பொங்கல் திரைத் திருவிழாதமிழ் திரை உலகிற்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கும் எப்போதும் ஓர் நெருங்கிய தொடர்பு உண்டு. பொங்கல் பண்டிகைக்கு தமிழர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு பொங்கல் திருநாளுக்கு வெளியாகும் திரைப்படங்களையும் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்று கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. MGR, சிவாஜி காலம் தொடங்கி தற்போது விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் வரை நடித்து வெளியான திரைப்படங்களின் வெற்றி அவற்றின் சிறப்பம்சம், மறக்கமுடியாத பாடல்கள் என சகல நிகழ்வுகளையும் திரைத் துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பங்கேற்று அலசும் ஓர் பிரம்மாண்ட விவாத இசை நிகழ்ச்சி “பொங்கல் திரைத் திருவிழா”. பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஜனவரி 14 மற்றும் 15 காலை 8.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ஆர்த்தி தொகுத்து வழங்குகிறார் .