சோனி பிபிசி எர்த்தின் மிகவும் சுவாரஸ்யமான டிசம்பர் மாதத்தில் பண்டைய ரோமில் இருந்து இதுவரை அறியப்படாத காட்டுப்பகுதி வரை ஒளிபரப்பப்படுகிறது
சென்னை: மிகவும் விரும்பப்படும் உண்மை பொழுதுபோக்கு சேனல்களில் ஒன்றான சோனி பிபிசி எர்த், இந்த ஆண்டு முடிவடையும் இத்தருணத்தில், மூன்று அற்புதமான புதிய நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகிறது. பழைய ரோமானியப் பேரரசின் சிறப்பு முதல் பரந்த வனப்பகுதிகள், மற்றும் உலகின் மிகவும் ஆபத்தான சாலைகள் வரை, பார்வையாளர்கள் மறக்கமுடியாத பயணங்களைத் தொடங்கலாம். இந்த நிகழ்சிகளில் பல்வேறு வகையான உள்ளடக்கங்கள் உள்ளன, இது அனைத்து சாகச ஆர்வலர்களுக்கும் ஏற்றதாக அமைகிறது.
இந்த மிகவும் சுவாரஸ்யமான வரிசையானது 2024 டிசம்பர் 2 அன்று “ஜூலியஸ் சீசர்: தி மேக்கிங் ஆஃப் எ டிக்டேட்டர்”, ஒளிப்பரப்புடன் தொடங்குகிறது. மேற்கத்திய வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவரின் வாழ்க்கைக் கதையின் மூலம் இந்தத் தொடர் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. அவரது இராணுவப் பயணங்கள் மற்றும் அரசியல் மேதைகளில் இருந்து அவரது போராட்டங்கள் வரை பயணம் செய்வது, ரோமானிய பண்பாடு மற்றும் மரபுகளின் மிகவும் சுவாரஸ்யமான ஆய்வை வழங்குகிறது.
2024 டிசம்பர் 16 முதல், சோனி பிபிசி எர்த்தின் “ஸ்டோரிஸ் ஃப்ரம் தி வைல்ட்” தொடர், விலங்கு இராச்சியத்தின் கலப்படமற்ற நாடகத்தைக் கண்டு மகிழ பார்வையாளர்களை அழைக்கிறது. “ஹிடன் இண்டியா” மற்றும் “கேஞ்சஸ்” போன்ற நிகழ்ச்சிகளுடன், இந்தத் தொடர் ‘ஸ்டோரிஸ் ஃப்ரம் இண்டியா’ என்ற சிறப்பு வரிசையின் ஒரு பகுதியாக இருக்கும். ஸ்டோரீஸ் ஃப்ரம் தி வைல்ட்–இல் போட்டி, அதிகாரப் போராட்டங்கள், மற்றும் உயிர்வாழ்வதற்கான நுணுக்கங்களை பற்றிய ஆழ்ந்த ஆய்வை பார்வையாளர்களுக்கு வழங்கும். இயற்கையில் வசிப்பவை தொடர்ந்து மாறிவரும் சூழலில் எவ்வாறு உயிர்வாழ்வதற்காக போராடுகின்றன என்பதை இந்த இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது, இது விலங்கு இராச்சியத்திற்கும் மனித சமூகத்திற்கும் இடையிலான பலத்த ஒற்றுமைகளை எடுத்துக்காட்டுகிறது.
சோனி பிபிசி எர்த் டிசம்பர் 30ஆம் தேதி முதல் “வோர்ல்ட்ஸ் மோஸ்ட் டேஞ்சரஸ் ரோட்ஸின்” பல சீசன்களை அறிமுகப்படுத்துகிறது, இது ஒரு அற்புதமான சாகசத்துடன் இம்மாதத்தை துவக்குகிறது. சூ பெர்கின்ஸ், ரோட் கில்பர்ட், ஹக் டென்னிஸ் போன்ற பிரபலமான நபர்கள் உலகின் மிகவும் ஆபத்தான நெடுஞ்சாலைகளில் பயணிப்பதை இத்தொடர் பின்தொடர்கிறது. கடினமான கலாச்சார அமைப்புகளிலிருந்து கடுமையான வானிலை மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு வரையிலான இந்த கடினமான பயணங்களை மேற்கொள்ளும் துணிச்சலான சாகசக்காரர்களை இது முன்னிலைப்படுத்துகிறது.
இந்த மிகுந்த சுவாரஸ்யமான பிரீமியர்களுடன், சோனி பிபிசி எர்த்தில் டிசம்பர் மாதம், உலகின் அழகு, மர்மம் மற்றும் அதிசயத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடும், ஆய்வு மற்றும் சாகசத்தின் சீசனுக்கு உறுதியளிக்கிறது.
டிசம்பர் 2, 16, 30 ஆகிய தேதிகளில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00 மணிக்கு, ஜூலியஸ் சீசர்: தி மேக்கிங் ஆஃப் எ டிக்டேட்டர், ஸ்டோரீஸ் ஃப்ரம் தி வைல்ட் மற்றும் “வோர்ல்ட்ஸ் மோஸ்ட் டேஞ்சரஸ் ரோட்ஸின்” ஆகியவற்றின் முதல் காட்சிகளைத் தவறவிடாதீர்கள்.