

“சிறை” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் :- விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராசா மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – சுரேஷ் ராஜகுமாரி.
மியூசிக் : - ஜஸ்டின் பிரபாகரன்.
ஒளிப்பதிவு :-
மாதேஷ் மாணிக்கம்.
படத்தொகுப்பு :-
மிலோமின்ராஜ்.
தயாரிப்பாளர்கள் :- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ – எஸ்.எஸ்.லலித் குமார்
சிவகங்கை மாவட்டத்தில் சார்ந்த கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில்
பல வருடங்களாக இருக்கும் எல்.கே.அக்ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்
அந்த பொறுப்பு விக்ரம் பிரபு தலைமையிலான காவலர் குழுவுக்கு வழங்கப்படுகிறது.
போகும் வழியில் காவலர்கள் சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள கிறார்கள், அதன் மூலம் கைதி
அக்ஷய் குமாரை தொலைத்து விடுகிறார்கள்.
போலீஸ்
துப்பாக்கியுடன் அவர்களிடம் இருந்து தப்பித்த அக்ஷய்
குமார் மீண்டும் பிடிபட்டாரா ?, கொலை குற்றவாளியான அவரது பின்னணி
என்ன ?, அவர் யாரை எதற்காக கொலை செய்தார்? , இதனால் விக்ரம் பிரபு
எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன ? ஆகிய கேள்விகளுக்கான
பதிலை தனது தாய் யை அடித்தவனை மீண்டும் அவனை தள்ளி விடும் போது தரையில் விழுந்து
மரணமடைகிறார்.
அது கொலையாக மாறுகிறது. இந்த
கொலை வழக்கு மாறியது. இதுல விடுபட்டான . என்பதை உண்மை சம்பவத்தை
விறுவிறுப்பாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்வது தான் “சிறை”. கதைக்களம்.
இந்த கதையின் நாயகனாக இல்லாமல் ஒரு கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் விக்ரம் பிரபு,
தனக்கான கதையாக இல்லாமல் நல்ல கதையின் கருவை கொண்டு தான் இருக்க வேண்டும்,
என்ற எண்ணத்தில் இந்த படத்தில் நடித்திருப்பது அவரது சிறந்த நடிப்பு
நிரூபித்திருக்கிறது. இதற்கு முன்பும் காவலர் கதாபாத்திரத்தில்
நடித்திருந்தாலும், இதில் முழுக்க மூச்சாக புதிய வடிவமைப்பில் விக்ரம் பிரபுவை
பார்க்க முடிவதுடன் அவரது நடிப்பில் மிக அதீத முதிர்ச்சியை தெரிகின்றன.
தப்பித்து செல்லும் கைதியை பிடிக்கும் முயற்சி மற்றும் அதை தொடர்ந்து எதிர்கொள்ளும்
பிரச்சனையை பேசுவது, நீதிமன்றத்தில் பேசுவது என படம்
முழுவதும் வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி ஆகியவற்றின் மூலம்
ஒரு நடிகர் என்பதை தாண்டி, ஒரு காவலராக பார்வையாளர்கள் மனதுக்குள் விக்ரம் பிரபு பதிந்து விடுகிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக இளம் நடிகர் எல்.கே.அக்ஷய் குமார், ஒரு
நடிகருக்கான பயிற்சியை மிக சிறப்பாக
மேற்கொண்டிருக்
கிறார் என்பதை தனது ஒவ்வொரு
அசைவுகளிலும் வெளிக்காட்டியிருக்
கிறார். பள்ளி பருவம், இளம் பருவம் மற்றும்
சிறை கைதி என தனது தோற்றத்தில் மாற்றத்தை
வெளிப்படுத்தியிருப்பவர், தனது நடிப்பு மூலம் பார்வையாளர்கள்
கவனத்தை ஈர்த்து, கலங்க வைத்து விடுகிறார்.
இரண்டாம் பாதி படம் முழுவதையும் தன் எதார்த்தமான நடிப்பு மூலம் தாங்கிப்
பிடித்திருக்கிறார் அக்ஷய் குமாரின் நடிப்புக்கு
திரையரங்கில் அப்ளாஷ் கிடைப்பது உறுதி.
நாயகியாக நடித்திருக்கிறார் அனிஷ்மா அனில்குமார், எளிமையான அழகு மற்றும் குழந்தைத்
தனமான சிரிப்போடு கவனம் ஈர்ப்பதோடு, அளவான நடிப்பு மூலம் தனது
கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
விக்ரம் பிரபுவின் மனைவியாக நடித்திருக்கும்
ஆனந்த தம்பிராஜாவின் திரை இருப்பின் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள்
கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம்
கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது. பின்னணி இசை
கதாபாத்திரமாக பயணித்து
திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா இருளில் ஒளி மாயாஜாலத்தை
நிகழ்த்திய இருக்கிறார்கள். கதாபாத்திரங்களை நடிகர்களாக இல்லாமல், கதைக்களத்தில்
வாழும் மனிதர்களாக பார்க்கும் விதத்தில் காட்சிகளை
படமாக்கியிருக்கிறார் மாதேஷ் மாணிக்கம், எளிமையான கதைக்கு தனது
கேமரா மூலம் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
காவல்துறையின் பின்னணியில் ஒரு எளிமையான காதல் கதை என்றாலும்,
அதை தனது படத்தொகுப்பு மூலம் விறுவிறுப்பாக மட்டும் இன்றி பார்வையாளர்கள்
மனதுக்கு நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் பிலோமின் ராஜ். அவரது
படத்தொகுப்பு மூலம் சில திருப்பங்களுடன் பயணிக்கும்
திரைக்கதை, சில இடங்களில் பார்வையாளர்களை பதற்றத்தின்
உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தமிழ் எழுதிய கதை சாதாரணமாக
இருந்தாலும், அதை தனது திரைக்கதை மற்றும் இயக்கம் மூலம் மிக
வலிமையான படைப்பாக
கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.
கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்புகள் ஆகியவற்றின் மூலம் படத்தை வேகமாக பயணிக்க வைத்தாலும்,
காவல்துறை பற்றிய விவரங்களை நுணுக்கமாகவும், எதார்த்தமாகவும்
காட்சிப்படுத்தியிருப்பதோடு, காதல் கதையை உணர்வுப்பூர்வமாக
கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை படம் ஈர்த்து விடுகிறது.
முதல் பாதி படம் வேகமாக பயணித்தாலும், சில இடங்களில் சிறு தொய்வு ஏற்படுகின்றன.
ஆனால், அக்ஷய் குமார் – அனிஷ்மா ஜோடியின் காதல்
கதை மற்றும் அவர்களது நடிப்பு அந்த தொய்வை மறைத்து
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறது.
நடிகர்கள் தேர்வு மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம், சிறு கதை
என்றாலும் அதற்கான திரைக்கதையை
சுவாரஸ்யமாக எழுதி, விறுவிறுப்பாக சொல்லிய விதம் என ஒரு சிறந்த பொழுதுபோக்கு
திரைப்படமாகவும், எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்கள் சார்ந்த
அரசியலையும் பேசும் ஒரு படைப்பாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியை தமிழ்
சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம்.
படம் பார்த்தத்தில், ‘சிறை’ தமிழ் சினிமாவுக்கு சிறப்பு
சேர்க்கும்.வகையில் காதலுக்கு முக்கியத்துவம்
கொடுத்து ரசிகர்களின் வரவேற்பு தந்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்…
அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படம்…”சிறை”