SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Share the post

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா!!

“மெட்ராஸ்காரன்” திரைப்படம், பொங்கல் பண்டிகை வெளியீடாக, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது!!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம்.

இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

முன்னதாக இப்படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் சிங்கிள் பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று டிரெய்லரை வெளியிட்டனர்.

பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் B.ஜெகதீஷ் பேசியதாவது..
ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்குவது பத்திரிக்கையாளர்கள் தான், உங்களுக்கு நன்றி. டீசரை வெளியிட்டுத் தந்த எஸ் டி ஆருக்கும், டிரெய்லரை வெளியிட்டுத் தந்த விஜய் சேதுபதி அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக விடாமுயற்சி டீமுக்கும் அஜித் சாருக்கும் நன்றி. அவர்களால் தான் இந்தப்படம் பொங்கலுக்கு வருகிறது. இந்தப்படத்தை ஆரம்பித்த போது பொங்கல் மாதிரி பண்டிகையில் வெளியிட வேண்டும் என நினைத்தோம், அது நடந்துள்ளது. இது பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற படம். காதல், ஆக்சன் என எல்லாம் அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. இந்தப்படத்தோடு பத்து படங்கள் பொங்கலுக்கு வருகிறது. வரட்டும் கண்டிப்பாக மெட்ராஸ்காரன் உங்களுக்குப் பிடிக்கும். என்னுடன் என் டீம் துணை நிற்பார்கள். அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் வசந்த் பேசியதாவது…
மெட்ராஸ்காரன் என் முதல் படம், இந்த வாய்பைத் தந்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
இந்த திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருகிறது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…
இறுதியாக ஜனவரி 10 ஆம் தேதி மெட்ராஸ்காரன் திரைப்படம் பொங்கலுக்கு வருகிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். அவர் மிகச்சிறந்த தயாரிப்பாளர், மிகச் சிறந்த மனிதர். திரைத்துறைக்குத் தேவையான தயாரிப்பாளர். இந்த திரைப்படத்திற்கு, எத்தனை தடைகள் வந்தாலும், விட்டுவிடாமல் தயாரித்துள்ளார். எனக்கு இந்த திரைப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படத்தில் மிக நல்ல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா, வாழ்த்துக்கள். நிஹாரிகாவுக்கும் வாழ்த்துக்கள். கலையரசன் மிகச் சிறந்த கோ ஸ்டார், அவருக்கும் வாழ்த்துக்கள். ஜனவரி இந்த பொங்கலுக்கு மெட்ராஸ்காரன் படத்தைப் பார்த்து எல்லோரும் ஆதரவு தாருங்கள். இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும். அனைவருக்கும் நன்றி.

நடிகை நிஹாரிகா பேசியதாவது…
எங்களது திரைப்படம் இறுதியாக இந்தப் பொங்கலுக்கு வெளியாகிறது. நான் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும், முதலில் தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு நன்றி. அவர் பல தடைகளைத் தாண்டி, இந்த திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு தயாரிப்பாளராக, ஒரு படத்தைத் தயாரிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது, எனக்கு தெரியும். இந்த நிலைக்கு இந்த படத்தைக் கொண்டு வந்ததே வெற்றியின் முதல் படி தான். ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறீர்கள். இதில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் தங்களது முழு உழைப்பைத் தந்திருக்கிறார்கள். எடிட்டர் வசந்த் மிக அட்டகாசமாகப் படத்தைத் தொகுத்து இருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சி எஸ், உங்களின் மிகத் தீவிர ரசிகை நான், மிக அற்புதமான இசையைத் தந்து இருக்கிறீர்கள். காதல் சடுகுடு பாட்டைத் தந்த சரிகமா நிறுவனத்திற்கு நன்றி. என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் வாலி மோகன்தாஸ், இந்த படத்தில் இந்த கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. மெட்ராஸ்காரன் திரைப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும், உங்களை மகிழ்விக்கும். இப்படத்தில் கலையரசன் , ஷேன் நிகம் இருவருக்கும் கொடுக்கும் அன்பை, எனக்கும் தாருங்கள். அனைவருக்கும் நன்றி.

நடிகர் கலையரசன் பேசியதாவது…
மெட்ராஸ் என் சொந்த ஊர், எப்போதுமே எனக்கு மெட்ராஸ் பிடிக்கும். மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் ஒரு பங்காக நானும் இருப்பது,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *