
“குயிலி” திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள் : – லிசி ஆண்டனி, தாஷ்மிகா லஷ்மன்,
புதுப்பேட்டை சுரேஷ், ஹலோ கந்தசாமி, ரவிச்சா, வி.வி.அருண் குமார். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் : – பி.முருகசாமி.
மியூசிக் : – ஜூ.சுமித்.
ஒளிப்பதிவு :-
பிரவீன்ராஜ்.
படத்தொகுப்பு :-
எஸ்.ராஜேஷ் கண்ணன்.
தயாரிப்பாளர்கள் :- பி.எம்.பிலிம் இன்டர் நேஷனல் – வி.வி.அருண்குமார்.
சின்ன வயதிலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இதனால் தனது தந்தையை இழந்த குயிலி, தனிமரம் ஆனாள்.
அதனால் குடிப்பழக்கம் இல்லாதவனை
ரவிச்சாவை தேர்ந்தெடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும்.
ரவிச்சா திடீரென்று அவர் இறந்து போகிறார். பல
பெண்கள் இதனால் விதவைகளாக்கும் பெண்களுக்காக இந்த மதுவை ஒழிக்க வேண்டும் என்ற
முடிவுக்கு வருகிறார். குயிலி, தனது கிராமத்தில் இருக்கும் அத்தனை
மதுக்கடைக்கு தீ வைத்துக் கொளுத்தி விட்டு கம்யூனிசம் கட்சியில்
சேர்ந்து மதுவுக்கு எதிரான
போராட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார்.
அந்த சமயத்தில், தனது மகனை நன்றாக படிக்க வைத்து,
மாவட்ட ஆட்சியராக ஆன பிறகு சட்டப்படியாக தனது கிராமத்தில்
இருக்கும் மதுக்கடைகளை மூட வைக்கும் குயிலியின் லட்சியப் பயணம். அதுல
வெற்றி அடைந்தாரா ? இல்லையா ? என்பதை இந்த படத்தின் கதைக்களம்.
இதுல இளம் வயது குயிலியாக நடித்துள்ளார். தாஷ்மிகா லக்ஷ்மன் மற்றும் முதுமை
வயதான குயிலியான
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லிசி ஆண்டனி இருவரும் தனது கதாபாத்திரங்களில் உணர்வு பூர்ணமாக நடித்துள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்களின் மதுப்பழக்கத்தில்
பாதிக்கப்படுகிற
அப்பாவியாக இருக்கும் குடும்பப் பெண்கள் அவர்களின்
அவலநிலையும் மனக்கொதிப்பும் மன குமுறல்கள் தனது
நடிப்பு மூலம் நேர்த்தியாக வெளிப்படுத்தி
யுள்ளார்கள்.
குயிலியின் மகனாக மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வி.வி.அருண்குமார்.
கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு
பதவியும், முன்னேற்றமும் வந்த பிறகு தாயையும் மறந்து போகும்
மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில்,
பார்வையாளர்கள் தன் மீது கோபம் வரும் அளவுக்கு நடித்துள்ளார்.
வில்லனாக நடித்துள்ள புதுப்பேட்டைசுரேஷ். ஹலோ கந்தசாமி,
ரவிச்சா, இயக்குநர் பி.முருகசாமி என மற்ற வேடங்களில்
நடித்துள்ளவர்கள் தங்களது பணியை சரியாக செய்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரவீன்ராஜ், இசையமைப்பாளர் ஜூ ஸ்மித்,
படதொகுப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆகியோரின்
கதைக்களத்துக்கும். பொருளாதாரம் ஏற்ப பணியாற்றியுள்ளார்கள்.
எழுதி இயக்கியுள்ளார் பி.முருகசாமி,
குடிப்பழகத்தில் சமூகம் இந்த எதிர்கொள்ளும் எல்லா
பிரச்சனைகளை ஒழிப்பது மிக அவசியம் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
அரசு நடத்தும் மது வியாபாரம் அதற்கு தொடர்ந்து அறவழிப் போராட்டங்கள்.
மற்றும் அரசு அதிகாரிகள் மூலம் முற்றுப்புள்ளி
வைப்பது என்பது சாத்தியம் இல்லாதது.
அதை சாத்தியப்படுத்துவது முயற்சியில் தனது முதல் படத்தை இயக்கி இருக்கும்
பி.முருகசாமியின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் சில மாற்றம் இருந்தாலும், அவர் சொல்ல வேண்டிய
முயற்சியின் கருத்துக்கள் சமூகத்திற்கு மிகவும் தேவையானது.
“குயிலி” படம் பார்த்தத்தில் இந்த சமூகத்திற்காக குயிலிபடம் போராட்டம், செய்யும் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகளை எதிர்த்து நிற்கும் பெண்களின் கதை..