



.
Red Hawks கிரிக்கெட் தொடர் – செங்குன்றம், பாடியநல்லூர்
செங்குன்றம், பாடியநல்லூரில் நடைபெற்ற Red Hawks கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு Legend Saravanan ரசிகர் மன்றத்தின் அகில இந்திய செயலாளர் பி. சுதாகர் தலைமையில் இன்று கோப்பையும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி, அவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் Cool Suresh பேசுகையில், “ஒவ்வொரு இளைஞனுக்கும் விளையாட்டு மிகவும் அவசியம். விளையாட்டு உடல்நலத்தையும், மனநலத்தையும் காக்கிறது. ஒழுக்கம், பொறுமை, முயற்சி போன்ற நல்ல பண்புகளை வளர்க்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும், Legend Saravanan அவர்களின் கடின உழைப்பை எடுத்துக்காட்டாக கூறிய அவர், “இன்று வரை இளமையாகவும், உற்சாகமாகவும் இருப்பதற்கான முக்கிய காரணம் சிறுவயதிலிருந்தே விளையாட்டிலும் உடற்பயிற்சியிலும் காட்டிய ஆர்வமும் ஒழுக்கமும் தான். விளையாட்டு நம் உடலை பாதுகாக்கும், மனதை தெளிவுபடுத்தும்” என குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சி இளைஞர்களுக்கு விளையாட்டின் அவசியத்தை உணர்த்தும் விதமாக சிறப்பாக நடைபெற்றது.