமர்சனத்தில்
” இன்சிடியஸ் :- அவுட் ஆஃப் தஃபர்தர் ” என்னும் படத்தினை விமர்சனம் செய்து பார்த்ததில் ஆவி உலகத்தில் பயணிப்பதும் , தொலைந்து போன ஆன்மாக்களை மீட்டு வருவதும் இந்த அரிய செயலை செய்யும் இளம் பெண்ணின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி கதை பின்னப்பட்டுள்ளது.

இயக்குநரே திரைக்கதை அமைந்திருப்பது தனி சிறப்பு. படம் பார்க்க வேண்டிய நல்ல படம் தான். ஆன்மா , ஆவி இவற்றை சுற்றி வருவது தீய சக்தி நல்லவர்களை எப்படி பாடா படுத்துகிறது . எங்களின் பத்திரிகை குழு நடுநிலையோடு நின்று சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அடுத்த திரை விமர்சனத்தில் பார்ப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ; ஓகே டேக் ராஜேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *