
‘ ஐ , நோபடி’ ( I,NOBODY ) திரைப்படத்தின் திரை விமர்சனம் !
I,NOBODY -திரைப்படத்தின் திரை விமர்சனம்
கதைக் கரு :- வங்கி கொள்ளை சம்பவம் .
வங்கி கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து கதை நகர்கின்றது.
கதைச் சுருக்கம் :-
மூன்று கொள்ளையர்கள் வங்கி ஒன்றில் கொள்ளை அடிக்கின்றனர். அந்த நேரத்தில் அந்த வங்கியில் இருக்கும் பிரித்விராஜ் சுகுமாரனின் முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்து செல்கின்றனர்.
ஓரிடத்தில் பிரித்விராஜ் சுகுமாரனை இறக்கி விடுகின்றனர்.
கொள்ளையர் மூவரில் ஒருவரின் ஆதாரம் பிரித்விராஜ் கையில் சிக்குகிறது. விபத்து ஒன்றில் அந்த மூன்று கொள்ளையர்களும் இறந்து போகின்றனர்.
பிரித்விராஜ் சுகுமாரன் கையில் கிடைத்த ஆதாரத்தினை கையில் எடுக்கும் காவல் துறையினருக்கு உண்மையான கொள்ளையர்கள் யார் என்று தெரிந்தும் அவர்களை கைது செய்ய முடியவில்லை. காரணம் அவர்கள் விபத்து ஒன்றில் இறந்து போனார்கள் . அவர்கள் கொள்ளை அடித்த பணத்தினையாவது கைப்பற்றலாம் என நினைத்த காவல்துறையினருக்கு ஏமாற்றமே மிச்சம்.
பணம் பறிபோன வங்கியில்அப்பொழுது அங்கு இருந்த பிரித்விராஜ் சுகுமாரனுக்கு என்ன வேலை ? என்ற கேள்வி எழுகிறது .அந்த வங்கியில் பிரித்விராஜ் சுகுமாரனுக்கோ அவருடைய குடும்பத்தினருக்கோ எந்தவிதமான வங்கி கணக்கும் இல்லை.அப்படி இருக்கும் பொழுது அவர் அந்த வங்கிக்கு சென்றது ஏன் ? நெடுநேரமாக அங்கிருந்த அவர் அங்கு பணிபுரிந்த வங்கி ஊழியர்களிடம் எந்தவிதமான உதவியும் கேட்காமல் இருந்தது ஏன் ?
ஒருவேளை கொள்ளையர்களுக்கும் பிரித்விராஜ் சுகுமாரனுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா ? இப்படி கேள்விகள் அடுக்கடுக்காக காவல் துறையினர் மனத்தில் சந்தேகம் எழுகிறது. அதே சமயம் ஊடகங்கள் அந்த சந்தேகத்திற்கு திரைக்கதை அமைத்து வெளியிடும் செய்திகள் மூலம் பிரித்வி ராஜ் சுகுமாரனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சிக்கல்கள் அடுக்கடுக்காக எழுகின்றன.
சிக்கல்கள் சிலந்தி வலை போல பின்னலிட இந்த சிக்கல்களில் இருந்து பிரித்விராஜ் சுகுமாரன் எப்படி மீண்டு வருகின்றார் ? அவர் குடும்பத்தினரும் எப்படி மீண்டு வருகின்றனர் ? வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு போனது ? அதனை தேடும் முயற்சியில் காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கைகள் என்ன ? அந்தப் பணம் யாரிடம் சிக்கியது ? என்ற கேள்விகளுக்கு விடை காண படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பதற்றத்தின் உச்சத்தில் கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கும் கதைக் களம் ‘ ஐநோபடி ‘
( I NOBODY )
வங்கிக் கொள்ளைக்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி காட்சிக்கு காட்சி அதிர வைப்பது நொடிக்கு நொடி திக்..திக்… திகில் என மிரள வைப்பது பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பவது படக்குழுவினரின் தனி சாமர்த்தியமே !
திரைப்படக் கலைஞர்கள் :-
பிரித்விராஜ் சுகுமாரன் – ராஜீவன்
பார்வதி திருவோத்து – மீரா
ஹக்கிம் ஷாஜகான் – அனஸ்
அசோகன் – ஜேக்கப்
விஜயராகவன் – முதல்வர்
மதுபால் – சிஐ ஜோமோன்
சங்கர் ராமகிருஷ்ணன் – DYSP அஜித்
நட்சத்திரா – ஜியா
தொழில் நுட்பக் கரைஞர்கள் :-
இயக்குநர் – நிசாம் பஷீர்
தயாரிப்பு :- சுப்ரியாமேனன் , முகேஷ்ஆர். மேத்தா , சி.வி. சாரதி
தயாரிப்பு நிறுவனங்கள் :-
பிரித்விராஜ் புரடக்ஷன்ஸ் & E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ்
எழுத்தாளர் :- சமீர் அப்துல்
ஒளிப்பதிவாளர் :- தினேஷ் புருஷோத்தமன்
படத்தொகுப்பாளர் :- ரமீஸ் எம்.பி
இசை :- ஜேக்ஸ் பிஜாய்
நிருவாகத் தயாரிப்பாளர் :- ஹாரிஸ் தேசோம்
கலை :- அர்ஷத் நக்கோத்
ஆடை வடிவமைப்பு :- தன்யா பாலகிருஷ்ணன்
ஒப்பனை :- ரோனெக்ஸ் சேவியர்
சண்டைப்பயிற்சி :- யானிக் பென் , கலை கிங்சன் & அமித் ஜாலிபாஸ்டின்
ஒலி வடிவமைப்பு :- நிக்ஷன் ஜார்ஜ்
நேரடி ஒலிப்பதிவு :- விவேக் கே.எம்.
தலைமை இணை இயக்குநர்கள் :- பெனிலால் பி , பினு ஜி நாயர்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் :- கிரண் நெட்டயம்
VFX :- DTM
VFX தலைவர் :- லாவா குஷா
வண்ண அமைப்பாளர் ( COLORIST) :- சுரேஷ் ரவி
புகைப்படங்கள் :- ரோஹித் கே.சுரேஷ்
தலைப்பு வடிவமைப்பு :- சீரோ உன்னி
வடிவமைப்பு மற்றும் அனிமேஷன் :- சரத் வினு
விளம்பர வடிவமைப்புகள் :- Yellow tooth’s
சந்தைப்படுத்தல் :- catalyst
விளம்பர முன்னெடுப்புகள் :- POFFACTIO
கிரியேட்டிவ் ஏஜென்சி :- Ting
டீசர் ஒலி வடிவமைப்பு :- அரவிந்த் பாபு
மக்கள் தொடர்பு :- யுவராஜ்