“ஆகக் கடவன” திரைப்பட விமர்சனம்

Share the post

“ஆகக் கடவன” திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் :- ஆதிரன் சுரேஷ், வின்சென்ட் .எஸ், சி.ஆர்.ராகுல்,

மைக்கேல்.எஸ், சதீஷ் ராமதாஸ், தஷ்ணா, ராஜசிவன், விஜய் ஸ்ரீநிவாஸ், இளங்கோ. மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் :- தர்மா.

மியூசிக் :- சாந்தன் அன்பழகன்.

ஒளிப்பதிவு :-லியோவி.ராஜா.

படத்தொகுப்பு :-சுமித் பாண்டியன், மற்றும் பூமேஷ் தாஸ்.

தயாரிப்பாளர்கள் :- சாரா கலைக்கூடம். – அனிதா லியோ, லியோ.வி.ராஜா.

ஆதிரன் சுரேஷ், சி.ஆர்.ராகுல், ராஜசிவன் மூவரும் சேர்ந்து ஒரு பார்மஸில் வேலை
பார்க்கிறார்கள்.

இவர்கள் முன்று பேரும் சேர்ந்து சொந்தமாக ஒரு

மெடிக்கல் பார்மஸி கடை வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு
இருக்கிறார்கள்,

அதற்காக வேண்டிய இவர்களுக்கு ரூ. ஆறு‌லட்சம் பணம் தேவை படுகிறது.அதற்காக இவர்கள் ஒன்று சேர்ந்து‌ முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால், அதே சமயத்தில் எடுத்து வந்த பணம் திடீரென காணாமல் போய் விடுகின்றன. இதனால், ஊரில்

உள்ள அவரது நிலத்தை விற்று பணத்தை தயார் செய்வதற்காக

இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சேலம் பைக்கில் ஊருக்கு போகிறார்கள்.

போகும் வழியில் திடீரென பைக் டயர் பஞ்சராகிறது. அந்த

காட்டுப் பாதையில் இருக்கும் ஒரு மெக்கானிக் ஷாப்பில் பஞ்சர்

போட பைக்கை தள்ளியபடி
போகிறார்கள்.

இந்த இடத்தில், பயங்கரமான கடத்தல், கொள்ளை,

கொலை போன்ற செயல்களில் மறைமுக செய்து வரும்

வின்சென்ட்.எஸ், சதிஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ்

ஆகியோர் இருக்கிறார்கள், சிறுவன் ஒருவன்
பஞ்சர் போடும் வேலை செய்கின்றனர்.

பஞ்சர் போட வந்தவர்களை, வின்சென்ட்.எஸ்,
சதீஷ் ராமதாஸ், மைக்கேல்.எஸ் , ஆகியோர்

அந்த இடத்தில்
மர்மமான முறையில் சில செயல்களை விஷயங்களையும் செய்து வருகிறார்கள்.

பஞ்சர் போடும் வேலைகளில் மிக தாமதமாக செய்கிறார்கள்.
ஆதிரன் மற்றும் ராகுலை சுற்றி

மர்மமான சம்பவங்கள் நடக்
கிறது. எதற்காக இது போன்றவை நடக்கிறது?

அப்போது அங்கிருந்து ராகுல் மாயமாகிறார். ராகுலை

ஆதிரன் தேடி வரும் ஒரு‌ கும்பல் ஆதிரனை தாக்குதல்.நடக்கிறது.

ஒரு‌ குற்றப் பின்னணி கொண்ட ஒரு கும்பல் இருக்க இவர்கள் எதற்காக இந்த மாதிரி முறையில் தாக்கின்றனர்?

அவர்கள் இவர்களுக்கும் என்ன தொடர்புகள் அந்த

இடத்தில் நடக்கும் மர்ம சம்பவத்தின் பின்னணி என்ன?

என்பதை உணர்த்தும் வகையில் சொல்லும் கதைக்களம்

“ஆகக் கடவன”.

இதுல நல்லவர்கள் மூன்று பேரும் மற்றும், கெட்டவர்கள்

ஆகியோர் மூன்று பேர்களுடைய கதையின் முதன்மையான வேடத்தில்

நடித்திருக்கும் ஆறு பேர் நபர்களாக தவிர்த்து.மற்ற சின்ன சிறு வேடங்களில் நடித்தவர்கள்.

இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் அவர் அவர்கள் பங்கை மிக சிறப்பான

கதாபாத்திரத்தில் உணர்ந்து நடித்துள்ளார்கள்.

முதன்மை வேடத்தில் நடித்துள்ளார் ஆதிரன்.


மிக இயல்பாக நடித்துள்ளார்.

அமைதியாக செல்ல வேண்டும், என்பதை புரிந்து செயல்பட்டு அவரது ஒவ்வொரு

அசைவுகளில், சரியாக நடித்துள்ளார்.

ஆதிரனுக்கு நேர் எதிர் வேடத்தில் நடித்துள்ளார் ராகுல்.

அவசரப்பட்டு
செய்யும் எல்லா செயல்களில்

விபரீதமாக முடிந்தாலும், கதையின் கதைக்களத்தில்

திருப்புமுனை கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார்.

பட்டாணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சதீஷ் ராமதாஸ்,

வெகுளிதனமா
முகத்தை வைத்துக் கொண்டு, நடித்துள்ளார்.

வின்சென்ட் .எஸ் மற்றும் மைக்கேல்.எஸ் இருவருமே

கதாபாத்திரம் மிக பொருத்தமானவர்கள்தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளார்கள்.

பஞ்சர் கடை பையனாக நடித்துள்ள தஷ்ணா, ஆதிரனின் அப்பா

காவலர் வேடத்தில் நடித்துள்ளவர். படத்தில் வரும் சின்ன சின்ன

கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் அதுல பார்வையாளர்களின்

கொஞ்சம் மனசில் நிற்கும் வகையில் நடித்துள்ளனர்கள்.

ஒளிப்பதிவாளர் லியோ வி.ராஜா, கரடுமுரடான காட்டையும், அந்த

பஞ்சர் கடைகளின் இடத்தையும் பயமுறுத்தும் வகை
யில் காட்சிப்படுத்துள்ளார்

கதாபாத்திரங்களின் முகத்தில் உள்ள பின்னணியில்

பெரிய விஷயம் இருக்கிறது, என்பதை தனது கேமராவில்

பார்வையாளர் மனதில் எளிமையாகவும் கடத்து சென்று விடுகிறார்கள்.

இசையமைப்பாளர் சாந்தன் அன்பழகனின்

பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்துள்ளார்.

படத்தொகுப்பாளர்
கள் சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ்,

சாலை பயணம் பஞ்சர் கடைக்குள் நடக்கும் சம்பவங்கள் வரை, அடுத்து

என்ன நடக்கும்? என்ற எதிர்பார்க்கின்றன என்ற பயத்துடன் படத்தை பார்க்க வைத்துள்ளார்.

கதையை எழுதி இயக்கியிருக்கும் தர்மா, அசைவிலும் ஒவ்வொரு வார்த்தைகளும்

ஒரு வலிமை உண்டு என்பதை உணர்த்தும் வகையில் கதையின் கருவை வைத்து மிக

சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் த்ரில்லர் திகிலூட்டும் படத்தை நமக்கு கொடுத்துள்ளார்.

கதைக்களம் அதை காட்சிப்படுத்துள்ள விதம், கதாபாத்திரங்களில் கையாண்ட விதம் என்ற

உணர்வோடு ஏற்படும் வகையில், படத்தின் ஒவ்வொரு

காட்சியை நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இதுல

பெண்களே கதாபாத்திரத்தில் இல்லாமல், ஆண்கள் மட்டும் வைத்து தான்

சொல்ல வந்த கதையை இயக்குநர் தர்மா, மிக சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார்.

படம் பார்த்ததில். “ஆகக் கடவன”
ரொம்ப இது போன்ற

விஷயங்கள் நிறைய இடங்களில் நடக்கிறது. நம்ப‌ தான்

முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இந்த

திரைப்படத்தின் மூலம் இயக்குனர் வலியுறுத்தியுள்ளார்.
அவருக்கு எங்களது பாராட்டுகள்.

அற்புதமானபடைப்பு.அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *