
“எமகாதகி” திரைப்பட விமர்சனம்…
நடிகர்கள்: ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ஆர். ராஜூ, ராஜப்பன், சுபாஷ் ராமசாமி,
ஹரிதா,பொற்கொடி ,ஜெய், பிரதீப் ராமசாமி , மற்றும் பலர் நடித்துள்ளனர்கள்.
இயக்கம்: பெபின் ஜார்ஜ் ஜெயசீலன்.
இசை: ஜெசின் ஜார்ஜ்.
ஒளிப்பதிவு: சுஜித் சாரங்.
கலைஇயக்குனர் :- ஜோப் பாபின் ஜெசின் ஜோர்ஜ்
தயாரிப்பு நிறுவனம்: வெங்கட் ராகுல் சுதித் சார்ங் ஸ்ரீஜித் சார்ங்.
தஞ்சாயூர் மாவட்டம் ஒரு அழகிய பச்சை பசுமையான அந்த கிராமத்தில் நடக்கும் உணர்வு பூர்வமான
கதைக்களமாக படத்தில் நகர்த்திச் செல்கிறார்.இந்த
படத்தின் இயக்குனர்.
இதுல ஊர் தலைவராக ராஜூ ராஜப்பனின் மனைவியாக வருபவர்
கீதா கைலாசம்.
இவர்களுக்கு ஒரு மகனும் சுபாஷ் ராமாசமி
ஒரு மகளும் ரூபா கொடுவாயூர் மகள் ரூபாவிற்கு (ஆஸ்த்மா)
மூச்சுத் திணறல் நோய் இந்த பிரச்சனை அவளுக்கு திடீரென அடிக்கடி வரும். அதற்கு
அவள் சுவாச மருந்து எடுத்துக் கொள்கிறாள்.
இந்நிலையில்,
அந்த கிராமத்தில் இன்னும் இரண்டு வாரத்தில்
கோவில் கொடைத் திருவிழா நடக்க இருக்கிறது.
இந்த ஊர் மக்கள் அதற்கு தயாராகி வருகின்றனர்.
இந்த.நிலையில் சுபாஷ் ராமசாமி கோவில் சிலையின்
கீரிடத்தை தன் நண்பர்கள் உதவியுடன் திருடி
அதை அடமானம் வைத்து ஒரு தொழில் தொடங்கி அதில் பெரிய நஷ்டமும் அடைகிறான்.
இன்னும் இரண்டு வாரத்தில் கோவில் திருவிழா இருக்க,
கிரீடம் இல்லை என்று தெரிந்தால் நாமும் மாட்டிக் கொள்வோம். என்று
சுபாஷும் அவரது நண்பர்கள் மூவரும் படபடப்பில் இருக்கின்றார்கள்.
ஒருநாள், வீட்டிற்கு மிகுந்த கோபத்தோடு
வரும் ராஜூ, மனைவி கீதாவை அடித்து விடுகிறார்.
எதற்காக அம்மாவை அடித்தீர்கள் என்று மகள் ரூபா கேட்க, அதற்கு மறுபடியும் ரூபாவை அடித்துவிடுகிறார் ராஜூ.
இதனால், அழுதுகொண்டே மேல்மாடி ரூமுக்கு சென்று விடுகிறாள்.
ரூபாவை பார்க்க நள்ளிரவில் தண்ணீர் குடிப்பதற்கு எழுந்த கீதா, தனது மகள் ரூபா தூக்கில் திடீரென
பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் பார்த்து, அதிர்ச்சியடை
கிறார் கீதா.
குடும்பத்தில் இந்த சம்பவம் அனைவருக்கும் தெரிய ரூபாவின்
பிணத்தைக் கண்டு கதறி அழுகிறார்கள் ஊர்மக்கள், தூக்கிட்டு தற்கொலை செய்தது.
ஊர் மக்களுக்கு வெளியில் தெரிந்தால் குலகெளரவம் கெட்டு பழாய் போய்விடும்
மூச்சுத்திணறல்
ஆஸ்த்மா நோய் தானே வந்தது ரூபா இறந்து விட்டாத கிராமத்து மக்களிடம் நம்ப வைத்து விடுகின்றனர்
ரூபாவின்
குடும்பத்தினர்.
