
ஜி ராம் நடித்து இயக்கி உள்ள
காமெடி கலாட்டா படம்தான்
” பாணிபூரி பிரேம்”
கடந்த வருடம். ” சித்தரிக்கப்பட்டவை” என்ற வித்தியாசயான கதையில் நடித்த ஜி ராம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள படம்தான் ” பாணிபூரி பிரேம்”
ஜி ராம் படத்தைப் பற்றி கூறியதாவது , “
கடந்த வருடம். ” சித்தரிக்கப்பட்டவை” என்ற படத்தில் நடித்தேன்.
” பாணி பூரி பிரேம் ” படத்தின் கதையை ஒரு வருடமாக ரெடி பண்ணினேன். மக்களுக்கான ஜனரஞ்சகமான படமாக உருவாக்கி இருக்கிறேன்.
“வட நாட்டிலிருந்து ஒரு இளைஞன் வேலை தேடி தமிழ்நாட்டுக்கு வருகிறான். இங்கு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு தன் தாயின் அன்பும் அரவணைப்பும் போல் தமிழ்நாட்டிலும் அன்பும், அரவணைப்பும் அவனுக்கு கிடைக்கிறது. ஒரு சூழ்நிலையில் அவனுக்கு அந்த அன்பின் பின்னால் பிரச்சனைகள் உருவாகிறது. அந்த அன்பையும் அரவணைப்பையும் பேணிக்காக்க அவன் ஒரு முடிவெடுக்கிறான்
இதை கலகலவென கலக்கலான காமெடியுடன் சுவாரசியமான திரைக்கதையில் நகரும் போது, காதலுடன் ஒரு பிரச்சனையும் அவனுக்கு வருகிறது. அதை தீர்த்து வைக்க அவன் எடுக்கும் அதிர்ச்சியான முடிவுதான் ” பாணி பூரி பிரேம்” படத்தின் கதை. இதில் முக்கியமான காட்சிகளில் மாபெரும் “ஹிட்”டான பாடல்களால் பதில் வருமாறு புதுமையான திரைக்கதையாக வடிவமைத்துள்ளேன். நிச்சயம் மக்கள் ரசித்து கைதட்டல் கொடுப்பாங்க என்கிற நம்பிக்கையில் இந்தப் படத்தோட கதை, திரைக்கதை வசனம் எழுதி கதையின் நாயகனாக நடிச்சு டைரக்ட் பண்ணி இருக்கிறேன் ” என்று கூறினார்.
இதில் ஜி ராம், பிரியங்கா. ஜெயஸ்ரீ, ஜெயா, சர்மிளா. கெளசி, ஜெயபால், அப்பன்ராஜ், ராம்லால், தூண்டி கருப்பன், பாண்டி, சுரேஷ், சரவணன், சுகுமார், குருமூர்த்தி, தேசிகன், மதன் பாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மணி அஜித் மூர்த்தி ஒளிப்பதிவையும், ரவி எடிட்டிங்கையும், துபாய் தியாகு இசையையும், ராஜா சண்டை பயிற்சியையும், கலையரசன் நடன பயிற்சியையும், சண்முகம் தயாரிப்பு மேற்பார்வையையும், ஏற்று செய்துள்ளார்கள்.
மகாமூவி மேக்கர்ஸ் என்ற தமது நிறுவனம் சார்பில் என். விஜயமுரளி தயாரித்துள்ளார்.
கதை , திரைக்கதை , வசனம் எழுதி நாயகனாக நடித்து தமது இரண்டாவது படமாக ஜி ராம் இயக்கி உள்ளார்.
விஜயமுரளி
PRO