
கலைஞர் தொலைக்காட்சியில் புதிய கதைக்களத்தில் “பவித்ரா”
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “பவித்ரா”. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடரில் குழந்தைகளாக வந்த பவித்ரா, அர்ஜூன் ஆகியோர் பெரியவர்களாகி இருப்பதால் பவித்ரா தொடர் இனி புதிய கதைக்களத்தில் விறுவிறுப்பாக செல்லவிருக்கிறது.
மேலும், தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த வேணு தனது உயிரை கொடுத்து பவித்ராவை காப்பாற்றுகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு, அர்ஜூனை சிறுவயதிலேயே அமெரிக்காவுக்கு அனுப்பிய நிலையில், தற்போது அர்ஜூன் மீண்டும் இந்தியா திரும்பி இருப்பதால் பவித்ரா – அர்ஜூனுக்கு இடையேயான காதல் மீண்டும் துளிர்விட இருக்கிறது.
ரமாதேவி, பவித்ரா, அர்ஜூன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் இனி விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது, எனவே பவித்ரா நெடுந்தொடரை தொடர்ந்து கண்டுகளியுங்கள்.