சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக் !

Share the post

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் திரையில் லவ் மேஜிக் நிகழ்த்தும் இளம் காதலர்களான ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் ஆகியோரின் இளமை துள்ளலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ‘மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183வது இசை ஆல்பம் ‘ஸ்வீட் ஹார்ட்’ என்பதால்.. இப்படத்தின் பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *