‘கலைஞர் 100’ என்கிற நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் டைமண்ட் பாபு நூலை பெற்றுக்கொண்டு, வாழ்த்து பெற்றார்.!
பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதிய
“கலைஞர் 100”
தமிழ் திரையுலகின் முதல் பொதுஜன தொடர்பாளர் என்கிற பெருமைக்குரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பேசும் படம் தொடங்கியது முதல் அவர் மறையும் வரையிலான திரைப்பட புள்ளி விவரங்களை சேகரித்து தொகுத்து “சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு” என்கிற நூலினை தமிழக அரசின் உதவியுடன் வெளியிட்டார்.
தமிழ்த் திரையுலகின் தகவல் களஞ்சியமாக திகழும் அந்தப் புத்தகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு முக்கியமான நூலாகும்.
தமிழ் திரையுலைகில் வசனகர்த்தவாக, பாடல் ஆசிரியராக, திரைக்கதை ஆசிரியராக, தயாரிப்பாளராக சரித்திரம் படைத்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்.
அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ‘கலைஞர் 100’ என்கிற நூலாக மலர்ந்திருக்கிறது.
இந்த நூலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் டைமண்ட் பாபு நூலை பெற்றுக்கொண்டு, வாழ்த்து பெற்றார்.