
வி.ஆர் கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சி.ஆர்.ராஜேஷ் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘வஞ்சி’. இதில், நாயகியாக நைரா நிகார் நடித்திருக்கிறார். மாஸ்டர் ராஜநாயகம் மிக முக்கியமான அதிரடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லனாக டேன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜிபில்ராஜன் பிதேவ், தினேஷ், பண்னை பாலு, காரை நட்ராஜ், பிரியங்கா அழகன், ஷிவானி, மாடசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சஜித் சங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயகிருஷ்ணன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கலைகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். கணேஷ் பாபு, ஸ்டன்லி, நந்தினி பாடல்கள் எழுதியுள்ளனர். தம்பி சிவா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘வஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி, மாலை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, இசையமைப்பாலர் தினா, நடிகர் கூல் சுரேஷ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் இசக்கி ராஜா, பி.ஆர்.ஓ சங்க செயலாளர் விஜயமுரளி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர் விமலா ராஜநாயகம் “வஞ்சி இசை மற்றும் டிரைலர் வெளியீட்டுக்கு விழாவுக்கு வருகை தந்திருக்கும் திரையுலக ஜாம்பவான்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறை நண்பர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றேன்.” என்றார்.
விஜயமுரளி பேசுகையில், “ஒரு தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராஜநாயகம் ஒரு உதாரணம். மனைவியை தயாரிப்பாளராக்கி விட்டு படத்தில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். வியர்வை காயும் முன்பே கூலி கொடுப்பவர் ராஜநாயகம். இந்த படம் கேரளாவில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. இசை சிறப்பு, நட்சத்திரங்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள். இயக்குநரின் பணி திரையில் தெரிகிறது. இந்த மாதிரி சிறு முதலீட்டு படங்கள் ஓட வேண்டும், அதற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டி விடை பெறுகிறேன், நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் சஜித் சங்கர் பேசுகையில், “எனக்கு அதிகம் பேச தெரியாது, தமிழ் தெரியாது, நான் கேரளாவை சேர்ந்தவன். இந்த படத்திற்கு இசையமைக்கும் போது இயக்குநர் ராஜேஷ், எலக்ட்ரானிக் இசை வேண்டாம், பாடல்கள் நன்றாக புரிய வேண்டும், கேட்பதற்கு இனிமையாக இருக்க வேண்டும், என்று சொன்னார். அவர் சொன்னது போல் பாடல்கள் வந்திருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த ராஜநாயகம் சாருக்கு நன்றி.” என்றார்.
இயக்குநர் மற்றும் கதாநாயகன் சி.ஆர்.ராஜேஷ் பேசுகையில், “இரண்டு வருடங்களாக கஷ்ட்டப்பட்டு இந்த படத்தை எடுத்தேன். கேரளாவில் முக்கியமான லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எனக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள், அனைவருக்கும் நன்றி.” என்றார்.
பாடலாசிரியர் கணேஷ் பாபு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், எனக்கும் தமிழ் நல்லா பேச வராது, ஆனால் தமிழ் ரொம்ப பிடிக்கும். நான் ராஜா சாரின் பெரிய ரசிகன். எனக்கு ராஜேஷ் சார் தான் இந்த வாய்ப்பளித்தார். இசையமைப்பாளர் டியுன் கொடுத்து, முடியுமா ? என்று கேட்டார், முயற்சிக்கிறேன் என்று பாடல்கள் எழுதினேன். தமிழ் சரியாக பேச முடியவில்லை என்றாலும், தமிழை அதிகம் நேசிக்கிறேன், சிறு வயதில் இருந்தே நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். நிறைய தமிழ் படித்து இந்த பாடல்கள் எழுதியிருக்கிறேன். என் பாட்டில் தவறு எதாவது இருந்தால் மன்னித்து எனக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சங்கர் சார் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.
