ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது!

Share the post

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது!

தனித்துவமான கதைச் சொல்லல் மூலம் சினிமாத் துறையில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம். அவரது அறிமுகப் படமான ‘கற்றது தமிழ்’ உண்மையான அன்புக்கும் சமூகத்தின் அழுத்தத்திற்கும் இடையில் இருக்கும் ஒருவனின் கதையை பேசியது. அடுத்ததாக தந்தையின் உன்னதமான அன்பை ‘தங்க மீன்கள்’ மற்றும் ‘பேரன்பு’ திரைப்படங்களும், சமூகத்தின் உண்மை முகத்தை உரக்க பேசிய ‘தரமணி’ படமும் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதும் கொண்டாடப்பட்டது.
பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பாரட்டுக்களை குவித்த அவரது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது ஃபீல் குட் திரைப்படமான ‘பறந்து போ’ ஜூலை 4, 2025 அன்று வெளியாகிறது.
பல உணர்வுப்பூர்வமான தருணங்களை இந்தப் படம் ரசிகர்களுக்குக் நிச்சயமாக கொடுக்கும்.
நடிகர்கள்: சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: ராம்,
இசை: சந்தோஷ் தயாநிதி,
ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்,
படத்தொகுப்பு: மதி வி.எஸ்.,
பாடல்: மதன் கார்க்கி,
கலை இயக்குநர்: குமார் கங்கப்பன்,
ஆக்‌ஷன்: ஸ்டண்ட் சில்வா,
காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவானே,
நடனம்: ரிச்சி ரிச்சர்ட்சன்,
ஒலி வடிவமைப்பு: அருள் என்,
ஆடியோகிராபர்: எம்.ஆர். ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: கே எஸ் ராஜசேகரன்,
ஒப்பனை: ஆர். சசிகுமார்-சுதி சுரேந்திரன்,
பப்ளிசிட்டி டிசைனிங்: டிவென்டி.ஒன்.ஜி தன்வந்த்-பிரவீன் பி.கே.,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- அப்துல் நாசர்

கமர்ஷியல் படங்கள் மற்றும் கதைக்களம் சார்ந்த படங்கள் எனத் தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்த வருடம் ஜூலை 4 அன்று வெளியாகும் ‘பறந்து போ’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *