“காதல் ரீசெட் ரிப்பீட்” திரைப்பட விமர்சனம்…

Share the post

“காதல் ரீசெட் ரிப்பீட்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- மதுமகேஷ், ஜியாசங்கர், அர்ஜுன் அசோகன்,

எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் ‌: –
விஜய்.

மியூசிக்: – ஹாரிஸ் ஜெயராஜ்.

ஒளிப்பதிவு:-
அரவிந்த் கிருஷ்ணா.

படத்தொகுப்பு:-
ஆண்டனி.

தயாரிப்பாளர்கள் : –
டி ஸ்டுடியோஸ் & மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ்.

கதாநாயகி ஜியா சங்கரை எங்கு பார்த்தாலும், பார்ப்பதை தனது

வாழ்வில் பெரும் பாக்கியம் என்ற மனநிலையில் இருக்கின்ற கதா நாயகன் மதும்கேஷ், அவரை

ஒருதலையாக காதலிக்கிறார். ஜியா சங்கர், அவரது நண்பர் அர்ஜுன்

அசோகனை காதலிக்கிறார். இடையே ஜியா சங்கர் மரதியால் பாதிக்கப்படுகிறார்.

தூக்கத்தில் இருந்து எழுந்தது. முன்னால் நாளில் நடந்த எல்லாவற்றையும், மறந்து விடுகின்ற

நிலைக்கு வந்து விடுகிறார். இதனால் தான் யார் ? என்ன தெரியாமல்

ஒவ்வொரு நாளும் தவிர்க்க அவரிடம், காதலனாக

அறிமுகமாகி பயணிக்க தொடங்குகிறார்

மதும்கேஷ். அவரது இந்த பொய், ஜியா சங்கரின் வாழ்க்கையில்

எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன, என்பதை முக்கோண காதல் கதையாக சொல்வது தான் “
காதல் ரீசெட் ரிப்பீட்”

தனது மனதில் காதல் இருப்பினும் அதை வெளியே தெரியாமல் வருத்துடன்

பயணிக்கின்றது கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக

பொருத்தமா இருக்கிறார் கதாநாயகன் மதும்கேஷ்.

இறுக்கமான முகம், நடவடிக்கைகளில் பொறுமை என்று

தனியாக தெரியும் குணாதிசயங்கள்
கொண்ட

கதாபாத்திரத்தில் மிக கனகச்சிதமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகை ஜியா சங்கர், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும்

பார்வையாளர்களை கவர்ந்து ஈர்த்து விடுகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள காதல் கதை என்பதால் அவருக்கு

நடிக்க அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்
கின்றன. அனைத்து வாய்ப்புகளையும்

சரியாக பயன்படுத்தி பார்வையாளர்கள்

மனதில் எளிதில் ஈசியா இடம் பிடித்து விடுவார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அர்ஜுன் அசோகன்,

தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

சிறிய வேடம் என்றாலும் விஜி சந்திரசேகர்,

ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் அனுபவம் மிக்க நடிப்பில் மற்றும் திரை இருப்பில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

படம் முழுவதும் வெளிநாட்டில் நடப்பதால், அழகான

இடத்தில் தேடிப்பிடித்து காட்சிகளை

படமாக்கியிருக்
கிறார்கள். எங்கு கேமரா வைத்தாலும்,

பசுமையும், பழமையும் நிறைந்த இடங்களாக
இருப்பதால்

ஒளிப்பதிவாளர்
அரவிந்த்கிருஷ்ணா, அத்தனை அழகையும் கொஞ்சம் கூட

சிந்தாமல் சிதறாமல் தன் கேமராவில் பதிவு செய்து

நமது கண்களுக்கு கலர் காட்சி விருந்து படைத்திருக்கிறார்.

ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள், பின்னணி இசை

மற்றும் முக்கியமான பீஜியம்கள் ஏற்கனவே அவரது இசையமைப்பில்

வெளியான படங்களின் பாடல்கள்

பயணித்தாலும், காதல் கதைக்கு உயிரூட்டியிருக்
கிறது.

படம் முழுவதும் நிரம்பியிருக்கின்றது காதல் உணர்வுகளையும்,

கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பார்வையாளர்கள் மனதில்

இறக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி.

முக்கோண காதல் கதையை புதிய வடிவில் கொடுக்க

முயற்சித்திருக்கிறார் இயக்குநர் விஜய், எளிமையான காட்சிகளை

திரைக்கதையின் முக்கியத்துவமான காட்சிகளை

வைத்துக்கொண்டு படத்தை எடுத்து இருக்கிறார்.

அழகான காதல் கதை, அதை சுமந்து செல்லும்

கதாபாத்திரத்தின் தேர்வும் சரியாக அமைந்திருந்திருப்பதால்

ஸ்காட்லாந்து என்ற அழகு நிறைந்த கதைக்களத்தில் அவற்றை சொல்லும்

அளவில், திரையில் தெரியும் பிரமாண்டம் திரைக்கதையில்

இல்லாதது படத்திற்கு பெரும் பலவீனம்.

கதாநாயகியின் நடிப்பில்,காதலை அவர் உணர்ந்த பிறகு ஏற்படும்

மாற்றங்கள் ஆகியவை படத்தை ஓரளவு ரசிக்க வைக்கின்றன.

படம் பார்த்ததில், “காதல் ரீசெட் ரிப்பீட்” காதலர்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *