
“பைசன்” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் : – துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா
பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், அழகம் பெருமாள், அருவி மதன்,
அனுராக் அரோரா மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர்: மாரி செல்வராஜ்.
மியூசிக் : – நிவாஸ். கே .பிரசன்னா.
ஒளிப்பதிவு:-ஏழில்
அரசு.கே.
தயாரிப்பாளர்கள் :- சமீர் நாயர், தீபக் சேகல், பிஏ. ரஞ்சித், அதிதி ஆனந்த். ஆகியோர்.
தென் மாவட்டங்களில் 1990-ல் களில் நடந்த
சம்பவம் அதுல சமூக மோதல்கள்கள் இளைஞர்களை
பாதித்த விதம், அதனால் திசை மாறிய அவர்கள் வாழ்க்கை ஆகியவற்றுடன், ஒரு
கபடி வீரரின் வலி மற்றும் தடை மிகுந்த வாழ்க்கையை இரத்தமும் சதையுமாக சொல்வது தான் “பைசன்”. என்கிற திரைப்பட கதைக்களம்.
அதுல அனைத்து தடைகளை உடைத்து எறிந்து விட்டு முன்னேறும் ஒரு விளையாட்டு
வீரரின் கதை அதன் வலி மிகுந்த வெற்றி பயணத்தை, தனது மண் மற்றும்
மக்களின் வாழ்வியல் பின்னணியில் சொல்லியிருக்கும்
இயக்குநர் மாரி செல்வராஜும், அவரது கற்பனை மற்றும் கனவுகளுக்கு உயிர் கொடுத்திருக்கும்
நாயகன் துருவ் விக்ரமும் படம் முழுவதும் பார்வையாளர்களை அனைவரும் மிகவும் கவர்ந்து இழுக்கும் வகையில் வியக்க தக்க இந்த கபடி போட்டியில் வைக்கிறார்கள்.
கிட்டா என்ற பேரில்”பைசன்” தலைப்புக்கு ஏற்ப உடல் ரீதியாக மன வலிமையில்
தன்னை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நாயகன் துருவ் விக்ரம், கபடி வீரராக களத்தில் நிற்கும் காட்சிகள்
அனைத்தும் ரசிகர்களை நிமிர்ந்து நிற்கும் வகையில் வைக்கிறது. பள்ளிப் பருவத்திலும், கபடி
வீரராக களம் காணும் போதும் சிறு பருவத் தோற்றத்தில்
வேறுபாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் கடுமையாக
உழைத்திருக்கிறார் துருவ் விக்ரம், படம்
முழுவதும் தனது தோளில் சுமந்திருக்கிறார்.
துருவ் விக்ரமின் தந்தையாக
நடித்துள்ளார் பசுபதி. கண்களின் மூலமாக வெளிப்படுத்தும்
பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பில், உயர்நிலையில்
தந்தையின் பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தி சென்று விடுகிறார்.
நாயகியாக நடித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
நாயகனின் சகோதரியாக நடித்துள்ளார் ரஜிஷா விஜயன். ஆசிரியராக
நடித்திருக்கும் அருவி மதன்,
இயக்குநர் அமீர், லால் ஆகியோர்.
கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து
மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
இசையமைப்பு நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்கள்
அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையில்,
திரையரங்கில் கைதட்டவும், விசில் சத்தம் அடிக்கவும்
வைக்கிறது. மண் மற்றும் மக்களின் கலாச்சாரம்
பிரதிபலிக்கும் வகையில் பின்னணி
இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு எழில் அரசு.கே, படம் பார்ப்பவர்களுக்கு தென் மாவட்ட
நிலப்பரப்பில் பயணித்த அனுபவத்தை இசையில் கொடுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி
நிலப்பரப்பின் சமூக மோதல்கள் மற்றும் அந்த மண்ணின்
கோபத்தையும், வலியையும் பல்வேறு குறியீடுகளின் வழியில் பார்வையாளர்களிடம்
கடந்து சென்றுவந்த தோடு, தனது தனித்துவமான கதை
சொல்வது மூலம் படம் முழுவதும் வியக்க வைக்கும்படி செய்துதிருக்கிறார்.
சாதி உள்ளிட்ட பிற காரணங்களினால் ஒரு இளைஞரின் வாழ்க்கையில்
நடக்கும் வன்முறை சம்பவங்கள் பற்றி படம் பேசி இருந்தாலும், அனைத்து
சமூகத்தினரும் கொண்டாடும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை
கையாண்டிருக்கும் விதத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ், இங்கு அனைவரும் சமம்
என்பதற்காக ஒரு வலியுறுத்தினார் போராட்டமும், எதுக்கு என்று தெரியவில்லை
என்றாலும், இருக்கும் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு
போராட்டமும், எப்போதோ தோன்றி இப்போதும் அது பலருக்கு பல பாதிப்புகளை
ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
படம் பார்த்தத்தில்.
“பைசன்” திருநெல்வேலி, தூத்துக்குடி, கிராமத்தில் நடந்த
“கபடி” போட்டியில் வென்று அந்த கிராமத்தில் பேரும்,
புகழும், தேசிய அளவில் பெற்று தந்து
மிரட்டியிருக்கிறார். பைசன். இந்த திரைப்படத்தை அனைவரும்
திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம் பைசன்.