” ஜி.டி.என் “திரை விமர்சனம் !

Share the post

” ஜி.டி.என் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம்
ஜி.டி.நாயுடு என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவர் கோபால்சாமி துரைசாமி நாயுடு. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலங்கல் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தொடக்க கல்வி மட்டுமே பயின்றவர்.

இந்தியாவில் முதன் முறையாக மின் மோட்டார் தயாரித்து அதில் வெற்றியைக் கண்டவர்.
யுனிவர்சல் மோட்டார் சர்வீஸ் என்ற பெயரில் பேருந்து போக்குவரத்தை உருவாக்கி அசுர சாதனையை படைத்தவர்.

இந்தியாவின் சுதேசி மின் மோட்டாரைத் தயாரித்தவர்.
ஓட்டுப் பதிவு இயந்திரத்தைக் கண்டு பிடித்தவர்.
பழச்சாறு பிழியும் இயந்திரத்தைக் கண்டு பிடித்தவர் .
மண்ணெண்ணெயில் இயங்கும் மின் விசிறியைக் கண்டுபிடித்தவர் .

வெறும் 70/- ரூபாய் விலையில் ஐந்து வால்வு கொண்ட ரேடியோ தயாரித்து வழங்கியவர்.
இருவர் மட்டுமே பயணிக்கும் பெட்ரோல் காரைத் தயாரித்தவர்.

இந்தியாவின் எடிசன் என போற்றப்பட்டவர் இவர்

உலக நாடுகள் இவரை போற்றின.
அனுபவத்தால் பல கண்டுபிடிப்புகள் . இவரது முயற்சியால் உருவாக்கப்பட்ட எண்ணற்ற கருவிகள். தொழில் வல்லுநர் , விஞ்ஞானி என பலரால் போற்றப்பட்ட இவர். ஏனோ தெரியவில்லை இந்தியா இவரின் படைப்புகளை , கண்டுபிடிப்புகளை ஆதரிக்கவில்லை.

இவரின் இலட்சியக் கனவுகள் எப்படி சிதைக்கப்பட்டன ? இவரது சாதனைக்கு இடையூறுகளை விளைவித்த அந்தக் குள்ளநரிக் கூட்டம் எது ? எவை ? யாவர் ? வினாக்களை அவரவர் மனத்தில் தோன்றுவதை நான் இங்கு வெளிப்படுத்து
கின்றேன்.

இளமை முதல் முதுமை வரை அவர் வாழ்க்கைப் பாதையில் பயணித்ததை விட இவர் எதிர் கொண்ட சோதனைகள் அதனால் விளைந்த வேதனைகள் இவைகளை அழகாக திரைக்கதையில் மிக நயம் படக் கூறி நம்மை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றார். இத் திரைப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.

ஜி.டி.நாயுடுவின் அரிய கண்டு பிடிப்புகளை இந்தியா அங்கீகரித்திருந்தால். அரசுடமை ஆக்கப்பபட்டிருந்தால். இந்தியா தொழில் வளர்ச்சியில் , விஞ்ஞான வளர்ச்சியில் முதன்மை நாடாகத் திகழ்ந்திருக்கும். இங்கு இந்தியருக்கு மதிப்பில்லை. தமிழருக்கு மதிப்பில்லை இதற்கு உதாரணமே தொழில் வளர்ச்சியின் தந்தை ஜி.டி.நாயுடு என்று சொன்னால் அது மிகையாகாது.

அமெரிக்கா ஜி.டி.நாயுடுவின் அரிய கண்டுபிடிப்புகளை அங்கீகரித்தது. நல்லாதரவு கொடுத்தது.
ஜெர்மனி நாடு ஜி.டி.நாயுடுவின் கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொண்டது. அங்கீகரித்துக் கொண்டது.

ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளை இந்தியா நிராகரித்து விட்டது. அவரின் இலட்சிய கனவுகளை சிதைத்து உருகுலைய வைத்தது. அவரின் இலட்சிய கனவுகளை நிர்மூலமாக்கியது யார் யார் ? எந்த எந்த வழிகளில் சிதைக்க வழி தேடியது என்பதை தெள்ளத் தெளிவாக சிறிதும் அஞ்சாமல் எதைக் கண்டும் பயப்படாமல் படத்தில் பல விஷயங்களை அவருக்கே உரிய பாணியில் சொல்லியிருக்கிறார் இத் திரைப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார். இதுவரை நமக்கே புலப்படாத பல விஷயங்களை தனக்கே உரிய பாணியில் மிக எளிய முறையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்லியிருக்கிறார் இத் திரைப்படத்தின் இயக்குநர். அவரை நாம் பாராட்டலாமே !

வீரபாண்டிய கட்டபொம்மன் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் . தருமி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நாகேஷ். ஜி.டி.நாயுடு என்றவுடன் நம் நினைவுக்கு வருவது மாதவன்.

