நந்தமுரி பாலகிருஷ்ணா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, 14 ரீல்ஸ் பிளஸ், எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்கும், #BB4 அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.
மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம், ஆக்ஷன் அதிரடியில் முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக, ஆன்மீகமும் கலந்த பிரம்மாண்டமாக திரைப்படமாக உருவாகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் சார்பில், ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை, எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார்.
திறமைமிகு முன்னணி இளம் நடிகரான ஆதி பினிசெட்டி இப்படத்தில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இது அவரது திரை வாழ்க்கையில் ஒரு அற்புதமான அத்தியாயமாக இருக்கும். இதற்கு முன் சர்ரைனோடு படத்தில் ஆதியை ஒரு அழுத்தமான வேடத்தில் காட்டிய இயக்குநர் போயபதி ஸ்ரீனு இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு அற்புதமான பாத்திரத்தில் அவரைக் காட்டவுள்ளார்.
அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் புகழ் பெற்ற போயபதி, ஆதியின் கதாபாத்திரத்தை நம்பமுடியாத அளவு வெறித்தனத்துடன் வடிவமைத்துள்ளார், இது அவரது திரை வாழ்க்கையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரங்களில் ஒன்றாக இருக்கும். இப்படத்திற்காக ஆதி மிகப்புதிய தோற்றத்தில் உருமாறியுள்ளார். ஆதி பினிசெட்டி மற்றும் பாலகிருஷ்ணா இடையே அதிரடியான காட்சிகளை, ரசிகர்கள் எதிர்பார்க்கலாம், மிகத்தீவிரமான ஆக்ஷன் மற்றும் அழுத்தமான தருணங்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும்.
தற்போது, அன்னபூர்ணா ஸ்டூடியோவில் 7 ஏக்கரில் கலை இயக்குநர் ஏ.எஸ்.பிரகாஷ் மற்றும் அவரது குழுவினரால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான, பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட செட்டில் படத்தின் ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆக்சன் காட்சிகளைப் புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களான ராம்-லக்ஷ்மணன் உருவாக்கி வருகிறார்கள். பாலகிருஷ்ணா மற்றும் ஆதி பினிசெட்டி இருவரும் இந்த அதிரடி படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர், அவர்களின் நடிப்பு பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் வைப்பது உறுதி. இந்த காட்சி, குறிப்பாக, படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
பாலகிருஷ்ணாவின் கதாபாத்திரமும் மிகவும் சுறுசுறுப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டாம் பாகத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார், இது மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் உருவாகிறது. இசையமைப்பாளர் எஸ் தமன், ஒளிப்பதிவாளர் சி ராம்பிரசாத், எடிட்டர் தம்மிராஜு மற்றும் கலை இயக்குநர் ஏஎஸ் பிரகாஷ் உட்பட அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு திறமையான குழு இந்தப் படத்தில் பணியாற்றுகிறது.
அகண்டா 2 பான் இந்தியா வெளியீடாக வெளியாகவுள்ளது, இது பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் போயபதி ஸ்ரீனு ஆகிய இருவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். தசரா பண்டிகையையொட்டி, செப்டம்பர் 25, 2025 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர்கள்: மாஸ் கடவுள் நந்தமுரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி பினிசெட்டி
தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர், இயக்குநர்: போயபதி ஸ்ரீனு
தயாரிப்பாளர்கள்: ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா
பேனர்: 14 ரீல்ஸ் பிளஸ்
வழங்குபவர்: எம் தேஜஸ்வினி நந்தமுரி
இசை: தமன் எஸ்
ஒளிப்பதிவு : சி ராம்பிரசாத், சந்தோஷ் டி டெடகே
கலை: ஏ.எஸ்.பிரகாஷ்
எடிட்டர்: தம்மிராஜு
சண்டைகள்: ராம்-லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்