” மாஸ்க் ” திரைப்பட விமர்சனம் …

Share the post

” மாஸ்க் ” திரைப்பட விமர்சனம் …

நடித்தவர்கள் :-
கவின்,ஆண்ட்ரியா,
ருஹானிஷர்மா, சார்லி, பவன், சந்தோக், ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், சுப்ரமணிய சிவா, ரமேஷ் திலக், அர்ச்சனா, கல்லூரி வினோத், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
விகர்ணன் அசோக்.

மியூசிக்:- ஜி.வி.
பிரகாஷ்குமார்.

ஒளிப்பதிவு:-
ஆர்.டி.ராஜசேகர்.

படத்தொகுப்பு:-
ஆர்.ராமர்.

தயாரிப்பாளர்கள்:-
த ஷோமஸ்ட் & பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்.

இந்த படத்தின் ஹீரோவாக கவின் தனியார் துப்பறியும் நிபுணராக டிடெக்டிவாக இருக்கும் . கவின்

நாயகன் தன்னிடம் வருகின்ற வாடிக்கையாளர் களுக்கு எந்த மாதிரியான

வேலைகளை தேவைக்கு எற்ப செய்து தருபவர்.

வாடிக்கையாளர்கள் மட்டும் இல்லாமல் யார் தன்னிடம் வந்து

வருகிறவர்களை அவர்களிடம் இருந்து பணத்தை அபேஸ் பண்ணிடுபவர்.

அதனால் பணம் மட்டும் தான் உலகத்தில் ஒன்று தேவை என்கிற நோக்கத்தில்

வாழுகின்ற நபர்தான் இந்த கவின். இவருக்கு

இந்த சமூகத்தில் நல்லதே செய்ய விரும்பாத மூன்று கதாபாத்திரத்திரங்
களில் நடைபெறும் படத்தின் கதைக்களம்.

ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது இவருக்கு ஒரு

குழந்தை இருக்கிறது. ஆனால் கணவன் மனைவி இருவரும்

பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில், ருஹானி ஷர்மாவை பார்க்கும்
போது
கவினுக்கு அவருடன் காதல் வருகிறது. அவருடன்‌ நெருங்கி பழகுகிறார். இருந்தாலும் ருஹானிக்கு

திருமணம் ஆகிவிட்டது, என்றாலும் அவருக்கு அந்த

திருமணத்தில் எந்த விருப்பம் இல்லை

என்று கூற, இருவரும் நெருக்கமாக பழகு வருகிறார்கள்.

இன்னொரு பகுதியில் மறுபக்கம், பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியாக நடக்கும்

தவறுகளை எதிர்த்து போராடி, அவர்களுக்கு மீட்டு எடுத்து நல்வாழ்வு

அமைத்து தரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும்

ஒருவராக வருகிறார் ஆண்ட்ரியா.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அவர்களை நன்றாக படிக்க வைக்கிறார். வெளியே இவருக்கு இப்படி ஒரு முகம்

இருப்பினும், இவருக்கு இன்றொரு முகம் இருக்கிறது.

தன்னிடம் இருக்கும் பெண்களை வைத்து கொண்டு அரசியல்

வாதிகளுக்கு எல்லா
தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.

யாருக்கும் தெரியாமல் அந்த வீடியோகளை

தேவைக்கு எடுத்து வைத்துக் கொள்கிறார்.

தேர்தலில் போது போட்டியிடும் அரசியல்வாதியான பவன்,

ஆண்ட்ரியாவிடம் ரூ. 440 கோடியை கொடுத்து தொகுதி

முழுவதும் இந்த பணத்தை யாருக்கும் தெரியாமல்

அனுப்பவேண்டும் என சொல்ல அந்த
பணத்தை தனது சூப்பர் மார்க்கெட்டில்

ஆண்ட்னியா பதுக்கி வைக்கிறார், அந்த சூப்பர் மார்க்கெட்டை

எம்.ஆர். ராதா மாஸ்க் போட்டுக்கொண்டு
ஒரு கும்பல்கொள்ளை அடிக்கின்றன. இது தெரியாமல், இருந்த

கொள்ளை அடிக்கும் இடத்திற்கு கவின்
வந்துவிடுகிறார்.

பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பலில்

இருந்த அனைவரும் வெளியேற, அதே நேரத்தில்

அங்கிருந்து ருஹானி ஷர்மா‌யின் வீட்டிற்கு கவின் வருகிறார்.

