
“மிடில் கிளாஸ்” திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள் :- முனிஷ்காந்த், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குறைஷி, மாளவிகா அவினாஷ், கோடாங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி
மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – கிஷோர் முத்துராமலிங்கம்.
மியூசிக் : – பிரணவ் முனிராஜ்.
ஒளிப்பதிவு:-
சுதர்சன்
ஸ்ரீனிவாசன்
படத்தொகுப்பு:-
ஷான் லோகேஷ்.
தயாரிப்பாளர்கள்:- குட் ஷோ, ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி – தேவ், கே.வி.துரை
சென்னையில் வாழ்வும் நடுத்தரக் குடும்பத்தில் ஏற்படும் சில பணப் பிரச்சனைகள் பற்றிய திரைப்படம்
அனைத்துக்கும் குடும்பத்தில் நடக்கும் பொருளாதாரம் பற்றாக்குறையே மிக முக்கியமான
காரணமாக இருப்பது. பணம் தான் அது இருந்தால் நடுத்தரக் குடும்பத்தின்
பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து விடலாம். அப்படிப்பட்ட
நடுத்தரக் குடும்ப வாழ்க்கையில் சிக்கி தவிக்கும் முனீஷ்காந்த் – விஜயலட்சுமி
தம்பதியருக்கு, தங்களது பொருளாதார பிரச்சனைகளில்
இருந்து மீள்வதற்கான ஒரு மிக பெரிய வாய்ப்பு கிடைக்கின்றன.
ஆனால், தனது அஜாரக்கிரதையால் முனீஷ்காந்த், அந்த வாய்ப்பை இழந்து விடுகிறார்.
இதனால், குடும்பத்தில் மேலும் பிரச்சனைகள் அதிகரிக்கிறது. இழந்த வாய்ப்பை திரும்ப
பெறுவதற்கு முயற்சிகளில் ஈடுபடும் போது முனீஷ்காந்த் அதுல வெற்றி பெற்றாரா ?, இல்லையா ? என்பதை, ஒரு குடும்பத்தின்
தனிப்பட்ட வாழ்க்கையாகவும்,
சமூகத்தின் ஒரு பகுதியாகவும் சொல்வது தான் “மிடில் கிளாஸ்.”ஃபேமிலி ஃப்ளாஷ் அதுல ஒன்னு தனது அப்பாவின்
தன்னுடைய எழுதிய பத்திரம் விபரம்கள் அதைக் கொண்டு பயணம்.தொடரும்
காசோலை பற்றிய
ட்ராவல் தனது பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த போராட்டம் தொடரும் காசோலை யை மற்றோரு அதே மாதிரி பைக்கில் வைத்து தடுமாற்றம் வந்ததை விளைவில் எற்பட்ட தொடங்கி கடைசியில் வென்றது.
காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த முனீஷ்காந்த்,
கதையின் நாயகனாக நடித்திருக்கிறார், அதற்காக எந்த ஒரு புதிய முயற்சியிலும்
ஈடுபடாமல், வழக்கமான நடிப்பை கொடுத்து தான் ஏற்று
நடித்த கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறார்.
கதையின் நாயகியாக, முனீஷ்காந்தின்
மனைவியாக நடித்திருக்கும் விஜயலட்சுமி, நடுத்தரக் குடும்ப பெண்களின் மனநிலையை பிரதிபலிக்கும்
வகையில் சிறப்பாக நடித்திருந்தாலும், சில இடங்களில் நடிப்பில்
கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் முகபாவம் கொண்டு
எதார்த்தத்தில் மேலோங்கி நிற்கிறார்.
காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, வேல ராமமூர்த்தி, மார்வாடி
முதலாளியாக நடித்திருக்கும் நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களும்
அறம் மற்றும் மனிதம் போற்றும் மக்களாக வலம் வந்து
பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
இசையமைப்பு பிரனவ் முனிராஜ் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில்
அமைந்திருக்
கின்றன பின்னணி
இசை காட்சிகளுக்கு உயிரூட்டும் வகையில் பயணித்திருக்
கின்றன.
ஒளிப்பதிவு சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் கேமரா நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை
எந்தவித கலப்படமும் இல்லாமல் நம் கண் முன் நிறுத்தி வைத்திருக்கிறார்.
குடும்ப நாடக பங்கான பாணியிலான கதை என்றாலும், அதை பரபரப்பாக இல்லாமல் நகர்த்தி
செல்லும் வகையில் காட்சிகளை
தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற
கேள்வியுடன் சில இடங்களில்
பார்வையாளர்களை உறையவைத்து விடுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கிஷோர் முத்துராமலிங்கம்,
நடுத்தரக் குடும்ப வாழ்க்கையை வைத்து எதார்த்தமாக பேசியிருக்கிறார்.
தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள், அதை பிறர்க்கு பகிர்ந்தளித்து வாழ்வதே
நிறைவான வாழ்க்கை, என்ற கருத்தை பல குறியீடுகள் மூலம்
அழுத்தமாக பதிவு செய்திருப்பதுடன் எளிமையான
முறையில் அனைத்து தரப்பினருக்கும் புரிய வைத்திருக்கிறார்.
எளிமையான கதை மற்றும் யூகிக்கும்படியான திரைக்கதையாக
இருந்தாலும், திரை மொழியில் கொஞ்சம் சுவாரஸ்யமாக சொன்னதுடன், அறம் மற்றும் மனிதத்தை வலியுறுத்தும்
கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை வடிவமைத்து,
பார்வையாளர்களுக்கு நேர்மறை சிந்தனையை
விதைத்துள்ளது இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம்.
ஒரு சாதாரண பொருள் கையில் இருந்தாலே அதை பத்திரமாக கொண்டு
செல்ல வேண்டும் அல்லது உரிய இடத்தில் சேர்க்க வேண்டும், என்பதில் அதிகம் முனைப்பு காட்டுவது தான்
நடுத்தரக் குடும்பங்களின் மனநிலையாக இருக்கும்.
அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களுக்கு
தங்களது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு
மாயாஜாலம் கையில் கிடைத்தால், அதை தங்களது கண்களை விட மேலாக
பாதுகாப்பது தான் நடைமுறை. ஆனால், கதைக்கருவே அந்த நடைமுறையில் இருந்து
படம் பார்த்தத்தில், ‘மிடில் கிளாஸ்’ நடுதரத்தனர்
குடும்பத்தில் நடக்கும். லக்கி பிரைஸ் (செக்)
காசோலை பயணம்…இன்பத்தை பருகினால் துன்பம் வரும் என்பதை
எடுத்துக்காட்டும் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம்.