பராரி திரை விமர்சனம்!!
இயக்குநர் ராஜூ முருகன் வழங்க, எழில் பெரியவேடி இயக்கத்தில் ஹரி சங்கர், சங்கீதா கல்யாண், குரு, ராஜேந்திரன், மகேந்திரன், ப்ரேம்நாத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பராரி.
இப்படத்தினை, கலா பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் சார்பில் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜபாளையம் கிராமத்தில் நாடாகும் திரைக்கதை அமைத்துள்ளது . ராஜபாளையம் கிராமத்தில் ஒருபுறம் ஆதிக்க சாதியினரும், மறுபுறம் பட்டியல் இனத்தவரும் வாழ்கின்றனர்.பள்ளி பருவத்தில் இருந்து நாயகி சங்கீதா ஒருதலையாக காதலிக்கிறார் நாயகி உயந்த சாதி சேர்ந்தவள் ,நாயகன் ஹரி சங்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக நடித்துள்ளார் ,இதில் ஹீரோ ஹரி சங்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக வருகிறார். தன் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்த சூழலில், ஹரி சங்கரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர் சாலையின் அந்த பக்கம் இருக்கும் சாதியினர். அதற்காக நாள் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஜூஸ் பேக்டரிக்கு வேலைக்குச் செல்கின்றனர் இரு சாதியினை சார்ந்த மக்களும் 3 மாத பணிக்காக செல்கின்றனர்.
அங்கு வைத்து ஹரி சங்கரை கொலை செய்ய நினைக்கின்றனர். அதேசமயம், அந்த பேக்டரியில் கன்னட வெறியர்கள் சிலர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு தமிழர்களை கண்டாலே கோபமடைகின்றனர்.
பராரி காதல் மலர்தத ,கன்னட வெறியர்களிடம் சிக்கிய தமிழர்கள் எப்படி தப்பித்தார்கள் போன்ற கேள்விக்கு பதில் பராரி படத்தின் மீதிக் கதைTags: திரை விமர்சனம்