![](https://oktakenews.com/wp-content/uploads/2025/02/image-55-682x1024.png)
பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட டைட்டில் டீசர் வெளியானது!!
பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி என்டர்டெயினர் திரைப்படமான “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல், ஒரு நடுத்தர குடும்ப வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையான இந்தக் கதையில், ஃபேண்டஸி கலந்து ரசிகர்கள் சிரித்து மகிழும் வண்ணம் ஒரு அட்டகாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும்.
படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தும் விதமாக, நகைச்சுவை ததும்பிய அசத்தலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள டைட்டில் டீசர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் VTV கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கௌதம், பாலகுமாரன், குகன், சாத்விக், ஆழியா, பெனடிக்ட் & பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
“ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தொழில்நுட்ப குழு விபரம்
ஒளிப்பதிவு : சக்திவேல், K B ஶ்ரீ கார்த்திக்
இசை : JC ஜோ
பின்னணி இசை & கூடுதல் பாடல்கள் – அருண் கௌதம்
எடிட்டிங் : சாம் Rdx
மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)