அதே நேரத்தில் ருஹானி கணவரும் வீட்டிற்கு வர, தனது கணவருக்கு

தெரியாமல் கவினை வீட்டை விட்டு அனுப்ப ஷர்மா முயற்சி செய்யும் போது,

வீட்டிற்கு வந்த ஷர்மா கணவரின் பேக்ல எம்.ஆர். ராதா மாஸ்க் இருப்பதை கவின் பார்த்து, சூப்பர்

மார்க்கெட்டில் கொள்ளையடித்தது இவன் தானா என

அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இதன்பின் என்ன நடந்தது? ரூ. 440

கோடியை கொள்ளையடிக்க என்ன காரணம்?
அங்கே ‌தீடீர்ரென்று

ருஹானி கிழே விழந்து இறக்கிறார்
இதிலிருந்து கவின் கொலை வழக்கில் தப்பித்தாரா

இல்லையா? என்பதை படத்தின் மீதி கதைக்களம்..

அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் எடுத்துக்கொண்ட கதைக்களம், கதாபாத்திரங்களின்

வடிவமைப்பு ஆகியவற்றில் பட்டையை கிளப்பியுள்ளார்.

மணி ஹெய்ஸ்ட் பாணியில் மாஸ்க், உடை எல்லாம் இருந்தாலும் கூட, அந்த

கொள்ளைக்கான காரணம் வலுவாக இருப்பதே படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

அதை கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் ரசிக்கும்படியாகவும்

ஏற்றுக்கொள்ளும்படியாகவும் வைத்தது இன்னும் சூப்பர், வாழ்த்துக்கள்
இயக்குநர் விகர்ணன்.
ஆனால், திரைக்கதை

இன்னும் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்திருக்கலாம் என தோன்றுகிறது,

சில இடங்களில் குழப்பமாக இருந்ததால்,

கொஞ்சம் நேரம் சலிப்பு வருகிறது. அதே போல் படத்தின்

படத்தொகுப்பு இவ்வளவு அதிகமாக என தோன்றுகிறது. கவின் மற்றும்

ஆண்ட்ரியா கதாபாத்திரங்களின் வடிவமைப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்!

ஹீரோ என்றால் நல்லவன் மட்டும் இருக்க வேண்டும் என்பது அவசியம்

இல்லை. கெட்டவன்தான்,என கவின்

சொல்லும் வசனம் அவருடைய கதாபாத்திரத்திற்கு பக்கப்பலமாக அமைந்து உள்ளது.

தனது தேவையை நிறைவு செய்வது, தனது புத்திசாலி தனத்தை பயன்படுத்தி

மற்றவர்கள் மூலம் அதை செய்து கொள்ளும்
ஆண்ட்ரியாவின்

பாத்திரம் படைப்பு படத்திற்கு பெரிய பலம். அதே மாதிரி

கவின் – ஆண்ட்ரியா எதிரெதிரே நின்று மோதிக்கொள்ளும்

காட்சிகளும் நன்றாக இருந்தது. படத்தில் வரும் பல கதாபாத்திரங்
களுக்கு நல்லவன்,

நல்லவள் என்கிற முத்திரை இல்லாமல், அனைவரும் சுயநலவாதிகள் என காட்டியது சிறப்பு

மேலும், இப்படிப்பட்ட சுயநலமாக
மனிதர்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு

பாதிக்கப்படும் மிடில் கிளாஸ் எதிர்த்து அடிக்க தொடங்கினால் என்ன நடக்கும் என்று காட்டிய விதம்தான்

படத்தின் மிகப்பெரிய மாஸ் எலிமெண்ட். குறிப்பாக கிளைமாக்ஸ் வேற லெவல்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையில் இன்னும் நன்றாக ஸ்கோர்

செய்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சியில் வந்த பாட்டு படத்தை வேற

லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டது.

ஆனால், மற்ற காட்சிகளில் பின்னணி இசை சொல்லும் அளவிற்கு

இல்லை. பாடல்கள் சூப்பர். ஒளிப்பதிவு படத்திற்கு ஹைய் மிகப்பெரிய பலம்.

படத்தொகுப்பில கொஞ்சம் பொறுமையாக குறைத்து

இருந்திருக்கலாம்.
இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

கள்வனின் கையில் நல்லவன் கிடைக்கும் போது தானாகவே

நல்லதாக அமையும். என்பதை விளக்கும் திரைப்படம்

அனைவரும் வெண்திரையில் காணுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *