
லவ் ஓ லவ் ( Love oh Love ) திரைப்படத்தின் திரை விமர்சனம்
கதைநாயகன் கைநிறைய சம்பளம் வாங்கினாலும். வாங்கிய மாத சம்பளத்தை அப்படியே அப்பாவிடம் கொடுத்து விடும் குணம் படைத்தவர். என்ன தான் சம்பளம் வாங்குகின்றார் என்று யோசிக்கின்றீர்களா ? யோசிக்க வேண்டாம் நானே சொல்லி விடுகின்றேன். மாதச் சம்பளம் ரூபாய் 40,000/-
தன் தேவைக்கு அப்பாவின் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திக் கொள்கின்றார். தனக்காக தன் தேவைக்காக சொந்தமாக இருசக்கர வாகனத்தை வாங்காமல் அப்பா பயன்படுத்தும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவதை நினைக்கும் பொழுது அவர் எவ்வளவு பொறுப்பானவர் என்று தெரிகின்றது.
காதல் படுத்தும் பாடு ! நவ நாகரீக மங்கை காதலியாக கிடைத்து விட்டால் காதலனின் மணி பர்ஸ் காலியாகும். வரம்பு மீறி செலவு செய்தால் தரங்கெட்டுதான் போக முடியும். கடன்காரன் என்ற பட்டம் அவன் பெயருக்கு முன் ஒட்டிக் கொள்ளும். குடும்ப உறவுகள் விரிசல் அடையும். ரகுவரனுக்கு அவந்திக்காவுடன் காதல்… எல்லை மீறும் போது மேற்கண்ட செயல்கள் யாவும் இங்கு நிகழும். நிகழும் அல்ல நிகழ்ந்தது. வேலை பறிபோகிறது. கடன் சுமை மனத்தை அழுத்துகிறது. குடும்ப உறவு பிரிவு என்ற நிலைக்கு தள்ளப்படுகிறது.
நாயகி அவந்திக்காவின் வீண் ஆடம்பர செலவு கொஞ்சமும் பொறுப்பில்லாத குணம். இதனால் காதல் என்ற புனிதமான சொல் கறையாகி போகிறது. ரகுவரன் அவந்திக்காவை பிரிய முடிவு செய்கின்றான்.
ஆனால்… அவந்திக்கா ரகுவரனை விடுவதாக இல்லை. அவன் தனக்கு ஏற்றவன் ; தன் மனத்திற்கு பிடித்தவன். மனக் கோட்டை கட்டுகின்றாள். மனக் கோட்டை மண் கோட்டையாக மாற்ற அவள் விரும்பவில்லை. இரும்புக் கோட்டையாக மாற்ற நினைக்கின்றாள். அதனை செயலாற்ற முனைகின்றாள்.
அவந்திக்காவின் மன உறுதி ரகுவரனை சற்று தடுமாறச் செய்தாலும் இவளை தன் மனத்தில் இருந்து துரத்த வேண்டும். தன் வாழ்க்கையில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற முடிவோடு ஓர் நிபந்தனை விதிக்கின்றான். நிபந்தனைக்கு அவளும் கட்டுப்படுகின்றாள்.
நான்கு வருடம் உருகி உருகி காதலித்தவன். நான்கு வருடம் அவளுக்காக செய்த செலவினங்களை அவள் தனக்கு நான்கு மாதங்களில் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவளை திருமணம் செய்து கொள்வதாகவும் ஒருவேளை செய்யாமல் போனால் அவள் தன்னை விட்டு தன் வாழ்க்கை விட்டு வெளியேற வேண்டும் இது தான் அந்த நிபந்தனை
நிபந்தனைக்கு உட்பட்டு , கட்டுப்பட்டு அவந்திக்கா செயல்பட முனைகின்றாள். நான்கு மாதங்கள் காற்றில் கரையும் கற்பூரமாக கரைந்தன. காலச் சக்கரம் வேகமாக சுழன்றன.
அவந்திக்கா ரகுவரனின் கரம் பற்றினாளா ? முடியாமல் காற்றில் கரையும் கற்பூரமாக கரைந்து போனாளா ? விடைத் தேட தியேட்டருக்கு போனால் தான் தெரியும்.
எங்கள் குழு படத்தை பார்த்து விட்டது நீங்கள் பார்க்க வேண்டாமா ?
எங்கள் குழு படத்தை பார்த்து விட்டது நீங்கள் பார்க்க வேண்டாமா ?
ரகுவரனாக பவிஷ்.இது இவருக்கு இரண்டாவது படம். முதல் படத்திலேயே நடிப்பால் , நடனத்தால் தனி முத்திரையை படைத்து விட்டார்.
காதலி மீது கோபப்படுவது. தன் நடிப்பால் தன்னை தக்கவைத்துக் கொள்வது. ஆக்ஷன் காட்சிகள் , நடன காட்சிகள் இவைகளில் மிகைப்படுத்தாமல் அளவோடு நடித்து தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
அவந்திக்காவாக நாக துர்க்கா.பார்வைக்கு எளிமையாக இருந்தாலும் இரசிகர்களை கவரவில்லை. இயல்பான நடிப்பு இருப்பினும் இவருடைய நடிப்பு இரசிகர் மனத்தில் நிற்கவில்லை. முயற்சி செய்தால் முன்னேறலாம்.
திரைக்கதைக்கு வலு சேர்த்து இருப்பவர்கள் கதைநாயகனின் தந்தை வேடத்தில் கே.எஸ். இரவிக்குமார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் செல்வராகவன். மகளிர் அணித்தலைவியாக வனிதாவிஜயகுமார்.
