
“முதற்கனல்” திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள்:-
சூர்யா – அஸ்வின் விஸ்வநாதன்
பாண்டி – ராஜேஷ்
சங்கர் – ராமசாமி
சரஸ்வதி – தனுஜா
சுமா – இலக்கியா
ஜோசப் – ஹரிஹரன்
தாஸ் – யோகேஷ்
ரமணா -ஆர்.வெங்கட
ரமணன்.
ராஜேந்திரன் – டி.ராஜேந்திரன்- மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
ஆர்.வெங்கட
ரமணன்
தயாரிப்பாளர் – ஆர்.போத்திராஜ்
ஒளிப்பதிவு :- கந்தசுவாமி கோபால்
பின்னணி இசை – மீரா லால்
படத்தொகுப்பு:- திஸ்யன் சாரதி
இணை இயக்குனர் – ஆர்.முத்துக்குமரன்
பிஆர்ஒ :- கே.எஸ்.கே.
செல்வகுமார்.
இப்போதைய காலக்கட்டத்தில் உருவெடுத்துள்ள போதை வலையில்
சிக்கி இளைஞர்கள் எப்படி சின்னாபின்னமா
கிறார்கள். என்பதையும், அதில் இருந்து மீண்டு
வருவதற்கான அவர்களது போராட்டம், அதனால்
பாதிக்கப்படுகிற அவர்களது குடும்பம் மற்றும் அதன் மூலம் உருவெடுக்கும் குற்ற
செயல்கள் ஆகியவற்றை அடிப்படையாக
கொண்டு உருவாகியுள்ள ‘முதற்கனல்’ படத்தை இளைஞர்களுக்காக
விழிப்புணர்வு படைப்பாகவும், மக்களை யோசிக்க வைக்கிறது.
உணர்வுப்பூர்வமான திரைப்படமாகவும் இயக்கியிருக்கிறார்
இயக்குநர் ஆர்.வெங்கட
ரமணன்.
சாதிக்க துடிக்கிற பள்ளி மாணவனான கதையின் நாயகன் அஸ்வின்
விஸ்வநாத், தவறான நட்பால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிறார்.
ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பிக்கும் அவரது போதைப் பழக்கம்
நாளடைவில் அவரையே ஆட்கொண்டு அடிமையாக்கி
விடுவது, குடும்பத்தினரிடம் இருந்தே அவரை தனிமைப்படுத்தி விடுகிறது.
இத்தகைய போதை வலையில் இருந்து மீள நினைக்கும் அஸ்வின்
விஸ்வநாத்தால் அது முடிந்ததா, அதற்காக அவர் எதிர்கொள்ளும்
போராட்டங்கள் என்ன, என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் “முதற்கனல்” திரைப்பட கதைக்களம்.
கதையின் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அஸ்வின் விஸ்வநாத்,
மகிழ்ச்சி, விரக்தி, வெறுப்பு, கோபம், குற்ற உணர்ச்சி என அனைத்துவிதமான
உணர்வுகளையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி
படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். போதை பழக்கத்தால்
இளைஞர்கள் எதிர்கொள்ளும் மன போராட்டங்களை
தனது உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் கனகச்சிதமாக
வெளிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் பார்வையாளர்
களிடம் கடத்த நினைத்த
கருத்துகளையும், கவனிக்க வைக்க நினைத்த
இளைஞர்களின் எதிர்கால சவால்களையும்,
அஸ்வின் விஸ்வநாத் உணர்ந்து நடித்திருக்கிறார்.
ராஜேஷ், ராமசாமி, தனுஜா, இலக்கியா, ஹரிஹரன், யோகேஷ்,
ஆர்.வெங்கட
ரமணன், டி.ராஜேந்திரன் என மற்ற கதாபாத்திரங்களில்
நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்து
திரைக்கதை ஓட்டத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கந்தசாமி கோபால், விழிப்புணர்வு படம்
இருந்தாலும், தனது கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம்
காட்சிகளை பரபரப்பான சூழல்
மிக்கதாக படமாகி பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்து விடுகிறார்.
கதாபாத்திரங்களின் மன போரட்டங்கள் மற்றும் உணர்வுகளையும் கனகச்சிதமாக காட்சிப்படுத்தி
அதை பார்வையாளர்
களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் மீரா லாலின் பின்னணி இசை
படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.
ஆர்பாட்டமான சத்தங்களை பயனபடுத்தாமல்,
அளவான பின்னணி இசை மூலம்.
உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்
கிறார். அனைவரும்
திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்.