
மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட விமர்சனம்
நடித்தவர்கள் :- காளிவெங்கட்,
சத்தியராஜ்,கீதா
கைலாசம், ரோஷினி ஹரிப்ரியன்,ஷெல்லி
கிஷோர்,விஸ்வா,
ஜார்ஜ் மாரியன், அர்ச்சனா,சுனில் சுகாதே,சாம்ஸ்,
ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர் .
டைரக்டர் :- கார்த்திகேயன் மணி .
மியூசிக் :-
கே.சி.பாலசாரங்கன்.
ஓளிப்பதிவு:- ஆனந்த்.ஜி.கே.
படத்தொகுப்பு:- சதீஷ்குமார் சமுஷ்கி,
கலைஇயக்குனர்:- ஜாக்கி.
தயாரிப்பாளர்கள் :- மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ்.
கார்த்திகேயன் மணிi. தேவ்ஆனந்த், காருணி ,மார்டி
சென்கோ ராபர்ட் .
ஒரு சின்ன வட்டத்திற்குள் வாழ்ந்துக் கொண்டிருக்கும்.
நடுத்தர குடும்ப வாழ்க்கையில் எந்த விதமான
சுவாரஸ்யமும், வீரமும் இருக்காது, என்று
நினைத்துக் கொண்டிருப்பவர் கதையாசிரியர் (சத்தியராஜ்)
ஒருவர், அப்படிப்பட்ட நடுத்தர குடும்ப
வாழ்க்கை பற்றி மற்றும் மக்களைப் பற்றி கதை எழுத
தொடங்கிறார். முடிவில் என்ன செய்கிறார்.
அதற்காக வேண்டிய நடுத்தர குடும்பத்துள்ள மக்களை அவர் சந்தித்து அவர்களது
தனிப்பட்ட அனுபவங்களை சேகரிக்க தொடங்குகிறார்.
அப்போது, நடுத்தர மக்கள் மீதான அவரது பார்வை தவறு என்பதையும்,
அறிகிறார். தன்னால் முடிந்ததை தெரிந்து கொள்ள
அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடியாது என்று தெரிந்து விடுகிறது…
காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும்
ஷெல்லி கிஷோர், கதாபாத்திரத்திற்கு ஏற்பே நியாயம் சேர்க்கும் வகையில் நல்லவே நடித்திருக்கிறார்.
அழுகாச்சி அம்மாவாக நடித்து வந்த கீதா கைலாசம் முதன் முறையாக
சிரித்த முகத்துடன், ரசிகர்களை சிரிக்க வைக்கிற
கதாபாத்திரத்தில் கலகலப்பாகவும், கம்பீரமாகவும், அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.
காளி வெங்கட்டின் மகனாக நடித்திருக்கிற
கிஷோர், ஐடி நிறுவன அதிகாரியாக
நடித்துள்ள அர்ச்சனா, மின்வாரிய அலுவலக அதிகாரியாக
நடித்திருக்கும் சுனில் சுகதா, ஊறுகாய் விற்பனையாளராக நடித்திருக்கும் சாம்ஸ், ஜாங்கிரி
மதுமிதா என அனைவரும் கதாபாத்திரத்திற்கு
பொருத்தமான சரியான தேர்வாக
இருக்கிறார்கள்.
எளிமையான மக்களின் எதார்த்த வாழ்க்கையையும், அவர்களது
வாழ்ந்த இடங்களையும் இயல்பாக
காட்சிப்படுத்தி யுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே
இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்
கனின் இசையில் பாடல்களும்,
பின்னணி இசையும் திரைக்கதை போல் மெதுவாகவும், அமைதியாகவும் பயணிக்கிறது,
காட்சிகளுக்கு ஏற்பே பயணிக்கிறது.
படத்தொகுப்பாளர்
சதீஷ்குமார் சமுஷ்கி, காட்சியாளர்கள் தங்கள் தொடர்புக்கு ஏற்பே
கதையை நகர்த்திச் சென்று இருக்கிறார். சில இடங்களில்
தொய்வு இல்லாமல் காட்சிகளை
தொகுத்திருக்கிறார். இயக்குநரின் புதிய வகை கதையை சொல்லியபடி அந்த
குறைகளை மறக்கடிக்க செய்கிறது.
எழுதி இயக்கியுள்ளார் கார்த்திகேயன் மணி,
சாதாரண மக்களின் வாழ்க்கை போராட்டங்களை மதிப்பிட்டு அவர்களது
எளிய வாழ்க்கையை ஒரு சாகசம் தான்
என்பதை அழுத்தத் திருத்தமா பதிவு செய்திருக்கிறார்.
திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும் படத்தின் குறையாக
இருந்தாலும், கதாபாத்திரப்
படைப்பைகளை
கையாண்ட விதம், கதை சொல்லும் முறையில் கடைபிடிக்கப்பட்ட
புதிய யக்திகளை குறைகளை மறந்து கதையோடும், கதை
மகளிர் பார்வைக்கு காட்சிகளாக பயணிக்கிறார்.
படம் பார்த்தத்தில், “மெட்ராஸ் மேட்னி” திரைப்படம்
எளியமக்களின் வாழ்க்கையை
வாழ்வியலை
மனதுக்குள்ள இருக்கும் இனிமையாக
உண்மையான மனிதர்கள்
உணர்வு பூர்வமாக சொல்லியுள்ளார்
இயக்குனர்.
குடும்பத்தில் அனைவரும் பார்த்து மகிழ வேண்டிய படம்.