இயக்குநர் குணா சுப்பிரமணியம் பேசுகையில், “’சீசா’ படத்தின் இயக்குநர் நான். அந்த படத்தின் திரைக்கதையை எழுதிக் கொண்டிருந்த போது தான் எனக்கு ராஜநாயகம் சார் பழக்கம் ஆனார். அப்போது அங்க ஒரு பெண் இருந்தாங்க, அவங்கள பார்த்து நம்ம படத்துல அவங்கள ஹீரோயினா போடலாம், யார்னு விசாரிக்க சொன்னேன். அப்போது அவங்க மஞ்சக்குருவி என்ற படத்தில் நடித்து வருவதாக சொல்லிட்டு, அந்த படத்தின் தயாரிப்பாளர் கிட்ட பேச சொன்னாங்க. அப்போது தான் எனக்கு ராஜநாயகம் சார் அறிமுகம் ஆனார். அப்போது அவரிடம் நான் நிறைய பேசினேன். முதல் படம் என்பதால் எனக்கு ரொம்ப பதற்றமாக இருந்தது. அப்போது ராஜநாயகம் சார் கிட்ட நிறைய விசயம் கேட்டேன். எனக்கு நல்ல ஆலோசனைகள் எல்லாம் அவர் சொனார். எந்த எந்த இடத்தில் பார்த்து நடக்கனும், என்று சொல்லிக் கொடுத்தார். ரொம்ப பாசிட்டிவான மனிதர். என் படத்தில் அவர் நடிக்கனும் என்று கேட்டேன், அவர் பண்ணி கொடுத்தார். அதற்கு பணம் கூட அவர் வாங்கல. அவர் சினிமா காதலர். ஏற்கனவே ஒரு படம் பண்ணாரு. இப்ப இந்த வஞ்சி படத்துடன் மேலும் ஒரு படம் பண்ணிக்கொண்டு இருக்கிறார். நல்ல மனிதர், பாசிட்டிவான எனர்ஜி கொண்டவர், அவர் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும், அதற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும். இசையமைப்பாளருக்கு என் வாழ்த்துகள், இசை நன்றாக இருந்தது. படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் ராஜேஷுக்கு வாழ்த்துகள். பத்திரிகையாளர்கள் சினிமாவை வாழ வைக்க வேண்டும், அதற்கு அவர்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
சில இயக்குநர்களால் வர முடியவில்லை. தயாரிப்பாளர்களும் சிலரால் ஏமாற்றப்படுவதால் அவங்களும் வருவதில்லை. அதனால் மீடியா ஆதரவு கொடுத்து வாழ வைக்க வேண்டும். படம் சரியில்லை என்றாலும் கூட அவங்கள காப்பாற்றும் வகையில் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யார் வேண்டுமானாலும் இங்கு வரட்டுமே, வந்து ஜெயிக்கட்டுமே. இந்த படத்தை தயாரித்த விமலா ராஜநாயகம் மேடமுக்கு வாழ்த்துகள், நன்றி.” என்றார்.
தயாரிப்பாளரும், நடிகருமான மாஸ்டர் ராஜநாயகம் பேசுகையில், “என் இனிய தமிழ் மக்களே, என சிங்க குரலில், சிங்கார தமிழ் நடையில் துள்ளி குதித்து வரும் அருவி நீராய், பள்ளி குழந்தை முதல் பக்கு இடிக்கும் கிழவி வரை, சொல்லி மாலாது உன் திரைப்பணி. தீனிப்போட்டது நம் இயக்குநர் இமயம். உன் பெயரில் பாரதி இருந்ததால் என்னவோ உன் படங்களில் பெண்களுக்கு வீர உயிர் கொடுத்தாய். படித்தாண்டினாலும் பத்தினி பத்தினி தான் என்ற உன் வசனங்கள், உன் உடல் மண்ணில் புதைக்கும் போது என் கண்கள் குலமாகின. கல்லிப்பாலிலே தூக்கிலிடும் சிசுக்களை பள்ளியிலேயே பாடம் கற்று, பாமரணை மாற்றிய உன் உயரிய சிந்தனை, எண்ணங்கள், உன் இழைப்பை ஆழிப்பேரலை போல் அழ வைத்து சென்று விட்டாய்.
குருவையே மிஞ்சியவன் சிஷ்யன், பத்து முறை பார்த்தாலும் மறுமுறை பார்க்க வேண்டும் என்று கதையில் சூனியம் வைத்து தமிழ் மக்களை கட்டிப்போட்டவன் பாக்கியவான் பாக்யராஜ், பெண்ணியத்தை கண்ணியமாக காட்டி, பெண் நினைத்தால் மலையையும் மைல்கல்லாய் மாற்றுவார் என்று உன் படைப்புகள் தான் எங்களின் பாடங்கள். இந்த இரண்டு ராஜாக்களும் திரையில் இருந்தும், இந்த உலகில் இருந்து ஓய்வு எடுக்க சென்று விட்டீர், என் மக்களை நிலைகுனிய வைத்து விட்டீர். உங்கள் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும். உங்கள் வழியிலேயே ஒரு வீர மகளின் வாழ்க்கையை படம் பிடித்த ராஜேஷ் இயக்குநரை பாராட்ட வார்த்தை இல்லை.
வஞ்சி மகளின் இரத்த நானங்களை இசை நாதங்களாக வழி வகுத்த இசையமைழகன் சதிஷ் சங்கர், உங்கள் ராகங்களே வஞ்சியின் கீதங்கள். வஞ்சியின் இளவரசி காந்தகண் பேரழகி ஷாமல், உன் நடிப்பு வஞ்சியின் வெற்றிக்கு சமர்ப்பணம். மூன்று திரைப்படங்கள் எடுத்தாலும், வெற்றி கிட்டும் வரை விடமாட்டேன், என்று விடாமல் படம் எடுக்கும் விலமாஇந்த திரைப்படம் தொடர்ந்து வெற்றி பெறும் உன்னுடைய நிழலா, நன்றி வணக்கம்.” என்று கவிதை நடையில் பேசினார்.
இசையமைப்பாளர், பெப்சி துணைத்தலைவர் தினா பேசுகையில், “இந்த அருமையான வேலையில், நல்ல பாடல்களை போட்டு காண்பித்த இந்த டீமுக்கு என் வாழ்த்துகள். சதிஷ் சங்கர் கவலைப்பட தேவையில்லை, மலையாளத்தில் இருந்து இங்கு வந்து நிறைய பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீங்களும் அந்த வரிசையில் இடம் பிடிப்பீர்கள். தமிழகம் வந்தாரை வாழ வைத்து, அவர்களை பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும். அதனால் இசையமைப்பாளர் சதிஷ் சங்கர், கவலைப்பட தேவையில்லை.