
தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், ‘குபேரா’ படத்தின் முதல் சிங்கிள் ‘போய் வா நண்பா’ வெளியாகியுள்ளது !!
இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற “குபேரா” படத்தின் முதல் சிங்கிள் “போய் வா நண்பா” !!
பான் இந்திய படைப்பாக உருவாகி வரும் “குபேரா படத்தின் முதல் சிங்கிள், இசை ரசிகர்களை புயலாக தாக்கியுள்ளது. ‘குபேரா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘போய் வா நண்பா’ அதிரடி இசையில், மென் மெலடி கலந்து அசரடிக்கிறது. இப்பாடல் மூன்று தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.

இப்பாடல் உருவான பின்னணி காட்சிகள், தனுஷின் குரல், மற்றும் அவரின் அசத்தலான நடனம், ராக் ஸ்டார் டிஎஸ்பியின் மயக்கும் இசை, அருமையான வரிகள், எனக் கேட்கும் போதே மாய உலகிற்கு அழைத்து செல்கிறது. சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மேஜிக்கை காணும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது இப்பாடல்.
மனித உணர்வுகளின் குவியலாக, அற்புதமான உணர்வுகளைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், உலகம் முழுவதும் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சரப் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுனீல் நாரங் மற்றும் புஷ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிப்பில் “குபேரா” திரைப்படம், மிகப் பெரிய பொருட்செலவில், பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட குபேரா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உண்மையான பான் இந்திய படைப்பாக வெளியாகவுள்ளது.
🔗https://youtu.be/wAcXj8lx1Bo