மாரீசன்‌ ” திரைப்பட விமர்சனம்…

Share the post

” ” மாரீசன்‌ ” திரைப்பட விமர்சனம்… விமர்சனம்…

நடித்தவர்கள் :- வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, சித்தாரா,

விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டண், தேனப்பன் மற்றும் பலர்‌ நடித்துள்ளனர்.

டைரக்டர் :-சுதீஷ்‌
சங்கர்.
கதை:-வி.கிருஷ்ணமூர்த்தி.

மியூசிக்:- யுவன் சங்கர் ராஜா.

ஒளிப்பதிவு :- கலை‌
செல்வன்‌ சிவாஜி.

படத்தொகுப்பு:-
ஸ்ரீ ஜித்

தயாரிப்பாளர்கள்:-
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பு.

சின்ன சிறு செல்போன் போன்ற திருட்டுகளை வேலைகளை செய்து வாழ்ந்து வரும் பகத் பாசில்

பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளி வருகிறார். மீண்டும் திருட்டு

வேலையில் ஈடுபட ஒரு வீட்டை கொள்ளையடிக்
கிறார். அப்போது

அந்த வீட்டில் வடிவேலு இருக்கிறார். தன்னை

எப்படியாவது இந்த வீட்டிலிருந்து காப்பாற்றி கூட்டிச் செல்லும்படி

வடிவேலு கேட்கிறார். இதற்காக பணம் தர சமாதித்ததால் பகத் பாசிலும் அவரை

அங்கிருந்து கூட்டி செல்கிறார். வடிவேலுவின் பேங்க்

அக்கவுண்டில் 25 லட்சம் இருப்பதை தெரிந்து கொண்ட பகத் பாசில் அந்த

பணத்தை எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்று

திட்டமிடுகிறார். மறுபுறம் மறதி வியாதி இருக்கும் வடிவேலு ஏடிஎம் பின்

நம்பரை கூட அவரால் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. இந்த

சூழ்நிலையில் பகத் பாஸில் வடிவேலுவிடமிருந்து எப்படி அந்த 25 லட்சத்தை கொள்ளையடிக்
கிறார்

என்பதே மாரீசன் படத்தின் கதைக்களம்

வடிவேலு மாமன்னன் படத்திற்கு பிறகு இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி

யுள்ளார். வேலாயுதம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் ஒரு மறதி நோயாளியாக அந்த கதாபாத்திரமாகவே

வாழ்ந்துள்ளார். இதற்கு முன் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில்
எந்த ஒரு சாயலும்

இந்த படத்தில் இல்லை. ஒட்டு மொத்தமாக முற்றிலும் ஒரு புதிய

பரிணாமத்தில் வடிவேலு நடித்துள்ளார்.

மறுபுறம் பகத் பாசில் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை சிறப்பாக

செய்வார். அதே போல இந்த படத்தில் தயாளன் என்ற

கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

இவருக்கும் வடிவேலுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களும், சண்டைகளும் ரசிக்க

வைக்கிறது. இவர்கள் இருவரின் நடிப்பு தான் மாரீசன்

படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கி நிற்கின்றன.

இயக்குனர் சுதீஷ் சங்கர் வடிவேலு மற்றும் பகத் பாசில்

இருவரிடம் இருந்தும் 200 சதவீத நடிப்பை வாங்கியுள்ளார்.

இருவரும் பைக்கில் செல்லும்போதும் பேசிக் கொள்ளும் காட்சிகளும், மரத்தடியில் அமர்ந்து

பாட்டு பாடும் காட்சிகளும், கிளைமாக்ஸ்ல் நடக்கும் காட்சிகளும் சிறப்பாக

எடுத்திருக்கிறார். அதேபோல படத்தில் வந்த ட்விஸ்ட்

நன்றாக ஒர்க் ஆகி இருந்தது. பலருக்கும் இது படம் பார்க்கும்போதே

தெரிந்துவிடும் என்றால் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை

படத்திற்கு பலம் சேர்த்துள்ளார் இரண்டாம் பாதியில் வரும் பின்னணி

இசை மட்டும் அதிக இருந்தது. 2023ம் ஆண்டு வெளியான

மாமன்னன் படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு கூட்டணி வெற்றி பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து இந்த படத்தில் அவர்கள கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் திரைக்கதையில் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் நீளத்தை படத்தின் எடிட்டர் ஸ்ரீஜித்

இன்னும் சற்று குறைத்திருக்கலாம். பிளாஸ் பேக் காட்சிகளின் நீளமும்

ஒருவித தடையா உள்ளது. மேலும் அவற்றின் எமோஷனல் சரியாக கடத்தப்படவில்லை.

” மாரீசன் “படம் பாரத்தத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில்

ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
சைலண்ட் த்ரில்லர் கில்லர் சஸ்பென்ஸ்,பழிக்கு

பழிவாங்கும் கதை அதை நிறைவேற்றியது. ‌திரைப்படம்‌‌ அனைவரும் கண்டு களியலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *