கடைசி விவசாயி படத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கும் மாநில திரைப்பட விருதை

Share the post
 கடைசி விவசாயி படத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கும் மாநில திரைப்பட விருதை 

(சிறந்த துணை நடிகை )
முழுமனதோடும் தாழ்மையுடனும் ஏற்றுக் கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய இந்த அங்கீகாரத்திற்காக தமிழ்நாடு அரசுக்கும் படக் குழுவினருக்கும் மற்றும் மாநில திரைப்பட குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது தாய் மண்ணில் இந்த அங்கீகாரம் கிடைத்தது என்னால் வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கும் மிகையானது.
கடைசி விவசாயி போன்ற உயிரோட்டமுள்ள எதார்த்த படைப்பின் மீது பெரும் நம்பிக்கையை வைத்து உருவாக்கிய விஜய் சேதுபதி ப்ரோடக்க்ஷன், டிரைபல் ஆர்ட்ஸ் மற்றும் திரு.விஜய் சேதுபதி அவர்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.
மேஜிஸ்ட்ரேட் மங்கையர்கரசி என்ற கதாப்பாத்திரத்தை என் மீது நம்பிக்கையை வைத்து கொடுத்த என் ஆசிரியர், இயக்குனர், எழுத்தாளர் எம் மணிகண்டன் அவர்களுக்கு என் சிறம்தாழ்ந்த நன்றிகள். அவருடைய தெளிவான பார்வையும் சிந்தனையும் ஆழமும்தான் மங்கையர்கரசி.

என்னுடன் இணைந்து நடித்த அனைத்து நடிகர்களுக்கும் குறிப்பாக ஒவ்வொரு காட்சியிலும் தன் இயல்பில் இருந்து வாழ்ந்த நல்லாண்டி ஐயாவிற்கும் அனைத்து படக்குழுவினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இத்திரைப்படம் ஆகச்சிறந்த படைப்பாக உருவாக முழுக்க முழுக்க காரணம் மொத்த படக்குழுவினருந்தான். ஆதலால் இந்த விருதை என்னுடையது என்று மட்டும் சொல்லிவிட முடியாது எங்கள் அனைவருக்குமானதுதான்.
கடைசி விவசாயி திரைப்படம் நான்கு விருதுகளை தமிழ்நாடு மாநில அளவில் பெற்றுள்ளது என்பதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன். இந்த விருது படத்தை மனதார ஏற்றுக் கொண்டு மங்கையர்கரசிக்கு ஒரு நீங்காத இடத்தை கொடுத்த ஒவ்வொரு மக்களுக்கும்தான். ஏனென்றால் அவர்கள் அங்கீகரித்ததின் வெளிப்பாடுதான் மாநில விருதுகள். வியாபார ரீதியான அங்கீகாரமல்ல மாநில விருது. இது என் வாழ்க்கையின் முக்கியமான மையில்கல். மிகுந்த மகிழ்ச்சியுடனும் பொறுப்புணர்வுடனும் இதை ஏற்றுக் கொள்கிறேன். இந்த விருதை வாங்கும் மற்ற வெற்றியாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடனும் நன்றியுடனும்
டாக்டர் ரேச்சல் ரெபேக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *