தருணம் திரைப்பட விமர்சனம்.

Share the post

தருணம் திரைப்பட விமர்சனம்.

நடித்தவர்கள் : –‌

கிஷன் தாஸ்,ஸ்ம்ருதி வெங்கட் ,
ராஜ்அய்யப்பன், பால சரவணன்,கீதா
கைலாசம், ஸ்ரீஜா ரவி, விமல்,

தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : ஸென் ஸ்டுடியோஸ்

தயாரிப்பாளர்க: புகழ், ஈடன்

எழுத்து – இயக்கம் – அரவிந்த் ஸ்ரீநிவாசன்

ஒளிப்பதிவு : ராஜா பட்டாசார்ஜி

படத் தொகுப்பு : அருள் இ சித்தார்த்

பாடல்கள் : – தர்புகா சிவா

பின்னணி இசை : அஷ்வின் ஹேமந்த்

பாடலாசிரியர் :- மதன் கார்கி

கலை இயக்குனர் : வர்னாலயா ஜகதீசன்

சண்டை பயிற்ச்சி இயக்குனர் : டான் அசோக்

நடன இயக்குனர்: பாபி ஆண்டனி

உடை வடிவமைப்பாளர் : நேஹா ஸ்ரீஹரி

மக்கள் தொடர்பாளர் : எய்ம் சதிஷ், சிவா

மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியான கதாநாயகன் கிஷன் தாஸும், நாயகி ஷ்ம்ருதி வெங்கட்டும் நல்ல நட்பாக

பழக ஆரம்பித்து காதலிக்க தொடங்குகிறார்கள்.

அவர்களது பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து

வைக்க முடிவு செய்கிறார்கள். அதன்படி, சில தினங்களில் இவர்களது

நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கும் நிலையில், ஷ்ம்ருதி வெங்கட்டின் வீட்டுக்குள்

நுழையும் போது ராஜ் ஐயப்பா இருவரும் சண்டை நடந்தது அதுல அவள் தாக்குதலில் திடீரென்று அவன் இறந்து விடுகிறார். அந்த பிரச்சனையில்

இருந்து தனது வருங்கால மனைவியை காப்பாற்ற முயற்சிக்கும் கிஷன் தாஸ், யாருக்கும்

தெரியாமல் உடலை அப்புறப்படுத்த போது, ராஜ் ஐயப்பாவின் மரணம் தொடர்பாக

தங்கள் மீது யாருக்கும் எந்தவித சந்தேகமும்

ஏற்படாத ஒரு சூழ்நிலையை எற்படுத்த முடிவு செய்கிறார்.

கண்காணிப்பு கேமரா, காவலாளிகள், ஆள் நடமாட்டம் என பிஸியாகவே இருக்கும்

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ராஜ் ஐயப்பாவின் உடலை அப்புறப்படுத்தி,

கொலை வழக்கில் இருந்து கதாநாயகனும், நாயகியும் தப்பிக்கும் தருணங்களை

விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும்

சொல்வதே ’தருணம்’.திரைப்படகதைக்களம்

எதிர்பாரத விதத்தில் நடந்த ஒரு கொலை, அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது

கதாநாயகனின் புத்திசாலித்தில் ஆகியவற்றை வைத்துக்கொண்டு மிக

சுவாரஸ்யமான கதையில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை

கொடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன்.

கதாநாயகன் மற்றும் நாயகியின் அறிமுகம், அவர்களது சந்திப்பு, அவர்களுக்கு இடையே

ஏற்படும் நட்பு, மூலம் காதல் ஆகிய காட்சிகள் முதல் பாதியை

வழக்கமான படமாக நகர்த்திச் சென்றாலும், இரண்டாம் பாதியில்

கொலை குற்றத்தில் இருந்து தன்னை தப்பிப்பதற்கு கதாநாயகன் போடும் திட்டமும், அதை

செயல்படுத்தும் விதமும் படத்தை வேகமாக பயணிக்க‌ தொடங்கிறது.

பார்வையாளர்களை சீட்டில் அமர வைத்துவிடுகிறது.

கொலையை மறைப்பதற்கு குற்றவாளிகள்

வழக்கமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு,

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் கையாண்டிருக்கும்

புதிய யுக்தி படத்தை மற்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் இருந்து

முற்றிலும் வேறுபடுத்திவித்தியாசமாக காட்டியுள்ளார்,

அந்த மாதிரி யுக்தியைகையில்
எடுத்து எப்படி செயல்படுத்த முடியும்?

என்ற கேள்வியை பார்வையாளர்களிடம் எழுப்பி, அதற்கான

விடையை அறிந்துக்கொள்ளும் விதங்களில் ஆவலையும்

தூண்டிவிட்டு, கதைக்களத்துடன் ஒன்றிவிட செய்கிறார்.

தனது குற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது? என்ற பதற்றத்தையும்,

பயத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி

நடித்திருக்கும் நடிகை ஷ்ம்ருதி வெங்கட்

மற்றும் தெளிவான திட்டங்கள் மூலம் கொலையை எப்படி

தற்கொலையாக மாற்ற முயற்சிக்கும் கிஷன்

தாஸ், இருவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா, அவரது அம்மாவாக

நடித்திருக்கும் கீதா கைலாசம், நாயகனின் நண்பராக

நடித்திருக்கும் பாலசரவணன்

ஆகியோர் குறைவான காட்சிகள் வந்தாலும், படம் முழுவதும்

நிறைந்திருப்பது போல் திரைக்கதை வடிவமைக்கப்
பட்டுள்ளது.

பாடல்கள் தேவைப்படாத இடங்களில் கதைக்களம் என்றாலும் தர்புகா சிவா இசையமைத்த

பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. அஸ்வின் ஹேமந்தின்

பின்னணி இசை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கான உருட்டல்,

மிரட்டல் சத்தம் இல்லாமல் காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்

ஜானர்களுக்கு எற்ப பயன்படுத்தப்படும் வழக்கமான

வண்ணத்தை தவிர்த்துவிட்டு, காட்சிகளை இயல்பாக காட்சியை படமாக்கியிருக்கிறார்.

மிகவும் சவலான விஷயத்தை கதாநாயகன் சாமத்தியமாக

செய்வதை பார்வையாளர்களுக்கு புரியும்படியும், அவர்கள்

ஏற்றுக்கொள்ளும்படி
யும் காட்சிகளை தொகுத்திருக்கும்

படத்தொகுப்பாளர் அருள் இ.சித்தார்த்தின் பணி சிறப்பு.

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு என்று இருக்கும் வரைமுறையை

தவிர்த்துவிட்டு, வித்தியாசமான பாதையில் பயணித்திருக்கும்

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன், முதல் பாதியில் சில இடங்களில் பட்ஜெட் காரணமாக

தடுமாறியிருந்தாலும், இரண்டாம் பாதியில் தனது பலமான திரைக்கதை மற்றும்

யூகிக்க முடியாத திருப்பங்கள் மூலம் ரசிகர்களை

இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறார்.

ஒரே மாதிரியான கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை பார்த்து சோர்வான

ரசிகர்களுக்கு, அமைதியான கதைக்களமான

பின்னணியில், ஆச்சரியமான திரில்லர்

அனுபவத்தை இந்த ’தருணம்’ திரைப்படம்

நிச்சயம் வெற்றி தரும்.
‘தருணம்’ புதிய ஜானரில் வந்த திரில்லர் அனுபவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *