மதகஜராஜா திரைப்பட விமர்சனம்.
நடித்தவர்கள்:- விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார்,சோனுசூட், சந்தானம், மனோபாலா,
சாமிநாதன், ஆர்.சுந்தரராஜன், நான்
கடவுள் ராஜேந்திரன். மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் :-சுந்தர்.சி
மியூசிக் :- விஜய் ஆண்டனி.
தயாரிப்பாளர்கள் :- Gemini ஜெமினி பிலிம் சர்க்யூட்.
திருமணம் ஒன்றில் தன்னுடைய பள்ளி நண்பர்களை பார்க்க போக போது விஷாலுக்கு, அவர்கள்
எல்லாரும் பிரச்சனையில் மாட்டி கொள்ள விரக்தியில் இருப்பது, பணம், அரசியல்,
ஊடகம் ஆகிய மூன்றும் தன்வசம் வைத்துக்கொண்டு
மற்றவர்களை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய தொழிலதிபர் சோனு சூட தான்,
அதற்கு காரணம் என்பது தெரிய வருகிறது.
அவரிடம் சமாதானமாக பேசி நண்பர்களின் பிரச்சனைகளை
தீர்க்கும் வகையில் முயற்சியில் விஷால் ஈடுபடுகிறார். ஆனால்,
விஷாலை சின்ன பூச்சா நினைத்து தொழிலதிபர் அவமானம் படுத்த, அந்த
யானையை விஷால் எப்படி மோதினார், தனது நண்பர்களை
பிரச்சனைகளில் இருந்து காப்பாத்துகிறார், என்பதை காமெடி வெடி
மசாலா வெடி சவால் மோதல், ஆகிய மூன்றையும் சேர்ந்தது தான் ‘மத கஜ ராஜா’.
12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் விஷால் இளமையாக
இருப்பதால் மட்டும் இல்லாமல் அரசியல் மற்றும் பஞ்ச் டைலாக்
பேசாமல் இருப்பதால் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல் இருக்கிறது.
வயதுக்கு ஏற்ப கதாபாத்திரத்தில் காமெடி, காதல், என்று
எல்லாத்திலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் விஷால், தன்னை
முன்னிலைப் படம் முழுவதும் இரண்டு கதாநாயகியோடு
கதாநாயகனாக சேர்ந்து இருப்பது போல் திரையில் இருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.