இருக்கை நுனியில் அமரவைகும் சைக்கோ த்ரில்லர் படம் ‘இரவின் விழிகள்’
தேசிய விருது பெற்ற நடிகை நீமா ரே கதாநாயகியாக நடிக்கும் ‘இரவின் விழிகள்’ !!
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரா தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’.
இரவின் விழிகள் என்ற இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார்.
மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர்.
மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. ஒருவன் சைக்கோ ஆவதற்கு அவனுக்கென தனிப்பட்ட சொந்த ஒரு காரணம் இருக்கும்.
இங்கே அப்படி ஒருவன் சைக்கோ ஆவதற்கு இந்த சமுதாயத்தின் மீதான ஒரு கோபமும் ஒரு பொது விஷயமும் காரணமாக இருக்கிறது. அது என்ன என்கிற வித்தியாசமான கதை அம்சத்துடன் இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக ‘இரவின் விழிகள்’ படம் தயாராகி வருகிறது
இந்த படத்திற்கு ஏஎம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர் ராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர்.
இரவின் விழிகள் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான படப்பிடிப்பு ஏற்காடு அருகில் உள்ள வெள்ளிமலை பகுதியில் நடைபெற்றுள்ளது. மேலும் பாண்டிச்சேரி, மரக்காணம் அதை சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் திருப்பூரிலும் இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெற்றுள்ளது.
தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.