மாதவன் நடிக்கவில்லை ஜி.டி.நாயுடுவாகவே வாழ்ந்திருக்கின்றார்.
ஜி.டி.நாயுவின் கம்பீரத் தோற்றம் மாதவன் மூலம் நமக்குத் தெரிகின்றது.

ஜி.டி.நாயுவின் இளமைத் தோற்றம் பின்னர் வயது முதிர்ச்சிக் காரணமாக முதுமைத் தோற்றம் இரண்டிலும் தன் நடிப்பால் , தோற்றத்தால் அவரை நினைவுபடுத்தி தன் நடிப்பில் தனி முத்திரையை பதித்திருக்கின்றார் மாதவன்.

ஜி.டி. நாயுடு 133 வயதைத் தொட்டவர். இந்த பூமியில் 84 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். இவரை இன்றைய தலைமுறையினர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அவரை நம் மனக் கண் கொண்டு வந்து நிறுத்துகின்றார் நம் மாதவன். இவரை ஜி.டி.நாயுடுவாக நடிக்க வைத்திருக்கின்றார் இத் திரைப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.

அம்பலவாணர் கிருஷ்ணன் என்ற வரித்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஜெயராம். இவர் நடிப்பில் மிரட்டு மிரட்டு என்று மிரட்டி இருக்கின்றார். நகைச்சுவையில் பல படங்களில் தன்னை அடையாளம் காட்டியவர். இந்தப் படத்தில் வில்லத்தனம் காட்டுகின்றார். தான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதை தன் கோபத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

” உங்கள் சத்யராஜ் ” ஜி.டி. நாயுடுவின் நண்பராக சிதம்பரம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் தனக்கே உரிய நடிப்பில் நடித்து அசத்தி இருக்கின்றார். இவர் நடிப்பு இந்தப் படத்திற்கு பக்க பலம்.

திரை நட்சத்திரங்களாக இப்படத்தில் மின்னுபவர்கள் துஷாரா விஜயன் , பிரியாமணி , அதிதி பாலன் , வினய் ராய் , கருணாகரன் , டீஜே.அருணாச்சலம் , மோகன்ராமன் , தம்பிராமையா , விஜய் யேசுதாஸ் , ஷீலா ராஜ்குமார் , பிரிகிடா சாகா , ஷில்பா ஸ்ரீகுமார் என நட்சத்திரப் பட்டாளங்கள் படத்திற்கு அணி சேர்த்திருக்கின்றன. கதைக்கு உயிரூட்டியிருக்கின்றன
இவர்களை நல்ல முறையில் நடிக்க வைத்திருக்கின்றார் இத் திரைப்படத்தின் இயக்குநர். இவரை நாம் பாராட்டலாமே !

இப் படத்தில் கிராபிக்ஸ் பயன் படுத்தி நம்மை அசத்தி இருக்கின்றார் இத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன்.
ஜி.டி.நாயுடு வாழ்ந்த அந்தக் காலக்கட்டத்திற்கு பார்வையாளரை தன் ஒளிப்பதிவு மூலம் திரைக்கதை சிதையாமல் கதைக்கு வலுவூட்டி காட்சி வாயிலாக ஒளிப்பதிவு மூலம் படம் பிடித்துக் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றார்.
ஜி.டி.நாயுடுவின் ஜெர்மன் பயணம் அவர் ஹிட்லரிடம் விருது வாங்குவதைப் போல கிராபிக்ஸ் மூலம் கதையை திரைப்படத்தை தத்ரூபமாக காட்டி அசத்தி இருக்கின்றார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன்.

ஒரு திரைப்படத்தின் முக்கிய பலமாக பக்க பலமாக இருப்பது பின்னணி இசை. இதற்கு குறை ஒன்றும் வைக்காமல் ஜி.டி.நாயுடு வாழ்ந்த அந்தக் காலச் சூழலை பழம் பெரும் இசைக்கருவிகளின் ஒலி நாதம் மூலம் வெளிப்படுத்திய விதமும் இக் கால இசைக்கருவிகளின் ஒலி நாதம் மூலமும் இணைத்து இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை காட்சிக்கு காட்சி உயிரூட்டி கதை மாந்தரைப் போல படம் முழுவதும் இசை வலம் வருகின்றது. இசையும் கதையும் பூவும் மணமும் போல மணக்கிறது. கதையோடு இசையும் பின்னி பிணைந்து இப் படத்திற்கு வலு சேர்க்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது.

