இந்தியாவில் உள்ள நெசவாளர்கள் அனைவருக்கும் மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 7 வது தேசிய கைத்தறி தின வாழ்த்துக்கள்.

Share the post

இந்தியாவில் உள்ள நெசவாளர்கள் அனைவருக்கும் மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 7 வது தேசிய கைத்தறி தின வாழ்த்துக்கள்.


கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் பின்வரும் நெசவு மையங்களின் பொருத்தமான அடையாளங்களை கண்டறிந்து குறிப்பிடுக? என்ற வரலாற்று பாடத்தில் வரும் கேள்விக்கு விடையளிக்க, பள்ளி காலங்களில் விடையை மனப்பாடம் செய்த நினைவு நமக்கு உண்டு. பல வருடங்களுக்கு பிறகு அந்த மையங்களுக்கு நேரடியாக பயணிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவின் பழங்கால கிராமம் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு சென்றோம். அதன் மூலம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கைத்தறி நெசவு பணியினையும், உள்நாட்டு நெசவு நடைமுறைகள் எவ்வாறு இன்றைய நவீன நெசவு தொழில்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்பதை கண்டு வியந்தோம்.
இந்த நம்ப முடியாத பயணத்திற்கு எங்களை அழைத்து சென்ற இயக்குநர் எட்மண்ட் ரான்சனுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மேலும் இந்த பயணத்தை மக்களிடம் எடுத்து செல்ல உறுதுணையாக இருக்கும் எடிட்டர் ஆர்.கே.செல்வா மற்றும் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி அவர்களின் முயற்சிகளையும் நாங்கள் பாராட்ட விரும்புகிறோம். இந்த முயற்சி முழுமையடைய பக்க பலமாக இருந்த குழுவினர் அனைவருக்கும் நன்றி. பிரான்ஸின் மார்க்கஸ் தயாரிப்பில் உருவாகும் “ லைஃப் இன் லூம்” என்ற ஆவணத்தின் முதல் பார்வையை இந்த தேசிய கைத்தறி தினத்தன்று வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *