“கேப்டன் பிரபாகரன் “
திரைப்பட விமர்சனம் …
நடித்தவர்கள் :- விஜயகாந்த், மன்சூர் அலிகான், சரத்குமார்,ரூபினி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், மற்றும் பலர் நடித்துள்ளனர்…
டைரக்டர் : – ஆர்.கே.செல்வமணி.
மியூசிக் :-
இளையராஜா.
தயாரிப்பாளர்கள் :- இப்ராஹிம் ராவுத்தர் & ஏ. முஹம்மத் அபுபக்கர்.
இந்த படம் – 34 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்து மிகப்பெரிய பல வெற்றிகளை பெற்று தந்த திரைப்படம். “கேப்டன் பிரபாகரன்”
இப்போது புதிய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும்
வெளியாகியுள்ளது. விஜயகாந்தின் 100. வது திரைப்படமான
இந்த படம் தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான முறையில் மற்றும்
ஆக்ஷன் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாக இன்று வரை
ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது.
அப்போதைய காலக்கட்டத்தில் இருக்கும்
அதிக கால நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இல்லாத காலக்கட்டத்தில்
ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு மிக பிரமாண்டமான
ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அனல் தெறிக்கும் அளவில் அரசியல் வசனங்களுடன்
உருவான இந்த படம், இப்போதைய டிஜிட்டல் தொழில்
நுட்பத்தில் இருக்கும் காலக்கட்டத்தில் ரசிகர்களால்
இப்போது கொண்டாட வைக்கின்றன?, இந்த காலக்கட்டத்தில் இப்போது எப்படி
விமர்சனம் செய்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.
அந்த காலத்தில் சந்தனக் கட்டை வீரப்பனின் முகத்தை
வெளியுலகிற்கு யாருக்கும் தெரியாத காலக்கட்டத்தில்,
வீரப்பன் என்பவன் யார் ?, அவன் இப்படி ஒரு குற்றவாளியாக உருவெடுக்க என்ன
காரணமானவர்கள் யார் ?, என்பதை மையக்கருவாக
வைத்து, அதற்கு அக்ஷன் மற்றும் கமர்ஷியல் த்ரில்லர் க்ரைம்,ஸ்பென்ஸ்,
பாணியில் திரைக்கதை
அமைத்து இயக்கியுள்ளார் ஆர்.கே.செல்வமணி.
தமிழ் சினிமா என்பது காட்சியமைப்பாக இருந்த காலம்
என்பதை அப்போதை காலக்கட்டத்தில் இருந்தது.என்பதை உறுதியாக ஊர்ஜிதமாக படத்தில் நிரூபித்திருக்கிறார்.



ஸ்டைல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுடன் அனல் தெறிக்கும் வசன
உச்சரிப்புடன் படம் முழுவதுமே தனது ஆளுமையை
நிலைநாட்டிய இருக்கிறார் விஜயகாந்த்,
அளவாக நடித்திருப்பதால், படத்திற்காக
கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது அனைத்து
காட்சிகளிலும் முழுவதும் தெரிகின்றன.
வில்லன் மன்சூர் அலிகானின் காட்சிகள், முந்தைய கேப்டன்
பிரபாகரனில் அதிகம் இருப்பது போல் இருக்கும், ஆனால்
இதுல அவரது காட்சிகள் சில இடங்களில் இல்லாதது போன்றுத் தெரிகிறது.


சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், ரூபினி மற்றும் பலர் உள்ளிட்ட
வேடங்களில் நடித்திருப்பவர்கள்
திரைக்கதைக்கு உயிர்கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ராஜராஜனின் கேமரா, ஸ்டண்ட் நடிகர்களை விட அதிகமாக உள்
வாங்கியிருக்கிறார், அந்த வகையில் ரிஸ்க்கான காட்சிகள் நிறைந்த ஆக்ஷன்
காட்சிகளை சர்வசாதாரணமாக படமாக்கியிருக்கிறார்
எந்த கேமராக்களை பயன்படுத்தியிருப்பார்கள் என்று சொல்லாதபடி யூகிக்க
ஆக்ஷன் காட்சிகள் அனைத்தையும் மிகவும் பிரமாண்டமாக
படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜராஜன்.

இளையராஜா இசையில், இரண்டு பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிக பெரிய பலம்.
அந்த அடர்ந்த காட்டு வனப்பகுதிகளில், அதுல உலாவரும் ஆபத்து நிறைந்த மிக்க பகுதியில் வில்லன்
கதாபாத்திரத்தை காட்டுவதற்கு முன்பாகபே
இளையராஜாவின் பின்னணி இசை
பார்வையாளர்களை பயமடைய செய்துவிடுகிறார்.
லியாகத் அலிகானின் பேனா, யாருக்கும்
பயப்படமால் வசனத்தை கூர்மையாக
எழுதியிருக்கிறார் வீரப்பனை குற்றவாளியாக
சித்தரித்தாலும், அவர் தரப்பில் இருக்கும் நியாயத்தை
சொல்லியிருக்கிறார் ஒரு வீரப்பன் போனால் ஆயிரம்
வீரப்பன்கள் உருவாக்கி வருபவன்
தான் அழிக்க வேண்டும், என்றால்
இந்த படத்தில் வசனத்தின் மூலம் குற்றவாளிகளை
உருவாக்குபவர்கள் வேண்டும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஆர்.கே.செல்வமணி
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரமாண்டமான
படமாக மட்டும் இன்றி, காலம் கடந்தும் சினிமா பார்வையாளர்கள்
கொண்டாடும் வகையில் ஒரு படமாகவும் கொடுத்திருக்கிறார்.
34 வருடங்களுக்கு முன்னால் ரசிகர்களுக்கு சிறப்பான
திரையரங்கு பேரும் புகழும் பெற்ற அனுபவத்தை கொடுத்த ‘
“கேப்டன் பிரபாகரன்”
தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்
வெளியாகியிருப்
பதால், கதையாக்கம் மற்றும் உருவாக்கத்தில் மூலம் ரசிகர்களுக்கு
இப்போதும் சிறந்த திரையரங்கு அனுபவத்தை கொடுக்கின்றன.
படம் பார்த்தத்தில், ‘கேப்டன் பிரபாகரன்’ விஜய் காந்த்தின்
34.ஆண்டுக்கு பிறகு அவரது ரசிகர்களால் கொண்டாடபட
வேண்டி திரைப்படம்…