
“ஃபேமிலி டூரிஸ்ட் “
திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:-
சசிகுமார்,சிம்ரன்,
மிதுன் ஜெய்
சங்கர்,கமலேஷ்,
எம்.எஸ்.பாஸ்கர்,
யோகி பாபு, பகவதி இளங்கோ குமரவேல், ஸ்ரீஜாரவி, சுதர்ஷன் ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்ஷன்:-
அபிஷன் ஜீவிந்த்.
மியூசிக் :-ஷான் ரோல்டன்.
ஒளிப்பதிவு :-
அரவிந்த் விஸ்வநாதன்.
படத்தொகுப்பு:-
பரத் விக்ரமன்.
தயாரிப்பாளர்கள் :-
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.
எம்.ஆர்.பி. என்டர் டென்மென்ட் பட நிறுவனம்…
இந்த படத்தில் அறிமுகம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் இணைந்து நடித்துள்ளனர்.
இன்று முதல் திரையரங்கில் வெளிவந்துள்ளது.
இந்த திரைப்படத்தை
டூரிஸ்ட் ஃபேமிலி.
குட்நைட், லவ்வர், போன்ற வெற்றி
படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.
இந்தப்படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தின் மீது ரசிகர்களின் மாபெரும்
எதிர்பார்ப்பை டூரிஸ்ட் ஃபேமிலி படம் மீது தந்து இருக்கிறது.
இலங்கையில் பொருளாதார கஷ்டம் காரணமாக சசிகுமார், சிம்ரன்,
அவரது குடும்பத்
துடன்,தமிழ்நாட்டிற்கு வருக்கிறார்கள்.
ராமேஸ்வரத்தில் வரும்போது சசிகுமாரின் குடும்பம்
கடற்கரையில் தமிழக காவல்துறையினர்
மூலம் சிக்கி கொள்கிறார்கள்.
ஆனால், போலீஸ் அதிகாரியாக ரமேஷ்
திலக் இவர்களது சூழ் நிலையை தெரிந்துக் கொண்டு அவர்களை
வீட்டுக்கு போக செல்கிறார்.
பிறகு சிம்ரனின் அண்ணனாக
யோகி பாபுவின் உதவியோடு, சென்னை வருகிறார்கள்.
அங்கு ஒரு காலனியில் தங்க எல்லா வசதிகளை
அவர்களுக்கு யோகி பாபு செய்துக் கொடுக்கிறார்.
சசிகுமார் தனக்கு ஒரு வேலையை தேடி கொள்கிறார்.
அந்த காலனியில் உள்ள எல்லோரிடம்
நல்ல நண்பர்களாக பழகி நல்ல உறவை
ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
இப்படி இருக்கும் நிலையில், ராமேஸ்வரத்தில்
திடீரென்று குண்டு வெடிப்பு ஏற்படுகின்றன.
இதற்கு காரணம் யாரென்று தெரியாமல் இருக்கும் நிலையில்,
இலங்கையிருந்து வந்திருந்த சசிகுமாரின் குடும்பம் தான் காரணம்.
என போலீஸ் தரப்பில் நினைக்கிறார்கள்.
அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களைப்
பிடிக்க தீவிரமாக
போலீஸ்காரர்கள் இறங்கி தேடுகிறார்கள்.
இலங்கையில் இருந்து வெளிவந்த பல உறவுகளையும் வீடு வாசல் இழந்து பல கஷ்டங்களை
கண்ணீருடன் சுமந்து வந்து, சென்னையில் அடைகலம் அடைந்த பிறகு மகிழ்ச்சியுடன்
வாழ்ந்து வரும் இந்த சூழ்நிலையில் இந்த குடும்பத்திற்கு இதன்பின் என்ன
நடந்தது. என்பதே உண்மை படத்தின் கதைக்களமாகும்.
சசிகுமார், சிம்ரன், முதல் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்,
நடிகையும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதாநாயகனான சசிகுமார் இலங்கையில்
இருந்து குடும்பத்தைக் கொண்டு சென்னைக்கு வந்து எப்படிவாழப் போகிறோம்.என்ற
பயம், தவிப்பு, ஒரு பக்கம். இருக்க எப்பவும் எதுவும்
நடக்கும். அதை நான் பார்த்துக்கொள்
கிறேன்.
என பெறுப்புடன் இருக்கும் கணவராகவும், நல்ல
தந்தையாக திரையில் வருகிறார்.
கதாநாயகி சிம்ரன் குடும்ப தலைவியாக தனது குடும்பத்தின்
பொறுமையான தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
சசிகுமார், சிம்ரனின் மகன்களாக நடித்த மிதுன் மற்றும் கமலேஷ் இருவரின் நடிப்பு சிறப்பு.
குட்டி பையன் கமலேஷ் நடிப்பில் அனைவரையும்
வியக்குபடி நடித்து விட்டான். என்று தான் சொல்லணும்.
அதே போல் எம்.எஸ். பாஸ்கர், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா
ரவி, யோகி பாபு, பகவதி, சுதர்ஷன், ரமேஷ் திலக் என
அனைவரும் தங்கள் நடிப்பின் மூலம் படத்தில் சிறப்பாக
நடித்து விட்டனர்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தின் அறிமுகம் படமென்று
சொல்ல முடியாது.
அளவில் இந்த பட கதையில் ஒவ்வொரு
அசைவிலும் எதார்த்தம்
இருக்கிறது.
இயக்கத்தில், மனிதநேயத்தை
பேசும் திரைக்கதை, மனதை தொடும் காட்சிகள்,
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு தான் டூரிஸ்ட் ஃபேமிலி
படத்தின் மூலம் நம்மை அனைவரை
யும் பயணத்திற்கு அழைத்துச் செல்
கிறார். இயக்குனர்.
முதல் காட்சியிலிருந்து படம் விறுவிறுப்பாக இயக்குநர் அபிஷன்
ஜீவிந்த்.இருக்கிறார்இலங்கை
யிலிலிருந்து பல கஷ்டங்களை சுமந்துகொண்டு
இங்கு வரும் பலரையும் அகதிகள் எனகுறிப்பிடுகிறார்
கள்.எந்த நாட்டிற்கும்
புலம் பெயர்ந்தாலும், சென்றலும் அங்கு அன்பான மனிதர்களை
சம்பாதித்து விட்டால் நாம் அகதி இல்லை
என்ற அழகிய மனிதநேயம் பற்றி இந்தப் படம் மூலம் சொல்லி யுள்ளது. அது நம்ம மனசை
தொட்டுள்ளது. அந்த விஷயத்தை இந்தப் படத்தில் கூறிய
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு மிகப்பெரிய
பாராட்டுக்கள்.
ஷான் ரோல்டன் பாடல்கள் படத்துடன் இணைந்து மனசை
தொட்டு விட்டார்.
ஷான் ரோல்டன் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் சிறப்பு
மனிதநேயத்துடன் இருந்தால் யாரும் இந்த உலகில் அகதி
இல்லை. என்பதை பேசிய உள்ளது. இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்…
அனைவரும் பார்த்துக் கண்டுக்
களிக்க வேண்டிய தரமான திரைப்பட படைப்பு