மீஷா’ (மீசை) (மலையாளம் )
தமிழில் திரைப்பட விமர்சனம்
நடிப்பு : – கதிர், ஹக்கிம் ஷா, ஜியோ பேபி, ஷைன் டாம் சாக்கோ
இயக்கம் : எம்சி ஜோசப்
இசை : சூரஜ் எஸ். குருப்
ஒளிப்பதிவு :-சுரேஷ் ராஜன்.
படத்தொகுப்பு :-
மனோஜ்.
தயாரிப்பாளர்கள் :-
சஜீர் .
இந்த சாதி, மதம் ஆகியவற்றின் இரண்டு மூலம் மக்களை பிளவுப்படுத்தி கொண்டு
அரசியல் கட்சிகள் எப்படி ஆதாயம் தேடிக் கொள்கின்றன. என்பதை இரண்டு நண்பர்களை மையமாக கொண்டு சொல்வது தான் ” “மீஷா.” மலையாளம் மொழிகளில் இருந்து.தமிழில்.
வெவ்வேறு சாதியை சேர்ந்த கதிர் மற்றும் ஹக்கிம் ஷா பள்ளி காலத்தில் இருந்தே
நெருங்கிய தோழிகள் நண்பர்களாக இருப்பதால், அரசியல் கட்சி
ஒன்றில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்
கள். ஆனால், அந்த கட்சி
ஆதாயத்திற்காக தங்களை பயன்படுத்திக் கொள்வதில்,
மக்களுக்கு கிடைக்க கூடிய வசதிகளை தடுத்து, அதன்
மூலமும் ஆதாயம் தேடுவதை அறிந்துக் கொள்கிறார். கதிர், கட்சியை எதிர்த்து
மக்களை ஒன்று சேர்க்க முயற்சிக்கிறார். கதிரை கட்டுப்படுத்துவதற்
காக அரசியல்வாதிகள்
விரிக்கும் சதி வலையில், இரண்டு நண்பர்கள் சிக்கிக்கொள்ள, அதன் மூலம்
அவர்களது வாழ்க்கை என்ன ஆனது? என்பதை இந்த அடர்ந்த வனப்பகுதியில்
நடக்கும் பரபரப்பான கதை மற்றும் சமூக
அரசியல் பின்னணியோடு சொல்வது தான் “மீஷா” திரைப்பட கதைக்களம்.
மலையாள சினிமாவில் அறிமுகமாகி
யிருக்கும் கதிர், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில்
சிறப்பாக நடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார். தான் ஏமாற்றப்பட்டதை
அறிந்து, துரோகத்தின் வலியால் துடிக்கும் காட்சிகளில்
உணர்ச்சிப்பூர்வமாக நடித்துள்ளார். கதிர், வசன உச்சரிப்பு, உடல் மொழி
ஆகியவற்றின் மூலம் மிதுன் என்ற கதாபாத்திரத்தின் மூலம்
பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து விடுகிறார்.
கதிரின் நண்பராக மற்றொரு ஹீரோவாக நடித்திருக்கும் ஹக்கிம் ஷா, அளவாக
நடித்துள்ளார், எக்ஸ்பிரஷன் மூலமாகவே தனது உணர்வுகளை
நேர்த்தியாக வெளிப்படுத்தி
யுள்ளார். படம் முழுவதும் அமைதியாக
இருப்பவர், தனது நண்பருக்கு நேர்ந்த கொடூரத்தை
சொல்லி அழும் காட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

வேட்டைக்காரராக நடித்திருக்கும் சைன் டாம் சாக்கோ, சுதி கொப்பா,
அரசியல்வாதியாக நடித்துள்ளார் ஜியோ பேபி . ஆகியோர். திரையில் மற்றும் நடிப்பின் படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.
இசையமைப்பாளர் சூரஜ் எஸ்.குரூப், டைடில் கார்டில் இசையில் யார் ? என்று கேட்கும் அளவுக்கு
பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும்
அசத்தியுள்ளார் வித்தியாசமான சப்தங்கள் மூலம் வனப்பகுதி காட்சிகளில்
பார்வையாளர்களை மிரள செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சுரேஷ் ராஜன், வனப்பகுதி அழகை மட்டும் இன்றி அங்கு
மறைந்துள்ள ஆபத்துகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக
வனப்பகுதியின் காலநிலை மாற்றங்களை கச்சிதமாக படாக்கி
அதன் மூலம் பார்வையாளர்களை பதற்றமடைய செய்திருக்கிறார்.
நட்பு மற்றும் சமூக அரசியல் பேசும் கதையை, நான் லீனர் முறையில் சொல்லி
படத்தொகுப்பாளர் மனோஜ், படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி
சென்றிருக்கிறார்.
நட்பை கருவாக வைத்துக்கொண்டு திரைக்கதையில் சமூக அரசியல் பேசியிருக்கும்
இயக்குநர் எம்சி ஜோசப், உடன் இருப்பவர்களின் துரோகங்களால்
தான் மக்கள் தலைவர்களை வீழ்த்தப்படுகிறார்கள்என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
வனப்பகுதி பயணம் மற்றும் அரசியல் பயணம் என்று முதல் பாதி படம்
விறுவிறுப்பாக எதிர்பார்ப்புடனும் பயணிக்கின்றன.
இரண்டாம் பாதியில் அதே விறுவிறுப்பு இருந்திருந்தால் படம்
நிச்சயம் பெரும் அதிர்ச்சை ஏற்படுத்தியிருக்
கிறது.
படம் பார்த்தத்தில், ‘மீஷா’ (மீசை) . அரசியல், சாதி, மதம், அதிக மக்களை பிளவுப்படுத்தும்.