இயக்குநரின் எண்ணங்களை திரைக்கு கொண்டு செல்பவர் ஒளிப்பதிவாளர் தான். ஒளிப்பதிவு சரியாக இருந்தால் எந்த படமும் ஓடும்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தன் கை வண்ணத்தால் காட்சிமைப்படுத்தி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றார்.
படத்தில் ஒரே சண்டைக் காட்சி தான். நாயகனை புழுதியில் உருள வைக்கின்றார். தத்ரூபமாக சண்டைக் காட்சியை எடுத்து நம்மை நெகிழ வைக்கின்றார்.
எதார்த்தமாக படமாக்கும் உத்தியை இவர் கையாண்டு வெற்றிக்கு உறுதுணையாக நிற்கின்றார். மக்கள் மனத்தில் நிலைத்து நிற்பார்.
பாடல் காட்சிகளில் தான் பயன் படுத்திய ஒளி… வண்ணம் இவையாவும் வணிக ரீதியாக வெற்றிப் பெற ஒளிப்பதிவாளர் உதவி செய்து இருக்கின்றார். இவரை மனதார பாராட்டுவோம்.
நடிகர்கள் :-
இராஜேந்திரன் :- கே.எஸ் . இரவிக்குமார்
இன்ஸ்பெக்டர் ஹரிச்சந்திரன் :- செல்வராகவன்.
லோகா :- வனிதா
ரகுவரன் :- பவிஷ்
அவந்திக்கா :- நாக துர்க்கா
ராதிகா :- ரம்யா
சாந்தி :- சௌந்தர்யா
மாறன் :- கதிர்
டாட்டூ :- அஸ்வத்
திரைப்பட வரவுகள் :-
எண்ணம் எழுத்து ஆக்கம் மகேஷ் ராஜேந்திரன்
தயாரிப்பு நிறுவனம் :- Zinema Media and Entertainment Ltd & Creative Entertainers & Distribution
தயாரிப்பு :-
தினேஷ் ராஜ் , ஜி.தனஞ்செயன்
நடிகர்கள் :- பவிஷ் நாராயண் , நாகதுர்க்கா , செல்வராகவன் , கே.எஸ்.ரவிக்குமார், வனிதாவிஜயகுமார் , ரம்யா , அஸ்வத் , சௌந்தர்யா , ஆதித்யா கதிர் மற்றும் பலர்
நிதிக் கட்டுப்பாட்டாளர் :- லலிதா வலசமுத்து
இசை :- ஃபாக்ஸன்
ஒளிப்பதிவு :- பி.ஜி.முத்தையா
எடிட்டிங் :- என்.பி.ஸ்ரீகாந்த்
கலை :- பா.மகேந்திரன்
சண்டைக் காட்சி :- அபிஷேக் ஸ்ரீனிவாஸ்
ஆடை வடிவமைப்பாளர் :- ஹர்ஷிகா ரமேஷ்
கதை விவாதம் :-
எஸ்.தேவராஜ் , ராஜேஷ் சுந்தரமூர்த்தி , ஜெய்சி , ஜெயபிரகாஷ் இளம்பரிதி , கோமதிராமலிங்கம் , வேல்முருகன் சுப்பிரமணி , ஜாஸ்மின் , ஹரீஜ்பி.
இணை இயக்குநர்கள் :- முத்தரசன் சண்முகம் , சூரியா தவமணிபாண்டியன்.
இணை இயக்குநர்கள் :- வி.ராமச்சந்தர் , என்.யுவராஜ் , எஸ்.கே. விக்ரம் , விமல் , சந்தோஷ் பாலாஜி
டப்பிங் :- கே.ஜெகன்- லே மேஜிக் லான்டர்ன் ஸ்டூடியோ
VFX :- D குறிப்பு :- மூர்த்தி
DI :- Vels – D ஸ்டூடியோ
வண்ணம் :- கே.எஸ்.ராஜசேகரன்
டிஎஃ, தொழில் நுட்பம் கலவை :- எஸ்.பி.நாராயணன்
ஒலி வடிவமைப்பு :- ஷ்ரேயாஸ்பட்
விளம்பர வடிவமைப்பு :- சதீஷ் டி.பி
தயாரிப்பு நிர்வாகம் :- ராஜேஷ்கண்ணா
தயாரிப்பு மேலாளர் :- சரவணகுமார் .V
கணக்குகள் :- கே.செல்லன்
நிழற்படங்கள் :- மகேஷ் ஜெயச்சந்திரன்
மக்கள் தொடர்பு :- ரேகா
விளம்பரம் :- என்.எஸ்.ஜெகதீசன் (DIGITALLY)
திரை விமர்சனத்தில் ” “லவ்ஓ லவ் ” என்னும் திரைப்படத்தின் தலைப்பு காதலை கூவி கூவி விற்பதை போல இருந்தாலும் காதல் படுத்தும் பாட்டை இயக்குநர் நயமாகவும் கருத்து ஆழமிக்கதாகவும் கூறி அசத்தி இருக்கின்றார். உண்மையான காதல் வாழ்க்கையின் அடிதளத்திற்கு வடிகால இருக்கும். இப் படத்தின் மூலம் நிரூபணம் செய்திருக்கின்றார் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்.எங்கள் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று விமர்சனம் செய்கின்றது. இனி வேறொரு படத்தில் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ; ராஜேஷ் ஓகே டேக்