அந்த ஊர் கிராமமே சோகமாய் உருமாற, அனைவரும் வந்து துக்கம் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், இரவு நெருங்க இறுதி சடங்கு செய்வதற்காக ஆய்தம் ஆகிப் பிணத்தை தூக்க
கிராமத்து இளைஞர்கள்.
எல்லோரும். சேர்ந்து, பிணத்தை தூக்க போக
தூக்க முடியாமல் அதிகனம் இருக்க
தொடர்ந்து.பிணம்
அசைவதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில்
நான்கு புறம் தெறித்து ஓடுகிறார்கள்.
மீண்டும் பிணத்தைத்
தூக்க முயற்சிக்க, போது கண்கள் மூடியபடியே பிணம் எழுந்து உட்காருகிறது.
இதனால், எல்லா மொத்த கிராம ஊர்மக்களும் வீட்டிலிருந்து வெளியே ஓடி விடுகின்றனர்.
இந்த இறந்த பெண் எதற்கு இப்படி மக்களை பயமுறுத்த வேண்டும்.?
வீட்டிலிருந்து ரூபாவின் ஆன்மா தன் உடலை வெளியே கொண்டு
செல்ல அனுமதிக்காதது ஏன்.? என்பதை படத்தின் மீதிக் கதைக்களம். விளக்கம் சொல்வது தான்
படத்தின் கதை கருவை கண்மூடியே தாங்கிச் செல்கிறார் கதாநாயகி ரூபா கொடுவாயூர்.
தமிழ் சினிமாவிற்கு புதிய அறிமுக நடிகையாக அடியெடுத்து வைத்திருக்கிறார் ரூபா,
தனது கேரக்டரை மிக தெளிவாக அழகாக நடித்திருக்கிறார்.
தெளிவான பேசும் உச்சரிப்பு, சின்ன சின்ன , அழகான, கண் களால் காதலின் மொழியை
பார்வையில் பல இடங்களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனசை கட்டிப்போட்டு
கவர்ந்துள்ளார்.
இந்த படத்தில் மாயாஜாலம் செய்து நல்லவே கைவசம் வைத்து நடித்துள்ளார் ரூபா.
தமிழ் சினிமாதிரைவுலகில் நிச்சயம் நல்லவே ஒரு ரவுண்ட் அடிப்பார் என்பதை எந்த
சந்தேகமும் இல்லை.
மேலும், ரூபாவின் அப்பாவாக நடித்த ராஜூ
ராஜப்பன் ஊர் தலைவர் கதாபாத்திரத்தில்
சிறப்பாக நடித்திருக்கிறார்.
தனது மகளை கை நீட்டி அடிப்பதற்கு பின்னால் காரணம்,
இறுதி காட்சியில் தனது மகளின் உயிர் போய் விட்டது என்றதும் கோபம் தெறித்து வரும்
காட்சியில்
நடிப்பில் நல்லவே மிரட்டலாக நடித்துள்ளார்.
அம்மாவாக நடித்த கீதா கைலாசம்,
இப்படத்திலும் கதாநாயகியின் அம்மாவாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து
நடித்திருக்கிறார்.
மகள் இறந்ததை பார்த்ததும் உறைந்து
நின்ற கீதா, இறுதி காட்சியில்
அழுதுக் கொண்டு தனது மகள் மீது வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தும்
இடத்தில் படம் பார்ப்பவர்கள் அனைவரும்
கண்களில் கண்ணீர் வர வைத்து விடுகிறார்.
ரூபாவின் அண்ணனாக
நடித்த சுபாஷ் ராமசாமியும் இறுதி காட்சியில் மிரட்டி நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
படத்தில், கேரக்டர் நடிகர்கள் மட்டும் இல்லை படத்தில் நடித்த ஜூனியர் நடிகர்கள்,
நடிகைகள் வரை அனைத்து
கதாபாத்திரங்களையும் மிகவும் அழகாக சிறப்பாக நடித்துள்ளார்கள்.
இயக்குனர். அதிலும்
குறிப்பாக, சுபாஷ்
ராமசாமியின்
நண்பர்களாகவருபவர்
கள், போலீஸாக
வருபவர், குடிகாரராக வருபவர், உள்ளுர் டாக்டர், ரூபாவின் பாட்டி, ஊர் பாட்டி, கிராமத்து பெண்கள், எக்ஸ்
தலைவர், அவரது மகன், மருமகள், என படத்தில் நடித்த அனைவரும் நன்றாகவே
நடித்திருக்கிறார்கள். என்று சொல்வதை அந்த கதாபாத்திரமாகவே
அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான்
சொல்லவேண்டும்.
இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில்
நடித்து அசத்தியிருக்
கிறார் நரேந்திர பிரசாத்.
காதல் பாடலில் நரேந்திர பிரசாத் மற்றும் ரூபா இருவருக்குமான
காதல்
கெமிஸ்ட்ரி கலவை நல்லவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.
ரூபாவின் காலை பிடித்து கதறி அழும் காட்சியில் நம்மையும் சேர்த்து கண்கலங்க
வைத்துவிட்டார்
நரேந்திர பிரசாத்.
சுஜித் சாரங்க் இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு
மிகப்பெரும் பலம் என்று செல்லலாம்.வீட்டிற்குள் அமைக்கப்பட்ட
வெளிச்சம், காதல் பாடலில் கொண்டு வந்த வெளிச்சம், படத்தின் ஆரம்பத்திலேயே வரும்
கிராம பாடல் காட்சியமைக்கப்பட்ட விதம் என பல இடங்களில் நன்றாகவே தனது திறமையை
காட்சிகள் அமைப்பில் அழகாக நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஜெசின் ஜார்ஜின் இசையில் மூன்று
பாடல்களும் கதையோடு நம்மையும் பயணம் செய்ய வைக்கிறார்.
பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசையும்
நமக்குள் விறுவிறுப்பை கொண்டு வர வைக்கிறது.
படத்தின் தொடக்கத்தில்
கதையின் கருவையைத்
தொட்டு பயணிக்க ஆரம்பித்து விடுவதால்,
நமக்கு எந்த இடத்திலும் கதை தொய்வு என்பது ஏற்படவில்லை. ஒரு பிணத்தை வைத்து ஒரு
கதையா? என்று அமைந்தால், அதற்குள் ஒளிந்திருக்கும் பல விஷயங்களை
வெளிக்கொண்டுவந்து அசத்தியிருக்கிறார் இயக்குனர்.
ஜாதி தாண்டிய திருமணம், கள்ளஎண்ணம்
கொண்டவர்கள், பிறரின் வளர்ச்சியைக் கொண்டு
எரிச்சலைடைபவர்கள், கள்ளத்தனம், குடும்ப பெருமை, கெளரவம்
என பல கதைகளை இரண்டு மணி நேரத்திற்கு உள்ளாக
ஒரு படத்தில் அதுவும் ஹாரர் க்ரைம் கலந்து படத்தில் கொண்டு வர
என்னால் முடியுமா என்று கேள்வியை எழுப்பினால், அது என்னால் முடியுமென்று
அதை தரமாக எடுத்து
அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார்.
படத்தின் இயக்குனரான பெபின் ஜார்ஜ் ஜெயசீலன்.
ராஜேந்திரனின் கதை வசனங்கள், ஜோசப்
பாபீன் கலை இயக்கம், ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு, அரவிந்த் மேனனின் சவுண்ட்
மிக்சிங் கலவை என படத்தில் அனைவரும் கதையின் பலம் அறிந்து நன்றாகவே பணிபுரிந்துள்ளார்கள்.
எமகாதகி – தமிழ் சினிமாவின் வித்தியாசமான மாறுபட்ட கதையம்சம்
கொண்ட தரமான படமென பார்த்த ரசிகர்கள் சொல்வார்கள்…
l
l
l
l