![](https://oktakenews.com/wp-content/uploads/2025/02/1000185980.jpg)
*,காதல் என்பது பொதுவுடமை திரைப்பட விமர்சனம்..
G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.
இயக்குனர்- ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
நடித்தவர்கள் :-
லிஜோமோல், வினித்,
ரோகிணி, கலேஷ், தீபா ,
அனுஷா, மற்றும் பலர் நடித்துள்ளனர்…
ஒளிப்பதிவு –
ஸ்ரீசரவணன்
மியூசிக்:-
கண்ணன் நாராயணன்
எடிட்டிங் :-
டேனி சார்லஸ்
கலை இயக்குனர் :-
ஆறுசாமி.
பாடலாசிரியர் :-
உமாதேவி.
*தயாரிப்பாளர்கள் ஜியோபேபி:- மேன்கேன்ட்சினிமாஸ்,
சிமேட்ரி சினிமாஸ் நிதிஸ் புரொடக்சன்ஸ்.
கதைக்களம்:-
தனி ஒருத்தியாக இருந்து தனது மகள் லிஜோமோலை பல வருடமாக வளர்த்து வருகிறார் ரோகிணி.
பல வருடங்களுக்கு தனது மனைவி ரோகிணியை விட்டு அவர் சொன்னமாதிரி மனைவி கேட்காமல் இருந்ததால்
ஒரு டீச்சர் பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் வினித்.
இந்நிலையில், தான் ஒருவரை விரும்புவதாக தனது அம்மா ரோகிணியிடம் தனது லவ் பத்தி கூறுகிறார் லிஜோமோல்.
இதனால், மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ரோகிணி,
காதலிப்பவரை வீட்டிற்கு அழைத்து வர என்று கூறுகிறார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு கலேஷும் அனுஷ்காவுடன்.
அனைவரும் நன்றாக சிரித்து பேசிக் கொண்டிருகிறார்கள்.
கலேஷ் தான் லிஜோமோல் விரும்பும்
காதலன் என்று நினைத்திருந்த ரோஹிணிக்கு இடி மேல்
இடி விழுந்தாற் போல் தான் அனுஷாவை
விரும்புவதாக கூறுகிறார்லிஜோமோல்.
தனது மகள் மனதை மாற்றியிருப்பதாக அனுஷா மீது
கோபமடைந்த ரோஹிணி, கலேஷையும்
அனுஷாவையும் வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார் ரோகிணி.
இறுதியில், மகளின் ஓரினபால் காதலுக்கு ரோஹிணி பச்சைக்
கொடி காட்டினாரா? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக் கதைக்களம்.
தனது கண்களால் ஆயிரம் அர்த்தங்களை வீசியிருக்கிறார் நடிகை
லிஜோமோல். நடிப்பில் பெரிதான தெளிவு,
தனது கேரக்டரை மிக அழகாக கையாண்டு
கைதட்டல் பெற்றிருக்கிறார் லிஜோமோல்.
தனது ஓரினபால் காதலை மிக தெளிவாக கூறும் இடத்தில்
நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார் லிஜோமோல்.
தனது அனுபவ நடிப்பால் காட்சியில்
தனது மேளனமான நடிப்பில் மெய்சிலிர்க்க
செய்திருக்கிறார்.
ரோகிணி. தனது மகள் ஓரினபால் காதல் புரிவதை தெரிந்ததும்,
ஒரு தாயாக என்ன மாதிரியான ரியாக்ஷன் கொடுப்பார்களோ
அதை அப்படியே திரைக்கு பின்னால் வந்து கொடுத்து
காட்சிக்கு காட்சி உயிர்
கொடுத்து நடித்திருக்
கிறார் ரோகிணி.
பல வருடங்களுக்குப் பிறகு திரையில் நடிகர் வினித், மிகவும்
இயல்பாக தனது கதாபாத்திரத்தை செய்து முடித்துவிட்டார்.
ஓரினபால் காதலைப் பற்றி வினித்திடம்
கலேஷ் சொல்லும் இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
அனுஷாவும் தனது பங்கிற்கு தனது நடிப்புத் திறமையை அழகாக
வெளிப்படுத்தியிருக்
கிறார். ஒரு சில
இடத்தில் தீபாவின் நடிப்பு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
யாருக்கு யார் தாலி கட்டுவார்கள் என்று
ஓரினபால் சேர்க்கையாளர்களின் பக்கத்தை கூறும்
இடத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குனர்.
பல இடங்களில் வசனங்கள் மிக கூர்ந்து
கவனிக்கும்படியாக இருந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்.
இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே
படத்தினை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது.
எந்தவொரு ஆபாசமும் இன்றி, ஓரினபாலர்களின்
பக்கத்தை, அவர்களின் காதலை மிகவும் மெல்லிய ஒரு கோட்டில்
பயணம் செய்வது போன்று அழகாக
கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர்.
சண்டைக் காட்சியின்றி ஆபாச வார்த்தையின்றி ஒரு வீட்டிற்குள் நடக்கும்
புரிதல் தொடர்பான காட்சிகளை மட்டுமே கொடுத்து படத்தினை ஒரு கவிதை போன்று
இயக்கி தமிழ் சினிமாவில் அசைக்க முடியா ஒரு இயக்குனராக நிற்கிறார்
இயக்குனர். ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
சிகப்பு கம்பளம் விரித்து தாராளமாக தமிழ் சினிமாவிற்கு
ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனை வரவேற்கலாம்..
காதல் என்பது பொதுவுடமை – அழகு உண்மையான இருவரின் ஒரினபாலனம்…