படத்தொகுப்பு ஒரு திரைப்படத்திற்கு உயிர் காப்பு பாதுகாப்பு. இயக்குநர் தன் எண்ணங்களை படமாக எடுக்க ஒளிப்பதிவாளரை அணுக அவர் எண்ணங்களை ஒளிப்பதிவாளர் புரிந்து ஒளிப்பதிவு செய்கிறார் . படத்தொகுப்பாளர் கதை ஓட்டத்திற்கு ஏற்ப ஒட்டியும் வெட்டியும் தன் கைவண்ணத்தில் தரமான படத்தை உருவாக்குகின்றார் படத்தொகுப்பாளர்.
தனி மனிதனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முனையும் போது அதனை வர்த்தக ரீதியாக படம் முழுக்க பார்ப்பவர்களை அயர வைக்காமல் தன் திறமையான படத்தொகுப்பால் கட்டிப் போட்டு இரசிகர்கள் சபாஷ் போட வைக்கின்றார்கள் படத்தொகுப்பாளர்கள் பிஜித் பாலா — கே.சசிகுமார்

தயாரிப்பு வடிவமைப்பாளர் சிரில் குருவில்லா.
ஆடை வடிவமைப்பாளர் ஜிதாத் சம்சுதீன் இவர்களின் பணி , உழைப்பு படம் முழுக்கத் தெரிகிறது.
பழைய வாகனங்கள் மற்றும் கதைமாந்தர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் வரை மேலும் அவர்களது பின்னணியில் பயன்படுத்திய அந்தக் காலப் பொருட்கள் என அனைத்தும் மிக கவனமாக கையாண்டு படத்திற்கு உயிரூட்டி இருக்கின்றார்கள். இவர்களுக்கு ஒரு சபாஷ் போடலாமே

இப் படத்தின் திரைக்கதை ஆசிரியர்கள் கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் ஆர்.மாதவன்.
ஜி.டி.நாயுடுவைப் பற்றி திரைக்கதையில் அதிகம் கவனம் செலுத்தி பல தகவல்களை திரையில் மிக நேர்த்தியாக சொல்லியிருப்பது இவர்களின் உழைப்பு திரைக்கதையில் தெரிகிறது.

திரும்ப திரும்ப வரித்துறை சம்பவங்களைப் பற்றி பேசுவதும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவது மனத்திற்கு சற்று சலிப்பை ஏற்படுத்துகின்றது. இதனை கவனமாக கையாண்டு இருக்கலாமே !

ஜி.டி.நாயுடுவின் பயணம் அவரது சாதனை ! அவர் எதிர் கொண்ட பிரச்சனைகள் இவைகளை வண்ணக் கலவையாக்கி திரைமொழியில் பதமாக இதமாக சொல்லியிருப்பது மிக அற்புதம்.

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் ஜி.டி. நாயுடுவின் பல்வேறு பயணங்கள் , அவரின் வாழ்க்கையின் எளிய முறைகள் இவைகளை தனக்கே உரிய பாணியில் சொல்லியிலுப்பது மிக அருமை !

இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் எளிய முறைகள் , அவரின் பல்வேறு பயணங்கள் இவைகளை தனக்கே உரிய முறையில் சொல்லியிருப்பது மிக அருமை !

ஜி.டி.நாயுடுவின் சாதனைகளும் அதனால் தனக்கு ஏற்பட்ட சோதனைகளும் ஒருபுறம் இருக்க , கடைசி காலத்தில் தன் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் போடும் திட்டம் மனத்திற்கு சற்று நெருடலாகிறது. வெற்றிக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் தொழிலதிபர்களின் மத்தியில் தனது கனவுகள் சிதைக்கப்பட்டாலும் , தனது சாதனை பயணங்களை தடுத்து நிறுத்தினாலும் சரி தவறான வரியை செலுத்தி எதிர்வரும் தலைமுறைக்கு தவறான ஒரு முன் உதாரணமாக நான் இருக்க மாட்டேன்.என்ற கொள்கை பிடிப்போடு வாழ்ந்து மறைந்த ஜி.டி.நாயுடு என்றும் நம் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பார் என்பதில் சிறிதும் நமக்கு ஐயமில்லை !
படத்தினை தியேட்டரில் சென்று பார்க்கலாம் ! ஜி.டி. நாயுடு இனிவரும் தலைமுறைக்கு ஒரு முன்மாதிரி !

திரை விமர்சனத்தில் ” ஜி.டி.என் ” என்னும் திரைப்படம் ஓர் உன்னதமான ஓர் மாமனிதனின் வாழ்க்கை வரலாற்றினை இன்றையத் தலைமுறைக்கு தன் படத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டிய படக்குழுவினர்களுக்கு எங்கள் பத்திரிக்குழுவினர் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையோடு ஆய்ந்து நல்ல தீர்ப்பை ! நல்ல தீர்வை தந்து இருக்கின்றது. நீங்கள் படத்தைப் பாருங்கள். அதுவரை நான் காத்திருப்பேன். அடுத்தப் படத்தின் திரைவிமர்சனத்
திற்காக ! அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ராஜேஷ் ஓகே டேக் ;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *